SaraNextGen.Com

Chapter 4.1 - Kalankarai vilakkam - Chapter 4 Term 2 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.1 கலங்கரை விளக்கம்

Question 1.
கடற்கரைக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:
கடற்கரை காட்சிகள் (மெரினா)

  1. உலகிலேய இரண்டாவது பெரிய கடற்கரை மெரினாக் கடற்கரை.
  2. சென்னைத் துறைமுகத்தை உள்நாட்டு, வெளிநாட்டுக் கப்பல்கள் அணிவகுத்து வருகின்றன.
  3. அவை நங்கூரம் பாய்ச்சி நிற்கும் அழகு அருமை.
  4. மீன்பிடிக்கச் சென்று மீண்டு வரும் மீனவர்கள் படகுகள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.
  5. காலை நோக்கி வரும் கடல் அலைகள் பிடிக்கமுடியாத மாயமான்கள்.
  6. கடலைக் கண்டு மகிழ மக்கள் கூட்டம் ஏராளம்.
  7. சங்குகளும், சிப்பிகளும் கடற்கரையில் கொட்டிக்கிடக்கின்றது.

Question 2.
‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.
Answer:
மாணவர் செயல்பாடு

Question 3.
கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.
Answer:

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேயா மாடம் எனப்படுவது ………………..
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
Answer:
ஆ) சாந்தினால் பூசப்படுவது

Question 2.
உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
Answer:
இ) கடல்

Question 3.
கடலில் துறை அறியாமல் கலங்குவன ………………..
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
Answer:
ஆ) மரக்கலங்கள்

Question 4.
தூண் என்னும் பொருள் தரும் சொல் ……………….
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
Answer:
ஈ) மதலை

குறு வினா

Question 1.
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
Answer:
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது : கலங்கரை விளக்கின் ஒளி.

Question 2.
கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
Answer:
கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

சிறு வினா

Question 1.
கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?
Answer:
(i) கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கின்றது.

(ii) அது ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.

(iii) வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.

(iv) அம் மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.

சிந்தனை வினா

Question 1.
கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:

  1. கடல் ஆய்வு செய்பவர்கள்
  2. மீனவர்கள்
  3. கப்பற் படை வீரர்கள்
  4. கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

கூடுதல் வினா

Question 1.
பெசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஆ) தொண்டைமான் இளந்திரையன்
இ) முடதாமக்கண்ணியார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

Question 2.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்
அ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஆ) தொண்டைமான் இளந்திரையன்
இ) முடதாமக்கண்ணியார்
ஈ) நக்கீரர்
Answer:
ஆ) தொண்டைமான் இளந்திரையன்

Question 3.
உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்
அ) கடியலூர்
ஆ) மதுரை
இ) புகார்
ஈ) கலங்கரைவிளக்கம்
Answer:
அ) கடியலூர்

Question 4.
கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைப்பது
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரை விளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரை விளக்கம்

Question 5.
கடலில் துறை அறியாமல் கலங்குவது
அ) கடற்கரை
ஆ) மரக்கலங்கள்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
ஆ) மரக்கலங்கள்

Question 6.
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம்
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரைவிளக்கம்

Question 7.
வானம் ஊன்றிய மதலை போன்றது
அ) கடற்கரை
ஆ) கப்பல்
இ) கலங்கரைவிளக்கம்
ஈ) மாடம்
Answer:
இ) கலங்கரைவிளக்கம்

குறு வினா

Question 1.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  1. சங்ககாலப் புலவர்
  2. கடியலூரில் வாழ்ந்தவர்.
  3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

Question 2.
பெரும்பாணாற்றுப்படை பற்றி நீவிர் அறிவன் யாவை?
Answer:

  1. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று : பெரும்பாணாற்றுப்படை
  2. இயற்றியவர் : கடியலூர் உருத்திரங்கண்ண னார்.
  3. இந்நூல் ஆற்றுப்படை இலக்கியம் சார்ந்தது.
  4. பாட்டுடைத்தலைவன் : தொண்டைமான் இளந்திரையன்

Question 3.
ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?
Answer:
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுசது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

Question 4.
‘வேயா மாடம்’ தொடர் பொருள் கூறுக.
Answer:
வேயா மாடம் : வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்.

Question 5.
ஞெகிழி , அழுவம் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
ஞெகிழி – தீச்சுடர், அழுவம் – கடல்

சிறு வினா

Question 1.
பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
Answer:

  1. திருமுருகாற்றுப்படை
  2. மதுரைக்காஞ்சி
  3. பொருநராற்றுப்படை
  4. நெடுநல்வாடை
  5. பெரும்பாணாற்றுப்படை
  6. குறிஞ்சிப்பாட்டு
  7. சிறுபாணாற்றுப்படை
  8. பட்டினப்பாலை
  9. முல்லைப்பாட்டு
  10. மலைபடுகடாம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்:

  1. சங்ககாலப் புலவர்
  2. கடியலூரில் வாழ்ந்தவர்.
  3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

சொல்லும் பொருளும்

1. மதலை – தூண்
2. நெகிழி – தீச்சுடர்
3. அழுவம் – கடல்
4. சென்னி – உச்சி
5. உரவுநீர் – பெரு நீர்ப்பரப்பு
6. கரையும் – அழைக்கும்
7. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாக (வலிமையாக) சாந்து பூசப்பட்ட மாடம்.

Also Read : Chapter-4.2---Kavinmiku-kappal-Chapter-4-Term-2-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen