SaraNextGen.Com

Chapter 2.1 - Otai - Chapter 2 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 1.
மலை, அருவி, ஓடை, மரங்கள். வயல்கள் இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்

Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை

Question 3.
‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்

Question 4.
‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + உழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு

Question 5.
சீருக்கு +ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப

Question 6.
ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட

குறுவினா

Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
(ii) அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
(iii) கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
(iv) குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
(v) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது

சிந்தனை வினா

Question 1.
வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
Answer:
(i) ஏற்றப்பாடல் – ஏற்றத்தின் மூலம் நீர் இறைக்கும்போது பாடப்படும்.
(ii) ஏர்ப்பாடல் – வயலில் மாடுகளைப் பூட்டி ஏர் உழும்போது பாடப்படும்.
(iii) நடவுப் பாடல் – வயலில் நாற்று நடும்போது பாடப்படும்.
(iv) களை எடுப்புப் பாடல் – பயிர்களின் இடையே உள்ள வேண்டாத புல் பூண்டுகளைக் களைந்து எடுக்கும்போது பாடப்படும்.

(v) அறுவடைப் பாடல் – நெல் முற்றியவுடன் அறுவடை செய்யும் போது பாடப்படும்.

(vi) போராடிப் பாடல் – நெற்கதிர்களை உதிர்த்து எடுப்பதற்கு போரடிப்பார்கள். அப்போது பாடப்படும்.

இவையனைத்தும் உழவர்கள் பாடும் பாடல்கள் ஆகும். இதேபோல் மீனவர் பாடல், வண்டிக்காரன் பாடல், சுண்ணாம்பு இடிப்போர் பாடல், படகுக்காரன் பாடல், உப்பளத் தொழிலாளர் பாடல் எனப் பல வகையான தொழில் பாடல்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
2. ஈரம் – இரக்கம்
3. முழவு – இசைக்கருவி
4. நன்செய் – நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
5. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
6. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
7. பயிலுதல் – படித்தல்
8. நாணம் – வெட்கம்
9. செஞ்சொல் – திருந்திய சொல்

நிரப்புக

1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் ………………………………..
2. வாணிதாசனின் இயற்பெயர் ……………………….
3. வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள் ………………………………..
4. வாணிதாசனுக்குப் பிரெஞ்சு அரசு ……………………… விருது வழங்கியுள்ளது.
5. பாடப்பகுதியில் உள்ள ‘ஓடை’ என்னும் பாடல் ……………………. என்னும் நூலில் உள்ளது.
6. ஓடையில் ஆட …………………. தூண்டும்.
7. கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாய்வது ……………………
8. ஓடை நன்செய், புன்செய் நிலங்களுக்கு …………………………. தந்து பயிர்களைச் செழிக்க செய்கிறது.
9. ஓடை இடையறாது ஓடித் தன் ……………………. கொடையாகத் தருகிறது.
10. ஓடை நாட்டு மக்களின் ………………….. போக்குகிறது.
Answer:
1. கவிஞர் வாணிதாசன்.
2. அரங்கசாமி என்கிற எத்திராசலு
3. கவிஞரேறு, பாவலர்மணி.
4. செவாலியர்
5. தொடுவானம்
6. உள்ளம்
7. ஓடை
8. நீர்வளம்
9. உழைப்பைக்
10. வறுமையைப்

குறுவினாக்கள்:

Question 1.
வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
Answer:
வாணிதாசன் அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.

Question 2.
வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

Question 3.
ஓடையின் அழகைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்? என்று வாணிதாசன் ஓடையின் அழகைப் பற்றிக் கூறுகிறார்.

Question 4.
ஓடையைப் பார்த்ததும் தன் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
நீரோடையைப் பார்த்ததும் நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது. கற்களில் உருண்டும் தவழ்ந்ததும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது என்று கவிஞர் கூறுகிறார்.

Question 5.
ஓடையின் பயன்கள் யாவை?
Answer:
நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

Question 6.
ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிறுவினா

Question 1.
கவிஞர் வாணிதாசன் குறிப்பு எழுதுக.
Answer:
ஆசிரியர் பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
இவர் பாரதிதாசனின் மாணவர் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்.
அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
சிறப்புப்பெயர் : கவிஞரேறு, பாவலர்மணி
பெற்று விருது : பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியது
இயற்றிய நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

ஆசிரியர் குறிப்பு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

பாடலின் பொருள்
நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

Also Read : Chapter-2.2---Konakkattup-pattu-Chapter-2-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen