SaraNextGen.Com

Chapter 7.1 - Patai velam - Chapter 7 Term 3 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

Question 1.
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள் : சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் எனக்குத் தெரிந்தவை.

1. உலா
2. ஊசல்
3. ஒருபா ஒருபது
4. குறவஞ்சி
5. சதகம்
6. தாண்டகம்
7. தூது
8. நவமணிமாலை
9. நான்மணிமாலை
10. பதிகம்
11. அந்தாதி
12. பரணி
13. கலம்பகம்
14. பள்ளு
15. குறம்

Question 2.
போர்க்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிங்க ம் ……………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
Answer:
இ) முழை

Question 2.
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு …………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஆ) அச்சம்

Question 3.
வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி
Answer:
ஆ) வெம்மை + கரி

Question 4.
‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்
Answer:
ஈ) என்ற + இருள்

Question 5.
போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல் உடன்றன
Answer:
இ) போலுடன்றன

குறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
Answer:
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கியமை :
(i) சோழ வீரர்களைக் கண்ட கலிங்கர் இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர்.
(ii) தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
(iii) சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்.
(iv) தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

Question 2.
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
Answer:
கலிங்க வீரர்கள் அஞ்சி ஓடியமை :
(i) சோழர் படையைக் கண்டு அஞ்சி நடுங்கிய கலிங்கப்படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
(ii) சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
(iii) சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
(iv) எத்திசையில் செல்வது எனத் தெரியாமல் செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

Question 3.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
Answer:
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் :
(i) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளறின.

(ii) அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்.

(iii) ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப்பிழைத்தனர்.

சிறுவினா

Question 1.
சோழவீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக்கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
Answer:
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்கள் :
(i) சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கி விட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினர்.

(ii) அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

(iii) கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருதாக எண்ணி அஞ்சினர் தஞ்சம் வேண்டி வணங்கினர்.

(iv) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப்போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

சிந்தனை வினா

Question 1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை :
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கை அரண்களாக மலைவளம், வனவளம், நீர்வளம் அவசியம். தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் நாம் இயற்கையை மறந்து செயற்கையை வாழ வைக்கிறோம். அதனை முற்றிலும் கைவிடவேண்டும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு மாறாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். நீர்வளம் பெருக வனவளம் காக்க வேண்டும்.

நாட்டில் நல்லறங்கள் பெருக வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி காக்கப்படும். அண்டை நாடுகளுடன் பிணக்கின்றி இருக்கலாம். எல்லையில் உள்ள வீரர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையின்றி நாட்டைப் பாதுகாப்பர். இதனால் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். அண்டை நாட்டினரிடமிருந்து நாட்டையும் பாதுகாக்கலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தமிழர்கள் தமது உடைகளாகக் கொண்டவை …………………
2. கலிங்கத்துப்பரணி …………………. வகைகளுள் ஒன்று.
3. சோழமன்னனின் படையிலுள்ள யானைகள் ………………. போல் பிளிறின.
4. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ……………………
5. செயங்கொண்டார் ………………… என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர்.
6. செயங்கொண்டார் ………………….. அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
7. செயங்கொண்டாரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் பலபட்டடைச் ………………………
8. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் …………………..
9. கலிங்கத்துப்பரணியைத் …………………… என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
10. கலிங்கத்துப்பரணி ………………….. பாடப்பெற்றது.
11. கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
12. சோழர் படையின் தாக்குதலைக் கண்டு ஓடியவர்கள் ………………
13. சிற்றிலக்கியங்கள் …………….. வகைப்படும்.
Answer:
1. அறம், வீரம்
2. சிற்றிலக்கிய
3. இடியைப்
4. செயங்கொண்டார்
5. தீபங்குடி
6. முதற்குலோத்துங்கச் சோழனுடைய
7. சொக்கநாதப் புலவர்
8. கலிங்கத்துப்பரணி
9. தென்தமிழ்த் தெய்வப்பரணி
10. கலித்தாழிசையால்
11. 599
12. கலிங்கர்
13. தொண்ணூற்றாறு

விடையளி :

Question 1.
செயங்கொண்டார் குறிப்பு வரைக.
Answer:
(i) கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார்.
(ii) இவர் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
(iii) இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்.
(iv) இவரைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்துள்ளார்.

Question 2.
பரணி – குறிப்பு எழுதுக.
Answer:
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Question 3.
கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
Answer:
(i) கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். இந்நூலே தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி ஆகும்.

(ii) இது முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத் தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.

(iii) கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

பாடல்

சொல்லும் பொருளும்

1. மறலி – காலன்
2. கரி – யானை
3. தூறு — புதர்
4. அருவர் – தமிழர்
5. உடன்றன – சினந்த எழுந்தன
6. வழிவர் – நழுவி ஓடுவர்
7. பிலம் – மலைக்குகை
8. மண்டுதல் – நெருங்குதல்
9. இறைஞ்சினர் – வணங்கினர்
10. முழை – மலைக்குகை

பாடலின் பொருள்

சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

நூற்குறிப்பு
கலிங்கத்துப்பரணி தொண்ணூற்று வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

ஆசிரியர் குறிப்பு
செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.

Also Read : Chapter-7.2---Vitutalait-tirunai-Chapter-7-Term-3-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen