SaraNextGen.Com

Chapter 6.4 - Tamil olir itankal - Chapter 6 Term 2 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Question 1.
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
Answer:
எங்கள் ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகம், தொல்லாய்வுக் கூடம், பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, மிகப்பெரிய ஜவுளிச் சந்தை ஆகியவை உள்ளன. தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அனைத்துப்பொருட்களும் நூல்களும் புகைப்படங்களும் நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழமையைப் பறைசாற்றும் கல்வெட்டுகள், தொல்பொருட்கள் பாதுகாப்பிடமாக வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள தொல்லாய்வுக் கூடத்தில் உள்ளன. பழமைமிக்க நீர்த்தேக்கம் பவானிசாகர்.

Question 2.
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
Answer:
நான் கண்டுகளித்த இடம் குற்றாலம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று, மூலிகைகளின் அருங்குணங்களை இழுத்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும். தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.

மதிப்பீட்டு

Question 1.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால். சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Answer:
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இது தான். இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் இது. கி.பி.1122 ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் இயங்கி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.

.வே.சா. நூலகம்
இது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

வள்ளுவர் கோட்டம்
இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.

பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
இது அதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடமபெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Also Read : Chapter-6.5---Tolirpeyar-Chapter-6-Term-2-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen