SaraNextGen.Com

Chapter 1.3 - Tamilvitu tutu - Chapter 1 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 1.
நமது எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதாக எடுத்துரைக்க உதவுவது தமிழ் மொழி என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் உரை ஒன்று எழுதுக.
Answer:
“நண்ணு மிளவைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி – எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைத்த மொழி”

என்று வரத நஞ்சைய பிள்ளை தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார். “இனிமையும் நீர்மையும் தமிழ் எனல்” ஆகும் என்பது புகழ்மொழியாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார். தமிழ் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதில் எடுத்துரைக்கத் தக்கதாகும்.

தமிழ் மொழியிலுள்ள சொற்கட்டமைப்பும் வாக்கியக் கட்டுக் கோப்பும் எளிமையாகவும் திறமாகவும் அமைந்துள்ளன. இலக்கணக் கட்டுப்பாடு மொழிக்கு வேலி போன்றது ஆகும். சொற்கள் இலக்கியத்திற்கு என்றும் இலக்கணத்திற்கு என்றும் தனித்தனியே அமைந்துள்ளன.

இலக்கியத்திற்கு இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு சொற்களையும் பயன்படுத்துகிறோம். இலக்கணத்திற்குப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் தனியமைப்புப் பயன்பாட்டுக்குரியது.

தமிழ் மொழியின் இனிமையும் எளிமையும் சமயம் பரப்ப தமிழகத்துக்கு வந்த மேனாட்டுக் கிறித்துவ சமயச் சான்றோர்களைக் கவர்ந்தது. அவர்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் இனிய எளிய தமிழில் எடுத்துரைக்கச் செய்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தேசியத்தை வளர்த்தது. தேசியம் தமிழை எடுத்துக் கொண்டது. கருத்துகளையும் எண்ணங்களையும் எடுத்துச் சொல்ல முடிந்தது. அறிவியல் நுட்பங்களை எடுத்துச் சொல்ல புதுப்புதுச் சொற்களைப் படைத்து அளித்ததனால் சொல்வளம் பெருகியது. தமிழ் கணினிப் பயன்பாட்டிற்கு வந்தவுடன் கணினித் தமிழ் என்ற துறை முகிழ்த்தது.
நமது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க மொழி பயன்பட்டது. அம்மொழி வழியே கருத்துகளைப் பிறருக்குப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

Quesiton 2.
படித்துத் திரட்டுக.
“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க”
– கவியோகி சுத்தானந்த பாரதியார்.

இப்பாடல் காட்டும் இலக்கியங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக.
Answer:
இப்பாடல் காட்டும் இலக்கியங்கள்

குண்டலமும் – குண்டலகேசி
கைக்கு வளையாபதி – வளையாபதி
சிந்தாமணி – சீவக சிந்தாமணி
பொன்முடி சூளாமணி – சூளாமணி
செங்கோலாய்த் திருக்குறள் – திருக்குறள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
Answer:
இ) சிற்றிலக்கியம்

Question 2.
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
i) ………………. இனம்
ii) வண்ணம்…………………..
iii) …………… குணம்
iv) வனப்பு …………………….
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு
ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று
இ) பத்து, நூறு, எட்டு, மூன்று
ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று
Answer:
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

Question 3.
அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
Answer:
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

Question 1.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
Answer:
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

நெடுவினா

Question 1.
‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது’ – தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும். வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர். தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர். அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் :
தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்கும் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் மகிழ்ந்து விடுக்கும் விண்ணப்பம் ஒன்றுள்ளது அதைக்

கேட்பாயாக. மூவகைப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?
தமிழே, உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புப் பெற்றனர். நீயும் படிக்கக் கொடுப்பாய். அதனால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

‘சிந்து’ என்றழைப்பது தகுமோ?
தமிழ்ப்பாவகை அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை , சிந்து என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும்.

பத்துக் குணங்கள் பொருந்திய தமிழே!
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம் (அமைதி) இராசசம் (தீவிரமான குணம்) தாமசம் (சோம்பல்) மூன்று குணங்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி எனும் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

நூறு வண்ணங்கள் கொண்ட வண்டமிழே:
மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை (பொன் நிறம்) பசுமை என ஐந்தே. நீயோ, புலவர்கள் தெளிந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

எட்டழகு பெற்ற கட்டழகுத் தமிழே :
நாவினால் அறியும் சுவைகள் ஆறு. நீயோ, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்களுக்கு அழகு ஒன்றே ஒன்று என்றில்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்
அ) தமிழ்விடு தூது
ஆ) தமிழோவியம்
இ) திருக்குற்றால குறவஞ்சி
ஈ) முக்கூடற்பள்ளு
Answer:
அ) தமிழ்விடு தூது

Question 2.
தமிழின் வண்ணங்கள்…………….
அ) 20
ஆ) 96
இ) 18
ஈ) 100
Answer:
ஈ) 100

Question 3.
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்…………………
அ) பெருஞ்சேரல் இரும்பொறை
ஆ) உ.வே.சாமிநாதர்
இ) அடியார்க்கு நல்லார்
ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
ஆ) உ.வே.சாமிநாதர்

Question 4.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) சத்துவம்
ஆ) புலம்
இ) இராசசம்
ஈ) தாமசம்
Answer:
ஆ) புலம்

Question 5.
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்………………
அ) பலபட்டடைச் சொக்கநாதர்
ஆ) என்னயினாப் புலவர்
இ) சத்திமுத்தப் புலவர்
ஈ) எவருமில்லை
Answer:
ஈ) எவருமில்லை

நிரப்புக

6. இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலை ……………
Answer:
கண்ணி

7. சிந்து என்பது ஒருவகை …………
Answer:
இசைப்பாடல்

8. சிந்தாமணி என்பதன் பொருள்………………….
Answer:
சீவகசிந்தாமணி, சிதறாதமணி

9. செவிக்கு விருந்தளிக்கும் சுவைகள்………………
Answer:
ஒன்பது

10. பாவினங்க ள் …………..
Answer:
மூன்று

11. தாழிசை, துறை, விருத்தம் என்பவை ………..
Answer:
பாவினங்கள்

12. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுவது …………
Answer:
தூது இலக்கியம்

13. தூது இலக்கியம் பாடப்படும் பாவகை …………..
Answer:
கலி வெண்பா

14. தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன் ………….
Answer:
மதுரை சொக்கநாதர்

15. தமிழ்விடு தூது நூலை முதன்முதலில் பதிப்பித்தவர்
Answer:
உ.வே.சா

16. தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு ……….
Answer:
1930

17. தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள் ……….
Answer:
268

18. வனப்பின் வகைகள் ………..
Answer:
எட்டு

19. செறிவு, சமனிலை பத்தும் ……..
Answer:
குண அணிகள்

20. ‘தாமசம்’ என்ப து ……….
Answer:
சோம்பல், தாழ்மை

21. முற்றும் உணர்ந்த தேவர்கள் பெற்றுள்ள குணம்
Answer:
மூன்று

குறுவினா

Question 1.
எவையெல்லாம் தூதாக அனுப்பப்படும்?
Answer:
அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், தமிழ், மான் ஆகிய பத்தும் தூதாக அனுப்பப்படும்.

Question 2.
வனப்பு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வனப்பு எட்டு வகைப்படும்.
அவை அம்மை அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகும்.

Question 3.
குற்றமிலா பத்துக் குணங்கள் யாவை?
Answer:
பத்துக் குணங்களாவன: செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்பவை.

தெளிவுரை :

தமிழ், தெளிந்த அமுதாய் அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும் கனியாக இருக்கிறது. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! உன்னிடம் மகிழ்ந்து கேட்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது, நீ அதைக் கேட்பாயாக.

தமிழே! உன்னிடமிருந்து பள்ளு, குறவஞ்சி எனும் நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்படைந்தனர். நீயும் அவற்றை எல்லாம் படிக்கக் கொடுப்பாய் அதனால், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவினப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

பாவின் திறம் பொருந்தி நின்று, என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை “சிந்து” என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? ஒருவேளை அவ்வாறு கூறிவிட்டால் ‘நா’ இற்று விழும். வானத்தில் வசிக்கும் தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய முக்குணங்களைப் பெற்றிருக்கிறார்கள். நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

மனிதனின் கை வண்ணங்கள் ஐந்திற்கு மேல் இல்லை நீயோ, புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், துங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டிருக்கிறாய்.

நாவில் தோன்றும் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ, செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்க்கு அழகு ஒன்றே ஒன்று. நீயோ எண்வகை வனப்புகளைப் பெற்றுள்ளாய்.

சொற்பொருள் :

குறம், பள்ளு – 96 வகை சிற்றிலக்கியங்களுள் இரண்டு
மூன்றினம் – பாவகைகளின் பிரிவுகள் தாழிசை, துறை, விருத்தம்
சிந்தாமணி – 1. சீவகசிந்தாமணி, 2. சிதறாத மணி
சிந்து – ஒருவகை இசைப்பாடல். யாப்பு வகைகளுள் ஒன்று காவடிச்சிந்து, மூன்று சீர்களில் வரும் செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – பாரதியார் ‘சிந்துக்குத் தந்தை’ என்பதைத் தெரிக.
முக்குணம் – மூன்று குணம் சத்துவம் (அமைதி, மேன்மை ) இராசசம் (தீவிரமான
செயல், போர்) தாமசம் (சோம்பல், தாழ்மை)
வண்ணங்கள் ஐந்து – வெள்ளை , சிவப்பு, கறுப்பு, மஞ்சள், பச்சை
வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை முதலான இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு
ஊனரசம் – குறையுடைய சுவை.
நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம் நகை, சமநிலை
வனப்பு – அழகு (அம்மை, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு) என எட்டாகும்.

இலக்கணக் குறிப்பு :

முத்திக்கனி – உருவகம்
தெள்ளமுது – பண்புத்தொகை
குற்றமிலா – ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம்
செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத்தொகை
தெள்ளமுது – பண்புத்தொகை
நா – ஒரெழுத்து ஒருமொழி
சிந்தா மணி, அழியா வனப்பு, ஒழியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம் :

1. கொள்வார் – கொள் + வ் + ஆர்
(2. உணர்ந்த
கொள் – பகுதி,
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. உணர்ந்த – உணர் + த்(ந்) + த் + அ
உணர் – பகுதி
த்(ந்) – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்,
த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி

3. சொல்லிய – சொல் + இ(ன்) + ய் + அ
சொல் – பகுதி,
இன் – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படு மெய் சந்தி,
அ – பெயரெச்ச விகுதி

4. பெற்றாய் – பெறு(பெற்று) + ஆய்
பெறு – பகுதி (பெற்று) என ஒற்று இரட்டித்து இறந்த காலம் காட்டியது
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

5. உடையாய் – உடை + ய் + ஆய்
உடை – பகுதி
ய் – உடன்படு மெய் சந்தி,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

Also Read : Chapter-1.4---Valarum-celvam-Chapter-1-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen