SaraNextGen.Com

Chapter 8.3 - Kalakkanitam - Chapter 8 10th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Detailed Solutions Of Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Question 1.
கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க.

Answer:
நதியின் பிழையன்று:

  • இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் சினம் கொண்டான்.
  • அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே, விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்து நிறுத்தி இராமன் கூறியது இது.
  • நதியின் பிழை எதுவும் அல்ல நல்ல தண்ணீர் இல்லாதது.
  • நறும்புனல் இன்மை என்பது, நதியில் நீர் இருக்கிறது. ஆனால் நல்லதாக இல்லை . அதுபோல நான் கானகம் செல்வது தசரதன் பிழையும் அன்று. அன்போடு நம்மை வளர்த்த கைகேயின் மதியின் பிழையும் அன்று.
  • பரதன் பிழையும் இதில் இல்லை . விதியின் பிழை. நீ ஏன் இதற்காகக் கோபப்படுகிறாய். “சினமும் வேகமும் தவிர்”
  • இதைப் போலவே கண்ணதாசனின் பாடலான “நதிவெள்ளம் காய்ந்து விட்டால்….” பாடல் உணர்த்துவதும் விதியைத் தான்.
  • தவறு செய்யாத நாயகன் மீது பழி சுமத்தப்படும் சூழலில் நதியின் நீர்மையைப் போல மானுடர் உள்ளங்களில் இருக்கும் நற்பண்புகள், மனசாட்சி உண்மை , பொய் அறிதல் வற்றிவிடுகிறது.
  • நதி வற்றிவிட்டால் அது நதியின் குற்றம் அல்ல. விதியின் குற்றமே.
  • அதைப்போலவே மானுடர் பண்புகள் மாற்றம் பெற்று நாயகன் மீது சுமத்தப்பட்ட பழி பாவங்களும் விதி செய்த பிழையேயன்றி வேறு யாருமில்லை என்பதை கண்ணதாசன் கூறியுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காலக் கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ……….
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது.
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என் மனம்.
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்.
Answer:
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது

குறுவினா

Question 1.
“கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது.”
அ) அடி எதுகையை எழுதுக.
ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக: கொள்க, குரைக்க.
Answer:
அடி எதுகை:
கொள்வோர்
ள்வாய்

இலக்கணக்குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்று

நெடுவினா

Question 1.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
Answer:
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படுபொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக! – கண்ண தாசன்

“காலக்கணிதம்”

திரண்ட கருத்து:
கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.

மோனை நயம்:
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
கவிஞன்….
கருப்படு….
இவை சரி
இவை தவறாயின் … மோனை நயம் பெற்று வந்துள்ளது.

எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் – சீர் எதுகை நயம் அமைந்துள்ளது.

முரண்:
நாட்டுக்கு அரண்
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப்படுவது முரண் ஆகும். ஆக்கல் x அழித்தல் என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.

இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
…புகழுடைத் தெய்வம்
….. பொருளென் செல்வம் – இயைபு நயமும் உள்ளது.

அணி நயம்:
கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு இணையாக
யானோர் காலக்கணிதம்
நானோர் புகழுடையத் தெய்வம்
என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.

சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கணிதம் – உருவகம்
ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
கொள்வோர் – வினையாலணையும் பெயர்
அறிந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

பலவுள் தெரிக

Question 1.
காலத்தை வெல்பவன் ………………………..
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
Answer:
இ) கவிஞன்

Question 2.
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
அ) முத்தரசன்
ஆ) முத்தையா
இ) முத்துக்குமார்
ஈ) முத்துசாமி
Answer:
ஆ) முத்தையா

Question 3.
கண்ணதாசன் பிறந்த மாவட்டம் ………………………..
அ) இராமநாதபுரம்
ஆ) நெல்லை
இ) புதுக்கோட்டை
ஈ) சிவகங்கை
Answer:
ஈ) சிவகங்கை

Question 4.
கண்ண தாசன் பிறந்த ஊர் – ………………………..
அ) சிறுகூடல்பட்டி
ஆ) கூடல் மாநகர்
இ) முக்கூடல்
ஈ) சிவகங்கை
Answer:
அ) சிறுகூடல்பட்டி

Question 5.
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………………………..
அ) 1939
ஆ) 1942
இ) 1949
ஈ) 1950
Answer:
இ) 1949

Question 6.
கண்ண தாசன் எழுதிய முதல் திரைப்படப் பாடல்………………………..
அ) வாழ நினைத்தால் வாழலாம்
ஆ) கலங்காதிரு மனமே
இ) மலர்களைப் போல் தங்கை
ஈ) உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
Answer:
ஆ) கலங்காதிரு மனமே

Question 7.
கண்ணதாசன் திரைப்படப் பாடல் வாயிலாக மக்களுக்கு………………………..உணர்த்தினார்.
அ) மெய்யியலை
ஆ) உலகியலை
இ) ஆன்மீகத்தை
ஈ) இலக்கணத்தை
Answer:
அ) மெய்யியலை

Question 8.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ………………………..
அ) மாங்கனி
ஆ) இயேசு காவியம்
இ) சேரமான் காதலி
ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
இ) சேரமான் காதலி

Question 9.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) கண்ண தாசன்
இ) வைரமுத்து
ஈ) மேத்தா
Answer:
ஆ) கண்ண தாசன

Question 10.
கண்ணதாசன் அட்சயப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
அ) தத்துவம்
ஆ) கொள்கை
இ) ஞானம்
ஈ) பண்பாடு
Answer:
அ) தத்துவம்

Question 11.
கண்ணதாசன் தன் வாக்கு மூலங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறார்?
அ) தன் நூல்களை
ஆ) உரைகளை
இ) இதழ்களை
ஈ) வளமார் கவிகளை
Answer:
ஈ) வளமார் கவிகளை

Question 12.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்றவர் யார்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதி
இ) கண்ண தாசன்
ஈ) பெரியார்
Answer:
இ) கண்ண தாசன்

Question 13.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – இவ்வடிகளில் அமைந்த நயம்.
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
Answer:
ஆ) மோனை

Question 14.
‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?
அ) என்னுடல் x என்மனம்
ஆ) புல்லரிக்காது x இறந்துவிடாது
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்
ஈ) புகழ்ந்தால் x என்மனம்
Answer:
இ) புகழ்ந்தால் x இகழ்ந்தால்

Question 15.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Question 16.
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

Question 17.
‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்’ – எனக் கூறியவர் ………………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ண தாசன்
Answer:
ஈ) கண்ண தாசன்

குறுவினா

Question 1.
கவிஞன் என்பவன் யார்?
Answer:
மனம் என்னும் வயலில் சொல்லோர் கொண்டு உழுது, சிந்தனை விதைகளைத் தூவி, மடமை என்னும் களை பறித்து, தத்துவ நீர்ப் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவனே கவிஞன் ஆவான்.

Question 2.
எவர் கூறாத ஒன்றைத் தான் கூற முனைவதாக கண்ணதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
கம்பன், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத சிலவற்றைச் சொல்லிட முனைவேன் (முயல்வேன்) என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

Question 3.
எவையெல்லாம் மாறாதவை?
Answer:
காடு, மேடு, மரம், கல், வனவிலங்குகள் ஆகியவை மாறாதவையாகும்.

Question 4.
கண்ணதாசனின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:
பாடல்கள் புனைவதில், இலக்கிய உலகில் சிறந்த கவிஞர், பேச்சாளர், இதழாளர் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

Question 5.
கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
Answer:
கண்ணதாசனின் பெற்றோர் : சாத்தப்பன், விசாலாட்சி ஆவர்.

Question 6.
‘ஆக்கல் அளித்தல், அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை’ – அவனும் யானும் யாவர்?
Answer:

  • அவன் என்பது இறைவன் (இறைவன்)
  • யான் என்பது கவிஞனாகிய கண்ணதாசன்.

Question 7.
‘கருப்படுப் பொருளை உருப்பட வைப்பேன்’ யார்?
Answer:
கருப்படுப் பொருளை உருப்பட வைப்பவர் கவிஞர் (கண்ணதாசன்).

Question 8.
‘உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ – இத்தொடர் பொருள் ஆழத்தை விளக்குக.
Answer:
ஒருவர் தன் வாயால் புகழ்வதும் இகழ்வதும் நம் உடம்பின் மீது வந்து சேராது.

சிறுவினா

Question 1.
கண்ணதாசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : முத்தையா
பிறப்பு : 24.6.1927
பெற்றோர் : சாத்தப்பன் – விசாலாட்சி
ஊர் : சிவகங்கை – சிறுகூடல்பட்டி
சிறப்பு : தமிழக அரசவைக் கவிஞர்
சாகித்திய அகாதெமி விருது – இயேசு காவியம்
புனைப்பெயர் : வணங்காமுடி, ஆரோக்கியநாதன், காரைமுத்துப்புலவர்.
இறப்பு : 17.10.1981

Question 2.
காலக்கணிதம் கவிதையில் இடம் பெறும் முரண் சொற்களை எழுதுக.
Answer:

  • சரி  x  தவறு
  • புகழ்ந்தால்  x  இகழ்ந்தால்
  • ஆக்கல் x அழித்தல்
  • தீமை  x  நன்மை
  • அவனும் x யானும்
  • தொடக்கம்  x  முடிவு
  • உண்டாயின்  x  இல்லாயின்

Question 3.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல்:
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நான் காலமாகிய கணிதம் போன்றவன். கவிதைகளில் கருவான பொருளைக் கூட பயன்படும் பொருளாக ஆக்குவேன் என்கிறார் கவிஞர்.

Question 4.
‘நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல் :
கண்ணதாசன் கவிதைத்தொகுப்பில் ‘காலக்கணிதம்’ என்னும் தலைப்பில் இவ்வரிகள் கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது.

பொருள் விளக்கம்:
கவிஞனாகிய நானே அனைத்தின் தொடக்கம் ஆவேன். நானே முடிவும் ஆவேன். நான் சொல்வது தான் நாட்டினுடைய சட்டம் ஆகும்.

Question 5.
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களைக் கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
Answer:
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’

– தன்னை ஒருவர் புகழ்வதினால் பெருமகிழ்ச்சியடைவதோ, இகழ்வதினால் மனம் வருந்துவதோ இல்லை என்பது பண்பட்ட மனத்திற்குச் சான்றாகிறது.

‘செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!”

– என்பதிலிருந்து பணமோ, பதவியோ தன்னை ஒருபோதும் அடிமைப்படுத்த இயலாது என்பதற்குச் சான்றாக அமைகிறது.

‘எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!’

– நல்லது எது கெட்டது எது என்பதறிந்து பகுத்தறிவுடன் செயல்படுவதற்குச் சான்றாகிறது.

நெடுவினா

Question 1.
கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’ கவிதைக் கருத்துகளில் உன்னைக் கவர்ந்ததைச் சுருக்கி எழுதுக.
Answer:

· கவிஞன் நான் ஓர் காலக்கணிதம் கருவாகிய பொருளை உருப்பட வைப்பேன். பூமியில் புகழுக்கு உரிய தெய்வம் நான்.

· பொன்னைவிட உயர்ந்தது என் செல்வம். ஒரு செயல் சரி என்றால் எடுத்துச் சொல்வேன்; தவறு என்றால் எதிர்ப்பேன். அதுதான் என் வேலை.

· முத்தொழில் நானும் அவனும் மட்டுமே அறிந்தது. செல்வர் வாளில் சிறைப்பட மாட்டேன். பதவி வாளுக்குப் பயப்பட மாட்டேன். அன்பும், விருப்பமும் மிகுந்து ஆசை தருவதை விரும்புவேன்.

· என்னிடம் உண்டு என்றால், பிறர் உண்ணத் தருவேன். இல்லை என்றால் பிறர் இல்லம் தட்டுவேன். வண்டு போல மாறி மலரில் அமர்ந்து, குடித்த தேனை ஊர்ப்புறம் தருவேன்.

· கம்பன், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் சொல்லாத கருத்துகளைச் சொல்லிட முயற்சிப்பேன். என்னுடல் புகழ்ந்தால் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது.

· என் கவிதை வாக்குமூலம் அதை வைத்து இறந்த பிறகு தீர்ப்பை எழுதுங்கள். கல், மரம், விலங்காக மாற நான் காட்டு விலங்கு கிடையாது.

· மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். நன்மை, தீமை அறிந்து ஏற்கும் என் சாலை.

· தலைவர் மாறுவார்கள், தர்பார் மாறும், தத்துவம் மட்டும் குறையாத அட்சயப் பாத்திரம் ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்ளட்டும். குரைப்போர் குரைக்கட்டும்.

· வாய்ச்சொற்கள் உடம்பினைத் தொடாது. நானே தொடக்கம் நானே முடிவு. நான் சொல்வதுதான் நாட்டின் சட்டம்.

Also Read : Chapter-8.4---Iramanucar-(natakam)-Chapter-8-10th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen