SaraNextGen.Com

Chapter 6.6 - Tirukkural - Chapter 6 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 1.
படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்க

அ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்.
இ) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Answer:
இ) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.

Question 2.
பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்து பொருத்துக. (விடையுடன்)

Answer:

Question 3.
ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும்
ஆ) நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும்
ஈ) இணக்கமும் பிணக்கமும்
Answer:
ஆ) நாணமும் இணக்கமும்

Question 4.
கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.

அ)அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்……………..
ஆ)உலகத்துக்கு அச்சாணி போன்றவர்-…………….
இ) தான் நாணான் ஆயின்…………….. நாணத்தக்கது
ஈ) ஆழி என்பதன் பொருள் ……………..
உ)மாற்றாரை மாற்றும்……………..
ஊ) ஒழுக்கமான குடியில் பிறந்தவர் …………….. செய்வதில்லை
Answer:

அ) ஒப்புரவு
ஆ)  உழவர்
இ) அறம்
ஈ) கடல்
உ) படை
ஊ) தவறு

Question 5.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
இக்குறளின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்கக் கதை எழுதுக
Answer:
நான் வசிக்கும் ஊருக்கு அருகில் ஒரு சிறிய கிராமம் (சிற்றூர்) உள்ளது. 100 குடும்பங்களே உடைய அச்சிற்றூரில் உழவே பிரதானமான தொழில். அங்குள்ள மக்களுக்கு கல்வியறிவு கிடையாது. அவ்வூருக்கு நன்கு படித்த பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் குடி வந்தார். அவர் பெயர் சாமிநாதன்.
அண்டை ஊரில் இருந்து ஒரு செல்வந்தன் இச்சிற்றூர் மக்களின் விளைபொருட்களை அநியாயமாக அடித்துப் பிடித்து அரைகுறை விலையில் வாங்கிக் கொண்டிருந்தான்.

சாமிநாதன் அந்த ஊருக்கு வந்தவுடன் இதனைத் தெரிந்து கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்கள் நியாயவிலையாய் இருந்தால் வாங்கிக்கொள் இல்லையென்றால் சென்று விடு என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். செல்வந்தன் காரணம் அறிந்து கொண்டு சாமிநாதனைச் சந்தித்து வழக்கமாக நான் செய்வதைத் தடையின்றி செய்ய உதவினால், உமக்குச் சரிபாதி பணத்தையும், உனக்குத் தேவையான தானியவகைகள் அனைத்தையும் விலையில்லாமல் உமக்கும் தருகிறேன் என்றார்.

ஆனால் சாமிநாதனோ ………. நீ கோடி கோடியாய்க் கொடுத்தாலும், நீதி தவறி நடக்க மாட்டேன், இந்த அப்பாவி மக்களின் வயிற்றில் உன்னை அடிக்கவிட மாட்டேன் என்று ஓடிப்போ …….. என்று விரட்டி விட்டார்………. தன் நிலையில் இருந்து மாறவில்லை அவர்.
ஆம்.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்” அன்றோ

பாடநூல் வினாக்கள்

சிறுவினா

Question 1.
இறக்கும் வரை உள்ள நோய் எது?
Answer:
தன் செயலைப் பிறர் எடுத்துச் சொல்லியும் செய்யாதவனாய், தானும் சிந்தித்து செயல்படத் தெரியாதவனாய் உள்ளவனின் வாழ்வு, உயிர் போகும் வரை உள்ள நோய் ஆகும்.
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓம் அளவும் ஓர் நோய்”.

Question 2.
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண் –
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.
Answer:
இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி ஏகதேச உருவக அணி ஆகும்.
அணி விளக்கம் : ஒரு செய்யுளில் தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஏகதேச உருவக அணி எனப்படும்.

பொருத்தம் : மேற்கூறிய இக்குறட்பாவில் சான்றோர் வாழ்விற்குத் தேவையான ஐந்து நற்குணங்களை தூண் என உருவகித்து விட்டு, சான்றாண்மையை (விதானம் – கூரை) என உருவகிக்காமல் விட்டு விட்டதால் ஏகதேச அணிக்குப் பொருந்தி வருகிறது.

Question 3.
உலகிற்கு அச்சாணி எனப்படுபவர் யார்? ஏன்?
Answer:
உலகிற்கு அச்சாணியாக விளங்குபவர் உழுபவரே ஆவார். மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

Question 4.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான் கண்டவாறு
இக்குறட்பாவில் பயின்று வரும் தொடைநயத்தை எழுதுக.
Answer:
காணாதான்
காணான் கண்டானாம் | கண்டவாறு

இதில் உள்ள நயம்: சீர் மோனை, சீர் எதுகை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெறிக

Question 1.
அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர்
அ) குடிஇழிந்தார்
ஆ) குடி இறந்தார்
இ) குடிப்பிறந்தார்
ஈ) குடிமகிழந்தார்
Answer:
இ) குடிப்பிறந்தார்

Question 2.
ஊழி பெயரினும் தான் பெயராதவர்
அ) பொய்மையுடையவர்
ஆ) இழித்தன்மையுடையவர்
இ) சான்றாண்மையுடையவர்
ஈ) கொடுங்கோலர்
Answer:
இ) சான்றாண்மையுடையவர்

Question 3.
“சாகும் வரை உள்ள நோய்” – என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
அ) அறிவுடையாரை
ஆ) புல்லறிவுடையாரை
இ) அன்புடையாரை
ஈ) பண்புடையாரை
Answer:
ஆ) புல்லறிவுடையாரை

Question 4.
காணாதான் காட்டுவான் – காணாதான் யார்?
அ) அறிவுடையான்
ஆ) அறிவில்லாதவன்
இ) அன்புடையான்
ஈ) பண்புடையான்
Answer:
ஆ) அறிவில்லாதவன்

குறுவினா

Question 1.
அறம் யாரை விட்டு விலகிப்போகும்?
Answer:
பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால், அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும்.

Question 2.
சிறந்த இன்பம் எப்போது பெறலாம்?
Answer:
துன்பங்களில் மிகக் கொடிதான மனக்கசப்பு என்னும் பகையாகிய துன்பம் அழிந்து விட்டால் இன்பங்களில் சிறந்த இன்பத்தைப் பெறலாம்.

“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்”

Question 3.
உழவே தலை – ஏன்?
Answer:
உலகம் பல தொழில்களால் இயங்குகிறது. எனினும் உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலுக்குப் பின்னாலேயே போகும். அதனால் வருந்தி உழைத்தாலும் உழவே சிறந்தது.

சிறுவினா

Question 1.
சான்றாண்மை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகள் யாவை?
Answer:

  • பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்! அணி – ஏகதேச உருவக அணி
  • செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.
  • ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார்!

Question 2.
உழவுத் தொழிலை வள்ளுவர் எவ்வாறு போற்றுகிறார்?
Answer:

  • உலகம் பல தொழில்களைச் செய்து இயங்கினாலும் (சுழன்று வந்தாலும்), உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலை நம்பியே அதன் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் உழவுத்தொழிலே முதன்மையான சிறந்த தொழிலாகும்.
  • பிற தொழில்கள் செய்யும் அனைவரையும் உழுபவரே தாங்கி நிற்பவர் ஆவார். எனவே உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ஆவார்.

Question 3.
சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
Answer:

  • அன்பு
  • பழிக்கு அஞ்சுதல் (நாண்)
  • ஒப்புரவு (இணக்கம்)
  • கண்ணோட்டம்
  • வாய்மை – இவையே சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் ஆகும்.

புல்லறிவாண்மை

அதிகார விளக்கம் : அறிவு இல்லாமையும், தானாகச் செயலைச் செய்யும் தெளிவு இல்லாமையும் உடையாரின் இழிவு கூறப்படுகிறது.

Question 1.
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்
Answer:
தனக்கான செயலை (நன்மையை) பிறர் எடுத்துச் சொன்னாலும் செய்யாதவனாய் தானாகவும் சிந்தித்துச் செய்யாதவனாய் உள்ளவன், வாழும் காலம் முதல் உயிர் போகும் காலம் வரை தீராத நோயாளி ஆவான்.

Question 2.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
Answer:
அறிவில்லாதவனுக்குத்தனது அறிவைக்காட்டநினைப்பவன், தானே அறிவில்லாதவனாய்
நிற்பான். அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வரையில் தன்னை அறிவுள்ளவனாக
எண்ணித் தோன்றுவான். (கொள்வான்)

சொல்லும் பொருளும்:
ஏவலும் – எடுத்துச் சொல்லுதல்
செய்கலான் – செய்யாதவன்
தான் தேறான் – தானாகத் தெளிந்து செய்யாதவன்
காணாதான் – அறிவில்லாதவன்

இகல்

அதிகார விளக்கம் : மற்றவர்களோடு கூடி வாழா தீய பண்பே இகல் எனப்படும்.

Question 3.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
Answer:
துன்பங்களில் மிகக் கொடிதான மனக்கசப்பு என்னும் பகையாகிய துன்பம் அழிந்து விட்டால், இன்பங்களில் பெரிய இன்பம் உண்டாகும்.
சொல்லும் பொருளும் :
இகல் – மனக்கசப்பால் வரும் பகை

குடிமை

அதிகார விளக்கம் : உயர்குடிப்பிறப்பின் சிறப்பை உணர்த்தும் அதிகாரம்

Question 4.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
Answer:
கோடி கோடியாய்ப் பொருளை அடுக்கிக் கொடுத்தாலும், அத்தகுப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கக் குறைவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.

சொல்லும் பொருளும்:
கோடி – கோடிக்கணக்கான பொருள்
குடிப்பிறந்தார் – உயர்குடிப்பிறந்தவர்
குன்றுவ செய்தல் இலர் – ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்யமாட்டார்.

சான்றாண்மை

அதிகார விளக்கம் : உயர்குணம் பொருந்திய சான்றோர்களின் பண்புகளையும் சிறப்புகளையும் கூறும்
அதிகாரம்

Question 5.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
Answer:
அன்பு, பழிக்கு நாணுதல், வெட்கப்படல், கொடுத்து உதவும் பண்பு இரக்கம், உண்மை, ஆகிய ஐந்தும் சான்றாண்மை என்னும் விதானத்தை (கூரையை) தாங்கும் தூண்களாகும்.

Question 6.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
Answer:
செயல் செய்யும் ஆற்றல் உடையவரின் பெரிய ஆற்றலே, பணிவுடன் நடத்தல் ஆகும். அதுவே, பகைவர்களையும் நண்பர்களாக்கும் சான்றோர் தம் ஆயுதமாகும்.

Quesiton 7.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்,
Answer:
சான்றாண்மைக்குக் கடல் என்று, மதிக்கப்படுகின்றவர்கள் சான்றோர். உலகமே அழியும் ஊழிக்காலம் வந்தாலும், தம் நிலையில் இருந்து வேறுபடாமல் இருப்பர்.

சொல்லும் பொருளும்:
நாண் – பழிக்கு நாணுதல்
ஒப்புரவு – அனைவரிடமும் இணக்கம்
மாற்றாரை – பகைவரை
பெயரார் – தன் நிலையில் மாறாதவர்
ஆழி – கடல்

நாணுடைமை

அதிகார விளக்கம் : தகாத செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படுதல்

Question 8.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
Answer:
பிறர் நாணத்தகுந்த பழிச் செயல்களுக்கு அஞ்சாமல், நாணம் இன்றி ஒருவன் இருப்பானாகில், அறக்கடவுள் நாணி அவனைக் கைவிட்டு விடும்.

சொல்லும் பொருளும்:
நாணம் – அஞ்சுதல், வெட்கப்படுதல்.

உழவு

அதிகார விளக்கம் : உழவுத் தொழிலின் மேன்மையையும், சிறப்பையும் கூறுவது

Question 9.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
Answer:
உலகம் பல தொழில்களைச் செய்து இயங்கினாலும் (சுழன்று வந்தாலும்), உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலை நம்பியே அதன் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் உழவுத்தொழிலே முதன்மையான சிறந்த தொழிலாகும்.

Question 10.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Answer:
பிற தொழில்கள் செய்யும் அனைவரையும் உழுபவரே தாங்கி நிற்பவர் ஆவார். எனவே உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ஆவார்.

சொல்லும் பொருளும்:
சுழன்று – இயங்கி
உழந்தும் – துன்பத்திற்கு உள்ளாகுதல்
தலை – முதன்மையான
எழுவாரை – பிற தொழில் செய்து வாழ்வோரை
பொறுத்து – தாங்கும்
ஆணி – அச்சாணி

Also Read : Chapter-7.1---Intiya-teciya-iranuvattil-tamilar-panku-Chapter-7-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen