SaraNextGen.Com

Chapter 4.1 - Kalvi alake alaku - Chapter 4 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 1.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(ii) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
(iii) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
(iv) கல்லாதவரே கண்ணில்லாதவர்.
(v) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான்

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ……………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. அழகு – பெண்களுக்கு அணிகலன்களை விட புன்னகையே அழகு தரும்.
2. கற்றவர் – கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும்.
3. அணிகலன் – ஐம்பெருங்காப்பியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.

குறுவினா

Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அவருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.

சிறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகள் :
(i) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
(ii) அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
(iii) ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை

சிந்தனை வினா

Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்கும்.
(ii) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயனையும் பெறலாம்.
(iii) கவலையின்றி வாழத் துணைபுரியும்.
(iv) கல்வி கற்பதனால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களை விரட்ட முடியும்.
(v) கல்வியால் நாட்டில் நன்னெறி படரும்.
(vi) கல்வியால் மக்கள் மாண்புறுவர்.

கூடுதல் வினாக்கள

சொல்லும் பொருளும் :

1. கலன் – அணிகலன்
2. முற்ற – ஒளிர

நிரப்புக :

1. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்டது ………………………
2. குமரகுருபரர் ………………….. நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
3. கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் ……………………
4. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் ………………………………
5. நீதிநெறி விளக்கம் ……………….. வெண்பாக்களை உடையது.
6. மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் குமரகுருபரரின் நூல் ……………………….
7. கற்றவருக்கு அழகு சேர்க்க …………………….. தேவையில்லை.
Answer:
1. அணிகலன்
2. பதினேழாம்
3. குமரகுருபரர்
4. மீனாட்சியம்மை பிள்ளைத்த முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
5. 102
6. நீதிநெறி விளக்கம்
7. அணிகலன்கள்

விடையளி :

Question 1.
குமரகுருபரர் பற்றி எழுதுக.
Answer:
(i) குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
(ii) இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
இயற்றிய நூல்கள் :
(i) கந்தர் கலிவெண்பா
(ii) கயிலைக் கலம்பகம்
(iii) சகலகலாவல்லி மாலை
(iv) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(v) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Question 3.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் ‘நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை; அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

Also Read : Chapter-4.2---Puttiyait-tittu-Chapter-4-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen