SaraNextGen.Com

Chapter 6.4 - Ceyti - Chapter 6 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Question 1.
உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக.
Answer:

சொற்போர்

“நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி.

“இசையால் வசமாகா இதயம் எது” என்றார் மற்றொரு கவிஞர். இசை வாடிய பயிரை வளரச் செய்யும்; மழையைப் பொழியச்செய்யும்; எல்லா வல்ல இறைவனையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்த இசை, உலகில் அமைதியையும் ஏற்படுத்தும் எனில் மிகையாகாது.

“அழகான இசை அது மனித குலத்தின்

உண்மையான நம்பிக்கை”. அன்பையும், அமைதியையும், மன உருக்கத்தையும் இசையால் ஏற்படுத்த முடியும்

உலக அமைதிக்காக ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இசை விழா நடத்தப்படுகிறது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இவ்விழா நடைபெற்று வருகிறது.

நம் நாட்டிலும் சிதம்பரம் போன்ற கோவில்களில் உலக அமைதிக்காக, பல மணி நேரங்கள் தொடர் இசை (சான்றாக 12 மணி நேரம், 28 மணி நேரம்) நடத்தப்படுகிறது. அவ்விழாவில் பல மொழி பேசுபவர்கள், பல நாட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். அங்கு, இசை மட்டுமே ஆளுகை செய்கிறது. நாடோ, மொழியோ, பணமோ, பதவியோ, உயர்வோ, தாழ்வோ அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசை என்றால் “ஒழுங்கு” என்றும் “இசையவைப்பது” என்றும் பொருள் உண்டு. இயற்கையைத் தன் வசப்படுத்தி, இறைவனையே தன் வசப்படுத்தி, இறைவனையே ஆட்கொள்ளும் இசை மனித மனங்களில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இசைந்து போகச்செய்யும் ஆற்றல் உடையது. எனவே உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறொன்றும் இல்லை.

Question 2.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள உங்களுக்குப் பிடித்த செய்யுள் பகுதிகளை வகுப்பில் இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் “செய்தி” கதையின் மூலமாக விளக்குக.
Answer:
முன்னுரை:
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.

வித்வானின் வருகையும், அறிமுகமும்:
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.

வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீதகுழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

கீர்த்தனம் தொடங்கினார்:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.

போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.

சாமாராகம் :
தஸரிமா……. மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் – கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல் ……

அவன்உடல்ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான்.

சாமா ராகத்தை …….. அனுபவிக்க அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை. சாந்தமுலேகா……..

சாந்தமுலேகா …… :

குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன………………

அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி …… உலகத்துக்கே ஒரு செய்தி ……. உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான் …………..
என்ன என்றார் வித்வான் ……..

வக்கீல் மொழி பெயர்த்தல்:
தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என ….. ஒரே இரைச்சல்……. அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது …. இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.

வித்வானின் திகைப்பு:
அமைதியா …… அப்படியா தோணித்து அவருக்கு …… நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே ……
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது ………. என்று திகைத்துக் கூறினார்.

போல்ஸ்கோ …… பாராட்டல்:
இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா ………..

முடிவுரை:
நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.
இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்தி கதையின் தலைமை மாந்தர் யார்?
அ) தங்கவேலு
ஆ) மணி
இ) பிலிப் போலஸ்கா
ஈ) ஜானகிராமன்
Answer:
இ) பிலிப் போல்ஸ்கா

Question 2.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜானகிராமனின் நூல் எது?
அ) சக்தி வைத்தியம்
ஆ) கருங்கடலும் கலைக்கடலும்
இ) நடந்தாய் வாழி காவேரி
ஈ) அடுத்த வீடு ஐம்பது மைல்
Answer:
அ) சக்தி வைத்தியம்

Question 3.
அப்பாவின் சிநேகிதர் நூலின் ஆசிரியர்
அ) அகிலன்
ஆ) அசோகமித்திரன்
இ) ஆதவன்
ஈ) நாஞ்சில் நாடன்
Answer:
ஆ) அசோகமித்திரன்

Question 4.
தி.ஜானகிராமன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு
அ) 1969)
ஆ) 1979
இ) 1989
ஈ) 1999
Answer:
ஆ) 1979

Question 5.
செய்தி என்னும் சிறுகதை இடம் பெற்ற நூல் எது
அ) சிவப்பு ரிக்ஷா
ஆ) மின்சாரப்பூ
இ) ஒரு சிறு இசை
ஈ) முதலில் இரவு வரும்
Answer:
அ) சிவப்புரிஷா

குறுவினா

Question 1.
தி. ஜானகிராமன் – குறிப்பு வரைக.
Answer:

  • தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்
  • உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தவர்.

Question 2.
செய்தி என்னும் சிறுகதை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும் போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

Question 3.
தஞ்சாவூர் தமிழக்கு அளித்த கொடையாக விளங்குபவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • உ.வே.சாமிநாதர்
  • மௌனி
  • தி.ஜானகிராமன்
  • தஞ்சை பிரகாஷ்
  • தஞ்சை இராமையா தாஸ்
  • தஞ்சாவூர்க் கவிராயர்

சிறுவினா

Question 1.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச்சிறுகதையாளர்கள் ஐந்துபேரைக் குறிப்பிடுக.
Answer:

  • கு. அழகிரிசாமி
  • தி. ஜானகிராமன்
  • அசோகமித்திரன்
  • நாஞ்சில்
  • நாடன் வண்ணதாசன்

Question 2.
இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாகக் காட்டுவது நாகசுரம். ஆய்ந்தறிக!
Answer:
இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக் கருவிகளில் நாதசுரமும் ஒன்று. மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை . 13 ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.

நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது.

எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.

Also Read : Chapter-6.5---Punarcci-Chapter-6-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen