SaraNextGen.Com

Chapter 5.5 - Oreluttu orumoli, pakupatam, pakappatam - Chapter 5 Term 2 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

 

Question 1.
பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க.
Answer:

Question 2.
உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம் , பகாப்பதம் என வகைப்படுத்துக.
Answer:

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ………………
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer:
ஆ) 42

Question 2.
‘எழுதினான்’ என்பது ………………….
அ) பெயர்ப் பகுபதம்
ஆ) வினைப்பகுபதம்
இ) பெயர்ப் பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
Answer:
ஆ) வினைப்பகுபதம்

Question 3.
பெயர்ப் பகுபதம் ………………… வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
இ) ஆறு

Question 4.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு. ……………..
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சந்தி
Answer:
இ) இடைநிலை

பொருத்துக

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப்பகுபதம் – மன்
3. பெயர்ப் பகாப்பதம் – நனி
4. வினைப் பகாப்பதம் – பெரியார்

1. பெயர்ப் பகுபதம் – பெரியார்
2. வினைப்பகுபதம் – வாழ்ந்தான்
3. இடைப் பகாப்பதம் – மன்
4. உரிப் பகாப்பதம் – நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

குறு வினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். எ.கா. பூ

Question 2.
பதத்தின் இருவகைகள் யாவை?
Answer:
பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும்.

Question 3.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
Answer:
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவையாவன : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

சிறு வினா

Question 1.
விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:

  1. திணை
  2. பால்
  3. முற்று
  4. எச்சம்

Question 2.
விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் +அன் +அன்
வா – பகுதி, இது ‘வ’ எனக் குறுகி இருப்பது விகாரம்.
த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்.
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Question 3.
பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:
1. பெயர்பெயர்ப்பகுபதம்
2. இடப்பெயர்ப்பகுபதம்
3. காலப்பெயர்ப்பகுபதம்
4. சினைப்பெயர்ப்பகுபதம்
5. பண்புப்பெயர்ப்பகுபதம்
6. தொழில் பெயர்ப்பகுபதம்

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

கல்வியின் சிறப்பு

வணக்கம். கல்வியின் சிறப்பு பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். இளமையில் கல், கேடில் விழுச்செல்வம் கல்வி, கல்விக் கரையில், கற்பவர் நாள் சில, கற்க கசடற, ஓதுவது ஒழியேல் ஆகியன கல்வியின் அவசியத்தைக் கூறும் பாடல் வரிகளாகும். மனிதனை வேறுபடுத்துவது அவன் கற்ற கல்வியால் தான். பொருளை இழந்தால் சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை இழந்தால் மீண்டும் கற்க இயலாது.

அதனால் தான் பருவத்தே பயிர் செய் என்றனர். கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்?

வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும் .நன்றி.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு

வணக்கம். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி என்னுடைய கருத்துகளை சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் வேலைக்குச் செல்வதைக் கண்டால் மனம் வேதனை அடைகின்றது. இளமையில் கல் என்ற ஒளவையின் வாக்கு என்னவானது.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குச் சிறுவயதில் இரத்தசோகை, இளைப்பு, காச நோய் ஆகியன ஏற்படும். படிக்கும் வயதில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடை முறையில் செயல்படுத்த நாம் போராட வேண்டும். நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.

1. இளமைப் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும்.
2. கல்வியே அழியாத செல்வம்.
3. கல்வி இல்லாத நாடு விளக்கு இல்லாத வீடு.
4. பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்.
5. நூல்களை ஆராய்ந்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களை வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை , பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம்
இடம் 3 வகைப்படும். அவை.
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை

Question 1.
தன்னைக் குறிப்பது தன்மை.
Answer:
சான்று : நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

Question 2.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
Answer:
சான்று : நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம்
இடம் 3 வகைப்படும். அவை.
1. தன்மை
2. முன்னிலை
3. படர்க்கை

Question 1.
தன்னைக் குறிப்பது தன்மை.
Answer:
சான்று : நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

Question 2.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
Answer:
சான்று : நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

கடிதம் எழுதுக.

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்

அனுப்புநர்
ச.முகிலன்,
பாரதிநகர்,
ஈரோடு.

பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை . அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பல.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள,
ச.முகிலன்.

நாள் : 03.5.2019
இடம் : ஈரோடு.

உறைமேல் முகவரி
பெறுநர்
ஆணையர் அவர்கள்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.

மொழியோடு விளையாடு

1. காலையில் பள்ளி மணி ……………..
2. திரைப்படங்களில் விலங்குகள் ……………….. காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
3. கதிரவன் காலையில் கிழக்கே …………………
4. நாள்தோறும் செய்தித்தாள் ……………… வழக்கம் இருக்க வேண்டும்.
Answer:
1. ஒலிக்கும்
2. நடிக்கும்
3. உதிக்கும்
4. வாசிக்கும்

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. ……………. புல் மேயும்.
2. …………..சுடும்.
3. ……………பேசும்.
4. …………. பறக்கும்.
5. …………. மணம் வீசும்.
Answer:
1. ஆ
2. தீ
3. கை
4. ஈ
5. பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

(எ.கா) தா – கொடு
1. தீ ……………….
2. பா …………..
3. கை ……………..
4. வை ……………
5. மை ……………
Answer:
1. நெருப்பு
2. பாடல்
3. தைத்தல்
4. புல்
5. அஞ்சனம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.)ஆறு – ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.

1. விளக்கு – பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.

2. படி – வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.

3. சொல் – மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது.

4. கல் – காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.

5. மாலை – மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.

6. இடி – இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

நிற்க அதற்குத் தக……

கலைச்சொல் அறிவோம்

1. கோடை விடுமுறை – Summer vacation
2. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
3. பட்டம் – Degree
4. கல்வியறிவு – Literacy
5. நீதி – Morall
6. சீருடை – Uniform
7. வழிகாட்டுதல் – Guidence
8. ஒழுக்க ம் – Dicipline

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer:
ஆ) இரண்டு

Question 2.
பசு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
அ) ஆ

Question 3.
கொடு என்னும் பொருள் தரும் சொல் ………………
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஆ) ஈ

Question 4.
இறைச்சி என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
இ) ஊ

Question 5.
அம்பு என்னும் பொருள் தரும் சொல் …………..
அ) ஆ
ஆ) ஈ
இ) ஊ
ஈ) ஏ
Answer:
ஈ) ஏ

Question 6.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள நெடில்சொற்களின் எண்ணிக்கை
அ) 42
ஆ) 40
இ) 43
ஈ) 2
Answer:
ஆ) 40

Question 7.
நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் ………………..
அ) பவணந்தி முனிவர்
ஆ) ஆறுமுக நாவலர்
இ) தொல்காப்பியர்
ஈ) அகத்தியர்
Answer:
அ) பவணந்தி முனிவர்

Question 8.
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ………………
அ) 6
ஆ) 2
இ) 5
ஈ) 42
Answer:
அ) 6

Question 9.
பகாப் பதத்தின் வகை ……………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) ஐந்து
Answer:
ஆ) நான்கு

பொருத்துக.

1. ஐ – சோலை
2.கா – இகழ்ச்சி
3. கூ – பூமி
4. சீ – தலைவன்
Answer:
1. ஐ – தலைவன்
2. கா – சோலை
3. கூ – பூமி
4. சீ – இகழ்ச்சி

குறுவினா

Question 1.
ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை யாது? அவை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
நொ, து ஆகிய இரண்டும் ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்கள் ஆகும்.
உணர்த்தும் பொருள் :

  1. நொ – நோய்
  2. து – உண்

Question 2.
பகுபதங்கள் என்றால் என்ன?
Answer:
சிறு சிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும்.

Question 3.
வினைப்பகுபதம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
சான்று : உண்கின்றான் – உண் + கின்று + ஆன்

Question 4.
சந்தி என்பது யாது?
Answer:
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி ஆகும்.

Question 5.
சாரியை என்பது யாது?
Answer:
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை ஆகும்.

சிறு வினா

Question 1.
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

1. பெயர்ச்சொல்

2. வினைச்சொல்

3. இடைச்சொல்

4. உரிச்சொல்

Also Read : Chapter-6.1----Oru-ventukol-Chapter-6-Term-2-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen