SaraNextGen.Com

Chapter 9.1 - Uyirkkunankal - Chapter 9 Term 3 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Question 1.
பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க.
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்.
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல் – 14
Answer:
தெரிந்து தெளிவோம்
(i) பாவை நூல்கள் : மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை.

இதேபோலச் சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை. இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
அ) உவகை
ஆ) நிறை
இ) அழுக்காறு
ஈ) இன்பம்
Answer:
இ) அழுக்காறு

Question 2.
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ……………..
அ) பொச்சாப்பு
ஆ) துணிவு
இ) மானம்
ஈ) எளிமை
Answer:
அ) பொச்சாப்பு

Question 3.
‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) இன் துன்பு
ஆ) இன்பம் + துன்பம்
இ) இன்ப + அன்பம்
ஈ) இன்ப + அன்பு
Answer:
ஆ) இன்பம் + துன்பம்

Question 4.
குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) குணங்கள் எல்லாம்
ஆ) குணமெல்லாம்
இ) குணங்களில்லாம்
ஈ) குணங்களெல்லாம்
Answer:
ஈ) குணங்களெல்லாம்

பொருத்துக

1. நிறை – பொறுமை
2. பொறை – விருப்பம்
3. மதம் – மேன்மை
4. மையல் – கொள்கை
Answer:
1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. மதம் – கொள்கை
4. மையல் – விருப்பம்

குறுவினா

Question 1.
மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?
Answer:
மனிதரின் பொது இயல்புகள் :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

Question 2.
மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?
Answer:
நற்பண்புகள் :
அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.

சிறுவினா

Question 1.
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
Answer:
மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :
அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.

சிந்தனை வினா

Question 1.
மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?
Answer:

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மனிதன் …………………. விலக்கி ………………….. வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. இறையரசனின் இயற்பெயர் …………………….
3. இறையரசன் ஆற்றிய பணி …………………..
4. இறையரசன் ……………………….. தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
5. ஆண்டாள் பாடிய நூல் …………………
6. மாணிக்கவாசகர் இயற்றியது …………………….
7. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பாடியது …………………..
8. சிவபெருமானை வழிபடச்செல்லும் பெண்கள் பாடியது ………………………
9. கன்னிப்பாவை மனிதனுக்குள் நிறைந்திருக்கும் …………………… கூறுகிறது.
Answer:
1. தீயனவற்றை, நல்லனவற்றை
2. சே.சேசுராசா
3. தமிழ்ப்பேராசிரியர்
4. திருப்பாவையைத்
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருப்பாவை
8. திருவெம்பாவை
9. பண்புகளைக்

விடையளி :

Question 1.
மனிதனின் கடமை யாது?
Answer:
ஒவ்வொரு மனிதனிடமும் நற்பண்புகளும் உண்டு, தீய பண்புகளும் உண்டு. தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றை வளர்த்து வாழ்வாங்கு வாழ்வதே மனிதனின் கடமையாகும்.

Question 2.
பாவை நோன்பு என்றால் என்ன?
Answer:
மார்கழித்திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர்.

Question 3.
திருப்பாவை, திருவெம்பாவை விளக்குக.
Answer:
பாவை நோன்பு மேற்கொண்டு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை. பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை.

Question 4.
இறையரசன் குறிப்பு எழுதுக.
Answer:
(i) இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும்.
(ii) கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
(iii) ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

பாடல்

அறிவுஅருள் ஆசைஅச்சம்
அன்பு இரக்கம் வெகுளிநாணம்
நிறை அழுக்காறு எளிமை
நினைவுதுணிவு இன்பதுன்பம்
பொறைமதம் கடைப்பிடிகள்
பொச்சாப்பு மானம்அறம்
வெறுப்பு உவப்பு ஊக்கம்மையல்
வென்றி இகல் இளமைமூப்பு
மறவிஓர்ப்பு இன்னபிற
மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம்
குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும் நீ உறங்குதியோ
புறப்படு புன்னகைநீ
பூத்தேலோ ரெம்பாவாய்! – இறையரசன்

சொல்லும் பொருளும்

1. நிறை – மேன்மை
2. பொறை – பொறுமை
3. பொச்சாப்பு – சோர்வு
4. மையல் – விருப்பம்
5. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
6. அழுக்காறு – பொறாமை
7. மதம் – கொள்கை
8. இகல் – பகை
9. மன்னும் – நிலைபெற்ற

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனிதகுலத்தில் பிறந்த பெண்ணே ! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்தபின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

ஆசிரியர் குறிப்பு
இறையரசனின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும். கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியுள்ளார். அந்நூலில் இருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

Also Read : Chapter-9.2---Ilaiya-tolanukku-Chapter-9-Term-3-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen