SaraNextGen.Com

Chapter 8 - Peyarccol, vinaiccol - Chapter 8 Term 1 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

Question 1.
கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.
(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ண ன், சம்சுதீன், ஜெனிபர், காட்டினார், ஓடியது, முயல்)

Answer:

. பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. மயில் தோகையை விரித்து ஆடியது.
  2. வாணி கட்டுரை எழுதினாள்.
  3. இளம்பிறை உணவு சமைத்தாள்.
  4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்.
  5. கொத்தனார் வீடு கட்டினார்.

Answer:

இ. கதையில் வரும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுக.

காட்டில் புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது மான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது, வேடன் விரித்திருந்த வலையில் புலி சிக்கிக் கொண்டது. வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான். அப்பொழுது புலி வேடனைப் பார்த்து, என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப் போய்விடுகிறேன் என்று கெஞ்சியது. அதற்கு வேடன். அதெல்லாம் முடியாது’ என்று கூறினான்.

உனக்கு இரக்கமே இல்லையா? என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? எனக் கேட்டது புலி. அதற்கு வேடன் நீ ஏன் மானைத் துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு நீதியா? எனக் கேட்டான். புலி அமைதியாய் இருந்தது.
Answer:

கற்பவை கற்றபின்

Question 1.
ஒரு சொல்லைப் படித்தவுடன அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா எனப் பகுத்து அடையாளம் காண்க.
Answer:
ரு சொல்லைப் படித்தவுடன் அது பெயரா, செயல் நிகழ்வா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறகு ஒரு பெயராக இருந்தால் பெயர்ச் சொல் என்றும், செயல் நிகழ்வாக இருந்தால் வினைச்சொல் என்றும் அடையளம் காணலாம்.

Question 2.
நாம் பேசும் தொடரில் எது பெயர்ச்சொல், வினைச்சொல் எனக் கூறுக.
Answer:
கண்ணா சாப்பிட்டாயா? எனக் கேட்கிறோம்.
அதில் கண்ணா என்பது பெயர்ச்சொல்.
அதில் உள்ள ‘சாப்பிட்டாயா’ என்பது வினைச்சொல்.

Question 3.
பத்தியைப் படித்து எது பெயர்ச்சொல், வினைச்சொற்களை அடிக்கோடிட்டு அடையாளம் கண்டு கூறுக.
பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்டேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
Answer:

கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
பெயர்ச்சொல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
Answer:
ஒன்றன் இயற்பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்

Question 2.
வினைச்சொல் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு செயலைச் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு : ஓடினான், விழுந்தது, எழுதினான்.

மொழியை ஆள்வோம்

. கேட்டல் :

Question 1.
இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் இடம்பெறும் சிறப்புப் பேச்சுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் இடம்பெறும் சிறப்புப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ வேண்டும்.

Question 2.
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஆசிரியர் உரையைக் கேட்டு வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

. பேசுதல்

Question 1.
நமது கல்வி உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றி அறிந்து வந்து பேசுக.
Answer:
வணக்கம். நமது கல்வி உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் பற்றிப் பேசுகின்றேன். கல்வி என்பது நமக்குக் கண் போன்றது ஆகும். ஏழ்மை, அறியாமை, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் காரணமாக நம் நாட்டின் கல்வி வளர்ச்சி தடைபெற்றது. அத்தடைகளைத் தகர்த்து கல்விக்குக் குரல் கொடுத்த தலைவர்கள் நம் நாட்டில் ஏராளம். காந்திஜி தாய்மொழிக் கல்விக்காகப் போராடி வெற்றி கண்டார்.

அண்ணல் அம்பேத்கரும் தந்தைப் பெரியாரும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி கிடைக்கப் போராடினர். பழங்குடி மக்கள் கல்வி பெற அயோத்திதாசர் போராடினார். கல்விக் கண் தந்தவர் காமராசர். தெருதோறும் பள்ளிகளைத் திறந்து இலவச மதிய உணவு கொடுத்து ஏழைகள் கல்வி பெற உதவினார். அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் கொள்ளச் செய்தார். அவர்களின் கனவு நனவாக நன்றாக கல்வி கற்போம்.

Question 2.
‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உம் சொந்த நடையில் பேசுக.
Answer:
எல்லா வளமும் புதைந்துள்ள மொழி நம் தாய்மொழி. அதன் வழியிலேயே நாம் கல்வி பெறுவது சிறப்பு. ஒளவையாரும் கம்பரும் அவரவர் தாய்மொழியால் தான் சிறந்தனர். எனவே, சிறந்த நம் தாய்மொழியிலேயே கல்வி பெறுவோம். அப்போதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக மாற முடியும்.

. படித்தல் :

Question 1.
செய்யுளைப் பொருள் விளங்கப் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்யுளைப் பொருள் விளங்கப் படித்து மகிழ்க.

Question 2.
புத்தகப் பூங்கொத்து நூலிலிருந்து நற்பண்பை விளக்கும் ஏதேனும் ஒரு கதையைப் படித்துக் காட்டுக.
Answer:
நீதிக் கதைகள் :
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான்.

வெற்றி பெற்ற மன்னர் “உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்கமால் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும், “இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது” என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றனர். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

. எழுதுதல் :

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:

  1. களர்நிலம்
  2. கற்றவர்
  3. மறுமை
  4. தமிழாசிரியர்
  5. நல்வழி
  6. உயிர்நாடி
  7. தொலைக்காட்சி
  8. அறிவுத்தெளிவு
  9. வளம்பெறும்
  10. வளர்ச்சி

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. முன்னேற்றம் ………………………..
2. புதுமை ………………………..
3. வாழ்க்கை ………………………..
4. தொலைக்காட்சி ………………………..
Answer:
1. முன்னேற்றம் – நாட்டின் முன்னேற்றம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் உள்ளது.
2. புதுமை – அறிவியலில் ஏற்படும் புதுமைகளை நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
3. வாழ்க்கை – மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.
4. தொலைக்காட்சி – செய்திகளை உடனுக்குடன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

Question 3.
கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக. எ.கா. செழித்தால் நாடு காடு செழிக்கும்.
காடு செழித்தால் நாடு செழிக்கும்.

1. கண்கள் நாட்டின் பெண்கள்
Answer:
பெண்கள் நாட்டின் கண்கள்.

2. முதுகெலும்பு நாட்டின் விவசாயமே.
Answer:
விவசாயமே நாட்டின் முதுகெலும்பு

3. தரும் உழைப்பே உயர்வு
Answer:
உழைப்பே உயர்வு தரும்.

4. போன்றது பொன் காலம்
Answer:
காலம் பொன் போன்றது.

5. துளி வெள்ளம் பெரு சிறு
Answer:
சிறுதுளி பெரு வெள்ளம்.

4. கவிதையை நிறைவு செய்க.

எல்லாம் தரும் கல்வி – வாழ்வில்
ஏற்றம் தரும் கல்வி
கற்றார் நிலை உயர்த்தும் – அறிவில்
ஏற்றம் தரும் கல்வி.
………………………  ………………………  ………………………
………………………  ………………………  ………………………
Answer:
எல்லாம் தரும் கல்வி – வாழ்வில்
ஏற்றம் தரும் கல்வி
கற்றார் நிலை உயர்த்தும் – அறிவில்
ஏற்றம் தரும் கல்வி.
வளம் தரும் கல்வி – என்றும்
நலம் தரும் கல்வி.

5. குறிப்புகளைப் பயன்படுத்தி கதை எழுதுக. பொருத்தமான தலைப்பைத் தருக.
நான்கு வணிகர்கள் – பஞ்சு விற்றல் – எலித்தொல்லையால் பூனை வாங்குதல் – பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாத்தல் – தண்டை – கொலுசு அணிவித்தல் – பூனையின் காலில் புண் ஏற்படுதல் – அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட்ட காலில் எண்ணெய் தோய்ந்த துணியைச் சுற்றிவைத்தல் – பூனை அடுப்பின் அருகில் செல்லல் – எண்ணெய் தோய்ந்த துணியில் தீப்பற்றுதல் – பூனை பஞ்சு மூட்டைகளின் மீது ஓடுதல் – மூட்டையில் தீப்பற்றுதல் – மற்ற மூவரும் வழக்கு தொடுத்தல் – நீதிபதி தீர்ப்பு வழங்கல் – அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் எனக் கேட்டல் – மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது எனக் கூறல் – மற்ற மூவரும் நட்டஈடு கொடுக்கவேண்டும் என வலியுறுத்தல்.
Answer:
ஓர் ஊரில் நான்கு வணிகர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பஞ்சு விற்றனர். எலித் தொல்லையால் பூனை ஒன்றை வாங்கினர். பூனையின் ஒவ்வொரு காலையும் ஒருவர் பாதுகாக்க வேண்டும் என்பது நிபந்தனை. பூனையின் காலில் தண்டை மற்றும் கொலுசை அணிவிக்கின்றனர். அதனால் பூனையின் காலில் புண் ஏற்படுகின்றது. அந்தக் காலுக்குரிய வணிகன், புண் ஏற்பட காலில் எண்ணெய் தோய்ந்த துணியில் கட்டுப் போடுகின்றான். பூனை பஞ்சு மூட்டை மீது ஏறி ஓடியது. பஞ்சு மூட்டையில் தீப்பற்றிக் கொள்கின்றது. பஞ்சு மூட்டை எரிந்ததால், மற்ற மூவரும் வழக்கு தொடுக்கின்றனர். நீதிபதி நால்வரையும் விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றார். அடிபட்ட காலால் பூனை எப்படி ஓடும் என்றும், மற்ற மூன்று கால்களின் துணையின்றி ஓட இயலாது. எனவே, மற்ற மூவரும் தான் நட்டஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு கூறினார்.
தலைப்பு : நல்ல தீர்ப்பு

மொழியோடு விளையாடு

முதலில் இருந்து படித்தாலும் முடிவில் இருந்து படித்தாலும் பொருள் மாறாமல் உள்ள சொற்றொடர்களைப் படித்து மகிழ்க.

எ.கா. தேரு வருதே மோரு வருமோ
மோரு வருமோ தேரு வருதே

Answer:

மாறுமா கைரேகை மாறுமா
மோரு தாரு மோ
வா கற்க வா
மாடு சாடு மா
சேர அரசே
தோடு ஆடுதே
மேக ராகமே
மேள தாளமே

மீன்பிடிப்போம் வாருங்கள்

1. நெருப்பு -………………………  ………………………  ……………………… ………………………
2. கதிரவன் – ………………………  ………………………  ……………………… ………………………
3. சந்திரன் – ………………………  ………………………  ……………………… ………………………
Answer:
1. நெருப்பு – கனல், தீ, தணல், அணல்
2. கதிரவன் – பகலவன், ஆதவன், சூரியன், பரிதி
3. சந்திரன் – மதி, நிலா, திங்கள், அம்புலி

சொல் ஏணி அமைப்போம்

சொல்லின் இறுதியில் முடியும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அமையும் மற்றொரு சொல்லை எழுதிச் சொல்லேணி அமைக்க.

Answer:

வருணிப்போம்

படத்தைப் பார்த்து வருணனைச் சொல்லுடன் படத்தில் காணும் உயிரினங்களின் பெயரை பெயரை எழுதுக.

எ.கா. வண்ணம் வண்ண மலர்கள்
தாவி ஓடும் முயல்.
1. ……………………………………………………………………..
2. ……………………………………………………………………..
3. ……………………………………………………………………..
4. ……………………………………………………………………..
5. ……………………………………………………………………..
Answer:
எ.கா. வண்ணம் வண்ண மலர்கள்
தாவி ஓடும் முயல்.
1. உயர உயரப் பறக்கும் பறவை.
2. வண்ண வண்ண நிறமாய்ப் பட்டாம்பூச்சி
3. தந்திரம் செய்யவே காத்திருக்கும் நரி.
4. தத்தி ஓடும் புள்ளி மான்
5. பச்சைப் புல்மேயும் கலைமான்.

பயணத்தில் ஒரு நாள்

படங்களுக்குரிய சொற்களை எழுதிப் பத்தியை முழுமையாக்குக.

Answer:
அப்துல் பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டி வீட்டிற்குத் தன் அம்மாவுடன் பேருந்தில் சென்றான். நடத்துனரிடம் இருந்து பயணச்சீட்டுகளை அம்மா பெற்றுக் கொண்டார்.

அப்துல் சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். பேருந்து வேகமாகச் சென்றது. மரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பின்னோக்கி ஓடுவது போல் இருந்ததைக் கண்டு வியப்படைந்து தன் அம்மாவையும் பார்க்கச் சொன்னான். வெளியில் தூரத்தில் தெரிந்த இயற்கைக் காட்சிகண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்தது.

மலையிலிருந்து துள்ளலோடு விழுந்து பாய்கின்ற அருவியின் வேகம் அப்துலின் உள்ளத்தையும் துள்ளிக் குதிக்கச் செய்தது. பச்சைப்பசேலேன இருந்த செடிகளும் வயல்களும் பார்ப்பதற்குப் பட்டுக் கம்பளம் விரித்தாற் போன்று மிகவும் அழகாக இருந்தன.

சி வயலின் நடுவே சோளக் கொல்லை பொம்மை நிறுத்தப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. சற்றுத்தூரம் சென்றதும் அதிகமாகப் புகை வெளியேற்றும் தொழிற்சாலையைக் கண்டான். அதைப் பற்றித் தன் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அருகில் புல்வெளியில் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்துல் இதைப் பார்த்துக் கொண்டு வரும்போது யாரோ ஒருவர் தான் செல்லும் பேருந்தை வேகமாகத் தன் குதியுந்தில் முந்திச் செல்வதைக் கண்டு பதற்றமடைந்தான்.

தன் அம்மாவிடம் அது பற்றிக் கேட்ட போது அவ்வாறு வாகனத்தை முந்திச் செல்வது தவறு என்று கூறினார். தாங்கள் இறங்க வேண்டிய ஊர் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி மகிழ்ச்சியோடு பாட்டி வீட்டிற்குச் சென்றான்.

நிற்க அதற்குத் தக

1. நன்கு படித்து உயர் பதவி பெறுவேன். என்னால் முடியும்.
2. கற்ற கல்வியின் துணைகொண்டு என் திறமைக்கேற்ற வேலையைச் செய்து உழைத்து முன்னேறுவேன்.

செயல் திட்டம்

Question 1.
பள்ளியில் உள்ள புத்தகப் பூங்கொத்து நூல்களில் கல்வி தொடர்பான கருத்துகள்
நான்கைத் தொகுத்து எழுதுக.
Answer:
1. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
– வெற்றிவேற்கை

2. இளமையில் கல்.
– ஒளவையார்

3. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
– உலக நீதி

Question 2.
செய்தித்தாள்களில் வெளிவரும் கல்வி தொடர்பான செய்திகளைச் சேகரித்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்திகளைச் சேகரிக்க வேண்டும்.

Question 3.
பொறுமை என்ற குணத்தை விளக்கும் மூன்று கதைகளின் தொகுப்பு தயார் செய்க.
Answer:
கதை – 1 – பொறுமையால் வெற்றி :
முயலும் ஆமையும் போட்டி வைத்துக் கொண்டது. தொலைவில் தெரியும் மலையை யார் தொடுகிறார்களோ? அவர்களே வெற்றி பெற்றவர். ஆமையும் முயலும் நடக்கத் தொடங்கின. முயல் போகின்ற வழியில் எல்லாம், சந்திப்போரிடம் ஆமை சோம்பேறி, நான் தான் வெற்றி பெறுவேன் என்று பொறுமையில்லாமல் ஆணவத்துடன் பேசிச் சென்றது.

ஆமைதானே என்றெண்ணி, முயல் பொறுமையாக மரத்தடியில் தூங்கிவிட்டுச் சென்றது. வேகமாக உச்சியைத் தொட முயன்ற முயல், சரிந்து மீண்டும் மலை அடிவாரத்திலேயே விழுந்து விட்டது. பொறுமையைப் போற்றும் ஆமை, தற்பெருமையில்லாமல் மலையின் உச்சியைத் தொட்டது.

கதை – 2 – பொறுமையின் பரிசு சிறுகதைகள் :
மதிவாணனும் தமிழரசுனும் நண்பர்கள். மதிவாணன் பொறுமை இல்லாதவன். தமிழரசன் மிகவும் பொறுமைசாலி. மதிவாணன் பொறுமை இல்லாமல் எங்குப் பார்த்தாலும் சண்டை போடுவான். தமிழரசன் எதையும் சகித்துக் கொள்வான். ஒருநாள் வகுப்பில் மதிவாணனுடைய பேனா காணாமல் போய்விட்டது.

அதே வேளையில் தமிழரசன் உட்பட சிலரின் பேனாவும் காணாமல் போய் இருந்தது. மதிவாணனும் சிலரும் பலரிடம் சண்டையிட்டு, அடித்துக் கொண்டனர். ஆனால் தமிழரசன் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்கும் என்று ஆசிரியரிடம் முறையிட்டான். அதுபோல் பொறுமையாக தேடிப் பார்த்த போது பேனாக்கள் கிடைத்தது.

அன்று மாலை, பள்ளி ஒலி பெருக்கியில் அறிப்பு ஒன்று செய்தாார்கள். பள்ளியில் நடத்திய போட்டியில் 1000 ரூபாயை 5ம் வகுப்பு மாணவன் தமிழரசனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொறுமை காத்தமைக்காக இது வழங்கப்படுகின்றது என்று தலைமை ஆசிரியர் கூறினார்.

கதை – 3 – பொறுமையே பெருமை :
ஒரு குரங்கு , சாதுவாக இருந்த காட்டெருமையை சீண்டிக் கொண்டே இருந்தது. அது, காட்டெருமையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும், அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும், வாலைப் பிடித்திழுப்பதும், கடிப்பதுமாக இம்சித்துக் கொண்டே இருந்தது. இவ்வளவு செய்த போதும், காட்டெருமையாகப் பிறந்திருந்த புத்த பகவான், மிகவும் பொறுமையோடு இருந்தார்.

அவர் பொறுமையைக் கண்டு, தேவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் புத்தரிடம் வந்து, ‘சாந்தத்தின் மொத்த உருவமே… உங்களைப் படாதபாடுபடுத்தும் அக்குரங்கை தண்டிக்காமல், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே… அந்தக் குரங்கிடம் பயமா?’ என்று, கேட்டனர்.

அதற்கு, பகவான் புத்தர், ‘அந்தக் குரங்கைக் கண்டு, நான் ஏன் பயப்படப் போகிறேன்…. நான் தலையைக் கொஞ்சம் ஆட்டினாலே போதும். அக்குரங்கின் வாழ்நாள் முடிந்து விடும். இருந்தும், அக்குரங்கின் குற்றத்தை பொறுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால், நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை… நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை.

அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றார். விநாடி நேரம் அவசரப்பட்டு பொறுமையை இழந்து, பின், வாழ்நாள் முழுவதும் அல்லல்படுகிறோம். பொறுமை, என்றுமே பெருமையைத் தான் தரும்; சிறுமையைத் தராது.

விண்ணப்பம் எழுதுதல்

குடிநீர் வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்
ஆ. இளம்பரிதி,
த/பெ. ஆறுமுகம்,
க.எண்: 24, கிழக்குத் தெரு,
மாமண்டூர்
சின்னசேலம் ஒன்றியம்

பெறுநர்
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
மாமண்டூர்,
சின்னசேலம் ஒன்றியம்.

ஐயா வணக்கம்,
எங்கள் தெருவில் உள்ள குடிநீர்க் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாள்களாகக் குடிநீர் தெருவில் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால், தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர். எனவே, உடைந்துபோன குடிநீர்க் குழாயைச் சரிசெய்து தர வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
இடம்: சின்ன சேலம்
நாள்: 00.00.2019

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஆ. இளம்பரிதி.

உறைமேல் முகவரி

Also Read : Chapter-9---Katal-Chapter-9-Term-1-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen