SaraNextGen.Com

Chapter 2.1 - Katu - Chapter 2 Term 1 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.1 காடு

Question 1.
காடு என்னும் தலைப்பில் அமைந்த கிளிக்கண்ணி’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
Answer:
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பித்தலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ ! – கிளியே
நாளில் மறப்பாரடீ. ……….- பாரதியார்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழை, கன்றை ………………….
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
Answer:
அ) ஈன்றது

Question 2.
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
Answer:
ஆ) காடு + எல்லாம்

Question 3.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
Answer:
ஆ) கிழங்கெடுக்கும்

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

குறு வினா

Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.

Question 2.
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answer:

  1. காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
  2. காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  3. எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  4. காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.

சிறு வினா

Question 1.
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
  2. நரிக் கூட்டம் ஊளையிடும்.
  3. மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  4. இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

சிந்தனை வினா

Question 1.
காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
Answer:
(i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

(ii) மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 2.
உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 3.
தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்
அ) பாரதியார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
இ) சுரதா

Question 4.
கார்த்திகை விளக்குகள் போன்று இருந்தவை
அ) காடு
ஆ) மலர்கள்
இ) காய்கனி
ஈ) மயில்
Answer:
ஆ) மலர்கள்

Question 5.
பொருத்துக.
1. அதிமதுரம் – அ) மகிழ்ந்திட
2. களித்திட – ஆ) மிகுந்த சுவை
3. கொம்பு – இ) பெற்று
4. ஈன்று – ஈ) கிளை

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 6.
பொருத்துக.
1. மயில்கள் – அ) கிழங்குகளைத் தோண்டி உண்ணும்
2. பன்றிகள் – ஆ) கலக்கமடையும்
3. பாம்புகள் – இ) புதிய நடை போடும்
4. யானைகள் – ஈ) நடனமாடும்

அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
…………………. குயில் கூவுமடி! பாடலடியில் இடம்பெறும் தகுந்த சொல்லால் நிரப்புக.
அ) கருங்
ஆ) பூங்
இ) மணிக்
ஈ) சிறு
Answer:
ஆ) பூங்

Question 8.
புதுநடை போட்டது எது?
அ) பாம்பு
ஆ) பன்றி
இ) குரங்கு
ஈ) யானை
Answer:
ஈ) யானை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ………………, ………………… நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை.
2. உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் …………………
3. காடு என்னும் கவிதை அமைந்த நூல் …………………
4. சுரதாவின் கவிதைகள் என்ற நூலில் காடு என்னும் கவிதை அமைந்த பகுதி ……………..
5. காடு என்ற கவிதை அமைந்த பாவகை ……………………
6. நரிக்கூட்டம் ……………..
Answer:
1. காடும் கடலும் .
2. சுரதா
3. சுரதாவின் கவிதைகள்
4. இயற்கை எழில்
5. கிளிக்கண்ணி
6. ஊளையிடும்

குறு வினா

Question 1.
சுரதா என்பதன் பெயர்க்காரணம் யாது?
Answer:
இராசகோபாலன் பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் எனமாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

Question 2.
கவிஞர் சுரதாவை ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
உவமைகளைப் பயன்படுத்தி கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதால் சுரதா ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

Question 3.
சுரதாவின் படைப்புகள் யாவை?
Answer:

  1. தேன்மழை
  2. துறைமுகம்
  3. அமுதும் தேனும்

Question 4.
கிளிக்கண்ணி என்னும் பாவகை குறித்து எழுதுக.
Answer:
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் கிளிக்கண்ணி ஆகும்.

Question 5.
‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ எனக் அறிஞர் கூறக் காரணம் யாது?
Answer:
ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது. அதனால் தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என அறிஞர் கூறுகின்றனர்.

Question 6.
‘காடு’ பாடலில் பறவைகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  1. பச்சை நிறமுடைய மயில்கள் நடனமாடும்.
  2. பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும்.

Question 7.
இயற்கைத் தங்குமிடம் எது?
Answer:
இயற்கைத் தங்குமிடம் : காடு

Question 8.
எங்கும் திரியுமடீ! – இதில் ‘திரிந்தவை’ எவை?
Answer:
சிங்கம், புலி, கரடி, சிறுத்தை .

சிறு வினா

Question 1.
சுரதா – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : இராசகோபாலன்
பிறப்பு : 23.11.1921
சிறப்புப்பெயர் : உவமைக்கவிஞர்
சுரதா – பெயர்க் காரணம் : பாரதிதாசன் மீது பற்றுக்கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ‘சுரதா’ என்பதாகும்.
படைப்புகள் : 1. தேன்மழை 2. துறைமுகம் 3.அமுதும் தேனும் முதலியன.

Question 2.
‘காடு’ என்னும் கவிதையில் இடம் பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. குரங்கு
2. கிளி
3. மயில்
4. பன்றி
5. பாம்பு
6. நரி
7. யானை
8. குயில்
9. சிங்கம்
10. புலி
11.கரடி
12. சிறுத்தை

Question 3.
காட்டைக் குறிக்கும் வேறுபெயர்கள் யாவை?
Answer:
கா, கால், கான், கானகம், அடவி, அரண், புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

Question 4.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

சொல்லும் பொருளும்

ஈன்று – பெற்று
கொம்பு – கிளை
அதிமதுரம் – மிகுந்த சுவை
களித்திட – மகிழ்ந்திட
நச்சரவம் – விடமுள்ள பாம்பு
விடுதி – தங்கும் இடம்
தீபம் – ஒளி

Also Read : Chapter-2.2----Appatiye-nirkattum-anta-maram-Chapter-2-Term-1-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen