SaraNextGen.Com

Chapter 2 - Ariva? Panpa? Kavitaip pattimanram - Chapter 2 Term 1 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
நற்றமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நல் + தமிழ்
ஆ) நற் + றமிழ்
இ) நன்மை + தமிழ்
ஈ) நல்ல + தமிழ்
Answer:
இ) நன்மை + தமிழ்

Question 2.
‘உலகம்’ என்னும் பொருளைக் குறிக்காத சொல்
அ) வானம்
ஆ) அண்டம்
இ) செகம்
ஈ) அகிலம்
Answer:
அ) வானம்

Question 3.
அறிவு + ஆயுதம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) அறவாயுதம்
ஆ) அறிவாயுதம்
இ) அறிவு ஆயுதம்
ஈ) அறிவாய்தம்
Answer:
ஆ) அறிவாயுதம்

Question 4.
புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………….
அ) இகழ்
ஆ) மகிழ்
இ) திகழ்
ஈ) சிமிழ்
Answer:
அ) இகழ்

Question 5.
வெளிச்சம் – இச்சொல்லைக் குறிக்காத சொல் ……
அ) ஒளி
ஆ) தெளிவு
இ) விளக்கு
ஈ) இருள்
Answer:
ஈ) இருள்

. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) செந்தமிழ் – …………………… + ……………………
ஆ) கவியரங்கம் -………………….. + ……………………
Answer:
அ) செந்தமிழ் – செம்மை + தமிழ்
ஆ) கவியரங்கம் – கவி + அரங்கம்

. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • அப்துல் கலாம்
  • தாமஸ் ஆல்வா எடிசன்.

Question 2.
பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?
Answer:

  • புத்தர்
  • .திருவள்ளுவர்.

Question 3.
உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?
Answer:
உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான், ஔவையாருக்குக் கொடுத்தார்.

Question 4.
நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
அறிவும் பண்பும் கண்ணின் இருவிழிக்கும் சமம் ஆகும். ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும். எனவே இவை இரண்டுமே சிறப்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.

Question 5.
ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக.
கண்,………………………………………………………………..
Answer:
கண், காது, வாய், மூக்கு, மெய்(உடல்).

Question 6.
தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:

  • செந்தமிழ்
  • நறுந்தேன்
  • செகம் போற்றும் செந்தமிழ்
  • முத்தமிழ்
  • நற்றமிழ்.

. சிந்தனை வினாக்கள்.

Question 1.
கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? ஏன்?
Answer:
(i) கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் கல்வியே சிறந்தது என நான் கருதுகின்றேன்.

ஏனென்றால், செல்வம் அழிந்து விடும். வீரம் வயதானால் குறைந்து விடும். அழியாமல், குறையாமல் இருப்பது கல்வி மட்டுமே! எனவே கல்வியே சிறந்தது என்பேன்.

(ii) நிலையற்ற செல்வம், வீரம் ஆகியவற்றைவிட நிலையான கல்வியே சிறந்தது.

Question 2.
“வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருளை உம் சொந்த நடையில் வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
“வெறும் பண்பை வைத்துக் கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருள் வெற்றுப் பண்பை வைத்து பெரிய பந்தல் போடமுடியுமா? என்பதே! வெறும் பண்பை வைத்துக் கொண்டு கீற்றுப் பந்தல் போட முடியாமல் போகலாம். ஆனால் வாழ்க்கைப் பந்தல் போடலாம்.

கற்பவை கற்றபின்

Question 1.
அறிவு, பண்பு – இவற்றில் எது சிறந்தது என நீ கருதுகிறாய்?
Answer:
அறிவு, பண்பு- இவற்றில் பண்பே சிறந்ததாக நான் கருதுகிறேன்.

Question 2.
‘அறிவு தான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ – இது பற்றி உன் கருத்து என்ன?
Answer:
‘அறிவு தான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ என்பது உண்மை . மனிதனின் அறிவு தான் அவனைச் சிந்திக்க வைத்து, இன்று நாகரிக மனிதனாக உருவாக்கியது. ஆதிகால மனிதன் படிப்படியான அறிவு வளர்ச்சியால் தான் இன்று மாற்றம் கொண்டு உலகம் ஆள்கின்றான்.

Question 3.
நாட்டின் (ஊரின், வீட்டின்) வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? வகுப்பறையில் சொற்போர் நிகழ்த்துக.
Answer:
நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள்
நல்லவர்களா? வல்லவர்களா?

நல்லவர்கள் : வணக்கம்! தந்தை பெரியார், சுவாமி விவேகானந்தர், காந்தியடிகள், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் தங்கள் நற்பண்புகளால் சிறந்து, தன்னலம் இல்லாமல் நாட்டுமக்கள் நலனுக்காகவே பாடுபட்டவர்கள். நாடு விடுதலை பெறவும், தீய வழிகளில் மக்களைச் செல்லவிடாமல் நல்வழி காட்டி உழைத்தவர்களால் தான் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு
வகிப்பவர்கள் நல்லவர்களே!

வல்லவர்கள் : வணக்கம் ! தாமஸ் ஆல்வா எடிசன், சர்.சி.வி. இராமன், கணித மேதை இராமானுஜம், டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் வல்லவர்கள். தங்கள் கண்டுபிடிப்பால் உலகமே போற்றும் வண்ணம் நம் நாட்டை அறிவியல் துறையில் உயர்த்தி இருக்கிறார்கள். எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள், வல்லவர்களே!

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
தனித்துவமிக்க என்று நடுவரால் குறிப்பிடப்படுபவர் …
அ) சலீமா
ஆ) இன்சுவை
இ) அருளப்பன்
ஈ) மதியொளி
Answer:
ஆ) இன்சுவை

Question 2.
சொல்லழகி என்று நடுவரால் குறிப்பிடப்படுபவர் ……….
அ) அருளப்பன்
ஆ) இன்சுவை
இ) சலீமா
ஈ) மதியொளி
Answer:
இ) சலீமா

Question 3.
‘அக்னி ‘ தந்தவர் ……………
அ) வள்ளுவர்
ஆ) அப்துல் கலாம்
இ) புத்தர்
ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
Answer:
ஆ) அப்துல் கலாம்

விடையளி :

Question 1.
பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணாக்கர் யாவர்?
Answer:

  • இன்சுவை
  • அருளப்பன்
  • மதியொளி
  • சலீமா

Question 2.
பட்டிமன்றத் தலைப்பு யாது?
Answer:
பட்டிமன்றத் தலைப்பு : அறிவா? பண்பா?

Also Read : Chapter-3---Enna-cattam-Chapter-3-Term-1-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen