SaraNextGen.Com

Chapter 8.6 - Yappilakkanam - Chapter 8 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம்

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 யாப்பிலக்கணம்

Question 1.
உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க.
Answer:

குறள்

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.

குறிப்பு:

நெடில் எழுத்து வந்தால் தனியாகவும், குறிலுடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவம், இரு
குறில் எழுத்துடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவும் பிரிக்க வேண்டும். அல்லது இரு குறில் எழுத்தையும் தனியாகப் பிரிக்க வேண்டும். ஆய்த எழுத்தையும் மெய்யெழுத்தாகவே கணக்கிட வேண்டும். ( ) அடைப்புக் குறியிட்ட எழுத்தை அலகிடலில் சேர்க்கக் கூடாது.

மெய்யெழுத்தை நீக்கி ஓர் எழுத்து மட்டும் இருந்தால் நேரசை என்றும் மெய்யெழுத்தை நீக்கி இரண்டு எழுத்து இருந்தால் நிரையசை என்றும் கணக்கிட வேண்டும்.

Question 2.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

Answer:

இக்குறட்பாவானது மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது.

Question 2.
பின்வரும் பாடல்களில் பயின்றுவரும் தொடைநயங்களை எடுத்து எழுதுக.
Answer:

இப்பாடலில் பயின்று வரும் தொடை நயங்கள் .

  • மோனை நயம்
  • எதுகை நயம்
  • இயைபுத் தொடை நயம்

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும்.
சான்று:

  • கொண்டல் – கொடிகள்
  • ண்ட – னக
  • அண்டர் – அழகர்

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

சான்று:

  • அண்டையில் கூடும்
  • படி தர மூடும்
  • தண்டலை நாடும்
  • அனம் விளை யாடும்

இவ்வாறு இயைந்து வருவதால் இயைபு ஆகும். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபுத் தொடை ஆகிய நயங்கள் உள்ளன.

வினாக்கள்:

Question 1.
உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர்நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க.
Answer:

  • மேகலா – மே/கலா – நேர் நிரை
  • குமரன் – கும/ரன் – நிரை நேர்
  • பிரியா – பிரி/யா – நிரை நேர்
  • அமிழ்தினி – அமிழ்/தினி – நிரை நிரை

Question 2.
மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் நான்கைக் குறிப்பிடுக.
Answer:

  • இரா / சரா / சன்
  • மணி / மா / றன்
  • மதி / மா / றன்
  • மணி / கண் | டன்

Question 3.
“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்”
இக்குறட்பாவில் பயின்று வரும் மோனை, எதுகைகளைக் கண்டறிக.
Answer:

  • தம் பொருள் – தம் தம்} முதல் எழுத்து ஒன்றி மோனை பயின்று வருகிறது. (அடிமோனை)
  • தம் பொருள் – தம் தம் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகையும் பயின்று வருகிறது.(அடி எதுகை)

Question 4.
தளையின் வகைகளை எழுதுக.
Answer:
தளையின் வகைகள் ஏழு ஆகும். அவை:

  • நேரொன்றாசிரியத் தளை
  • நிரையொன்றாசிரியத் தளை
  • இயற்சீர் வெண்டளை
  • வெண்சீர் வெண்டளை
  • கலித்தளை
  • ஒன்றிய வஞ்சித்தளை
  • ஒன்றாத வஞ்சித்தளை ஆகியவையாகும்.

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க.

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”
Answer:
ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.

அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

Question 1.
மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர் கூற்றாக மாற்றுக).
Answer:
“நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்.

Question 2.
தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம் என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக).
Answer:
தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.

Question 3.
மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
Answer:
காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).

Question 4.
அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக).
Answer:
அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

Question 5.
கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக).
Answer:
கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

அஞ்சல் அட்டையில் எழுதுக.

வார இதழ் ஒன்றில் படித்த கவிதையைப் பாராட்டி அந்த ஆசிரியருக்கு அஞ்சல் அட்டையில் கடிதம்
எழுதுக.
Answer:

நயம் பாராட்டுதல்.

திங்கள்முடி சூடுமலை
தென்றல் விளை யாடுமலை
தங்குமுகில் சூழுமலை
தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மை திரு
அருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதியமலை என்மலையே -குமரகுருபரர்
Answer:
முன்னுரை:
தமிழ் இலக்கியங்கள் உள்ளத்து இன்பத்தைப் பெருக்கும் ஆற்றல் படைத்தன அவை இயற்கையைப் போற்றுவதில் காலத்தைக் கடந்து முன் நிற்கின்றன. அந்த வகையில் பொதிய மலையைப் போற்றும் வண்ணம் அமைந்துள்ள குமரகுருபரரின் பாடலில் காணப்படும் இலக்கிய நயங்களை காண்போம்.

திரண்ட கருத்து:
நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.
அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மையக்கருத்து:
பொதிகை மலையின் இயற்கைப் பேரழகு, தமிழ் வளர்த்த மலை, அருவி சூழ்ந்த மலை மேகங்கள் தவழும் மலை எனப் பொதிகையின் அழகைக் குமரகுருபரர் மையமாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார். மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:
ங்கு முகில் – மிழ் முனி
ங்கயற்கண்ணி – ருள் சுரந்து

எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:
திங்கள் – தங்கு
ங்கயற் – பொங்கருவி

அணி நயம்:
பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:
அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

சான்று:
சூடு மலை, யாடு மலை, வாழு மலை

முடிவுரை:
குமரகுருபரரின் இப்பாடல் இன்பம் தரும் இன்சுவையுடன் அமைந்து பொதிகை மலையின் புகழைப் பறைசாற்றுகிறது. இது போன்ற பாடல்களைப் படித்து இன்புறுவாமாக.

மொழியோடு விளையாடு

Question 1.
பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.
Answer:

Question 2.
அகராதியில் காண்க.
Answer:
வயம் – வலிமை, வெற்றி, வேட்கை , பறவை, வசம், குதிரை, ஆடு, முயல்.
ஓதம் – ஈரம், வெள்ளம், கடல் அலை, ஒலி, பெருமை, வாதநோய்.
பொலிதல் – செழித்தல், பெருகுதல், மிகுதல், நீடுவாழ்தல், நிகழ்தல்.
துலக்கம் – விளக்கம், ஒளி, பளபளப்பு, மெருகு, தெளிவு.
நடலை – வஞ்சனை, துன்பம், பொய்மை, பாசாங்கு, அசைவு.

Question 3.
வினைத்தொகையை பொருத்தி எழுதுக.
Answer:
(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

  • வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.
  • தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
  • நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன.
  • மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது.
  • தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.

பொருத்துக:

நேர்/நேர்/நிரை – கருவிளங்காய்
நிரை/நிரை/நேர் – கூவிளம்
நேர்/நிரை – தேமாங்காய்
நிரை/நிரை – தேமாங்கனி
நேர்/நேர்/நேர் – கருவிளம்
Answer:
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நிரை/நேர் – கருவிளங்காய்
நேர்/நிரை – கூவிளம்
நிரை/நிரை – கருவிளம்
நேர்/நேர்/நேர் – தேமாங்காய்

Question 4.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:

கலைச்சொல் அறிவோம்

எழுத்துச் சீர்திருத்தம் – (Reforming the letters)
பெரியாரால் தமிழ்மொழியில் ஏற்படுத்தப்பட்டது.
எழுத்துரு – (font)
அச்சில் எழுத்துக்களின் வடிவமைப்பு அளவைக் குறிப்பது.

மெய்யியல் – (philosophy)
வாழ்வியல் உண்மைகளைத் தத்துவ இலக்கியமாக, கருத்துகளாக கூறுவது.

அசை – (syllable)
சொல்லைப் பிரித்தல் (சீர் பிரித்தல்).

இயைபுத்தொடை – (Rhyme)
செய்யுளில் அடிதோறும் இறுதிச் சொல் அல்லது எழுத்து ஒன்றி வருவது.

நிற்க அதற்குத்தக

ஒரு நல்ல தோழியாக/தோழராக நண்பர்களுக்குச் செய்யவேண்டியது.
Answer:
அ) எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது.
ஆ) விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல்.
இ) நல்ல பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தல்.
ஈ) குறைகளை நயமுடன், புண்படா வகையில் சுட்டிக்காட்டுதல்.
உ) இடர்வரும் வேளையில் இனிமையான, இதமான சொற்களால் தேற்றுதல்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு
Answer:
ஈ) பிறப்பு

குறுவினா

Question 1.
அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
அசை இரு வகைப்படும். அவை நேரசை, நிரையசை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
அ) சொல்
ஆ) பொருள்
இ) யாப்பு
ஈ) அணி
Answer:
இ) யாப்பு

Question 2.
சீர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு

Question 3.
காய்ச்சீர்களை ………….. என்று அழைக்கிறோம்.
அ) கலித்தளை
ஆ) இயற்சீர்கள்
இ) வெண்சீர்கள்
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை
Answer:
இ) வெண்சீர்கள்

Question 4.
தளையின் வகைகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஏழு
இ) ஆறு
ஈ) ஐந்து
Answer:
ஆ) ஏழு

Question 5.
இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது ……………. ஆகும்.
அ) சீர்
ஆ) அடி
இ) தளை
ஈ) தொடை
Answer:
ஆ) அடி

Question 6.
அடியின் வகைகள் எத்தனை?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 7.
தொடை என்பதன் பொருள் யாது?
அ) எடுத்தல்
ஆ) தொடுத்தல்
இ) முடித்தல்
ஈ) எழுதுதல்
Answer:
ஆ) தொடுத்தல்

Question 8.
தொடையின் வகைகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) பத்து
இ) ஏழு
ஈ) ஐந்து
Answer:
அ) எட்டு

Question 9.
பொருத்திக் காட்டுக:
i) நேர் – 1. பிறப்பு
ii) நிரை – 2. காசு
iii) நேர்பு – 3. மலர்
iv) நிரைபு – 4. நாள்
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 4, 3
ஈ) 4, 2, 3, 1
Answer:
ஆ) 4, 3, 2, 1

Question 10.
பொருத்திக் காட்டுக:
i) மா முன் நேர் – 1. நிரையொன்றாசிரியத்தளை
ii) விள முன் நிரை – 2. நேரொன்றாசிரியத்தளை
iii) மா முன் நிரை – 3. வெண்சீர் வெண்டளை
iv) காய் முன் நேர் – 4. இயற்சீர் வெண்டளை
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஆ) 2, 1, 4, 3

Question 11.
காய் முன் நிரை வருவது ………
அ) கலித்தளை
ஆ) இயற்சீர் வெண்டளை
இ) வெண்சீர் வெண்டளை
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை
Answer:
அ) கலித்தளை

Question 12.
ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது ……
அ) அளவடி
ஆ) நெடிலடி
இ) கழிநெடிலடி
ஈ) சிந்தடி
Answer:
அ) கழிநெடிலடி

Question 13.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும் –
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) மோனை
ஈ) அந்தாதி
Answer:
ஆ) இயைபு

Question 14.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் …………….
அ) எதுகை, மேனை
ஆ) அளபெடை, இரட்டை
இ) இயைபு, முரண்
ஈ) அந்தாதி, செந்தொடை
Answer:
அ) எதுகை, மோனை

Question 15.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம் …………
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

குறுவினா

Question 1.

யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • யாப்பின் உறுப்புகள் ஆறு ஆகும்.
  • அவை: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியனவாகும்.

Question 2.
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • மூன்று வகைப்படும்
  • குறில், நெடில், ஒற்று என்பனவாகும்.

Question 3.
அசை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
Answer:

  • எழுத்துகளால் ஆனது ‘அசை’ எனப்படும்.
  • ஒரெழுத்தோ , இரண்டெழுத்தோ நிற்பது ‘அசை’ ஆகும்.
  • இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

Question 4.
சீர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • சீர்கள் நான்கு வகைப்படும்.
  • அவை: ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்.

Question 5.
ஈரசைச் சீர்களுக்குரிய வேறுபெயர்கள் யாவை?
Answer:

  • இயற்சீர்
  • ஆசிரிய உரிச்சீர்

சிறுவினா

Question 1.
அடிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • அடிகள் ஐந்து வகைப்படும்.
  • அவையாவன: இரண்டு சீர்களை உடையது குறளடி
  • மூன்று சீர்களை உடையது சிந்தடி
  • நான்கு சீர்களை உடையது அளவடி
  • ஐந்து சீர்களை உடையது நெடிலடி
  • ஆறும் அதற்கு மேற்பட்ட சீர்களை உடையது கழிநெடிலடி முதலியனவாகும்.

Question 2.
தொடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொடை எட்டு வகைப்படும். அவையாவன:

· மோனை

· எதுகை

· இயைபு

· முரண்

· இரட்டை

· அளபெடை

· அந்தாதி

· செந்தொடை

Also Read : Chapter-9.1---Virivakum-alumai-Chapter-9-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen