SaraNextGen.Com

Chapter 7.4 - Tirunelvelic cimaiyum kavikalum - Chapter 7 Term 3 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Question 1.
உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வாழ்க்கை

“பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மைச்
சுமக்க தொடங்குகிறார்கள்”.
– மு. மேத்தா

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எட்டையபுரம்:
கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்

பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்தே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர், அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

சீவைகுண்டம்கொற்கை:
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.

கருவை நல்லூர்:
சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர், இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

குற்றாலம்:
கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்த்து அமைந்திருப்பதைப்பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி, அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.

முடிவுரை:
தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறியமுடிகின்றது.

Also Read : Chapter-7.5---Ani-ilakkanam-Chapter-7-Term-3-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen