SaraNextGen.Com

Chapter 7 - Kankai konta colapuram - Chapter 7 Term 2 5th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

Detailed Solutions Of Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 5.3 கங்கை கொண்ட சோழபுரம்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
முதலாம் இராசேந்திர சோழனை ஏன் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்?
Answer:
முதலாம் இராசேந்திர சோழன் வட நாடு சென்று பகைவர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்ததன் அடையாளமாகத்தான் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கிறோம்.

Question 2.
சிங்கமுகக் கிணறு – குறிப்பு எழுதுக.
Answer:
சிங்க வடிவத்தில் சிங்கமுகக் கிணறு அமைந்திருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றில் ஒரு வாயில் இருக்கும்.

Question 3.
சோழ கங்கப் பேரேரிக்கு நீர் எங்கிருந்து வருகிறது?
Answer:
மலைகளும் குன்றுகளும் இல்லாத சமவெளியில் பதினாறு கல் தொலைவு வரை வலிமையான உயரமான கரைகளைக் கட்டி, நீண்ட கால்வாய் வெட்டித் தண்ணீரைப் பள்ளத்தாக்கிலிருந்து மேட்டிற்குக் கொண்டு வந்து, ஏரியில் தேக்கி வைத்தனர். சோழ கங்கப் பேரேரி இன்றி பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலிலுள்ள வாயில்களின் பெயர்களைக் கூறுக.
Answer:

  • தெற்குப் பக்க நுழைவாயில்
  • வடக்குப் பக்க நுழைவாயில்.

சிந்தனை வினா.

Question 1.
ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் என்ன ஆகும்? கருத்துகளைக் குழுவில் பகிர்ந்து கொள்க.
Answer:
மாணவன் 1 : ஏரிகளும் குளங்களும் தூர் வாரப்படாமல் மண்மூடி இருந்தால் மழைநீரைத் தேக்கி வைக்க முடியாது.
மாணவன் 2 : நிலத்தடி நீரின்றி மக்கள் துன்பப்படுவர்.
மாணவன் 3 : விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காது.
மாணவன் 1 : நீர்நிலைகள் மண் மூடிய நிலையில் உள்ளதால், மழைக்காலங்களில் வரும் மழைநீர் சிறிதளவே தேங்கும். உபரிநீர் வீணாகக் கடலில் கலந்துவிடும்.
மாணவன் 2 : கோடைக்காலங்களில் நீர்நிலைகளைத் தூர்வாரி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டும்.

கற்பவை கற்றபின்

Question 1.
காலம் வென்ற கங்கை கொண்ட சோழபுரம் என்ற பாடப் பகுதியைச் சரியான ஒலிப்போடும் நிறுத்தக்குறிகளோடும் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சரியான ஒலிப்போடும் நிறுத்தக்குறிகளோடும் படிக்க வேண்டும். கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அக்கோவிலிலுள்ள சிற்பங்களின் சிறப்புகளைப் பற்றியும் வகுப்பறையில் கலந்துரையாடுக. கலந்துரையாடுதல் (சிற்பங்களின் சிறப்புகள்)

மாணவன் 1 : நீ சென்று வந்த கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பற்றிக் கூறுகிறாயா?
மாணவன் 2 : கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. ஆனால் அக்கோயிலைவிட உயரம் குறைவானது.
மாணவன் 1 : அப்படியா?
மாணவன் 2 : ஆமாம். அதற்கடுத்து செங்கற்களால் கட்டப்பட்ட நந்திச்சிலை இருந்தது. இக்கோவிலின் வாயில், தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும். அது மட்டுமா? தூண்களிலும் கோவில்களிலும் அழகான சிற்பங்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின.

மாணவன் 3 : நான்கூட இக்கோவிலுக்கு ஒருமுறை சென்றுள்ளேன். கோவிலின்
வடக்குப் பக்க நுழைவாயிலின் இருபக்கங்களிலும் உள்ள கலைச் செல்வி மற்றும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை என்று என் அப்பா கூறியுள்ளார்.
மாணவன் 2 : இக்கோவிலில் சிங்க முகக் கிணறு ஒன்று உள்ளது.
மாணவன் 1 : சிங்க முகக் கிணறா? அது என்ன? மாணவன் 2 : கிணறு சிங்கம் வடிவத்திலிருக்கும். இந்தச் சிற்பத்தின் வயிற்றிலே ஒரு வாயில் இருக்கும். சிங்க வடிவத்தில் இருப்பதால் சிங்கமுகக் கிணறு என்ற பெயர் பெற்றது.

மாணவன் 1 : சோழர்களின் சிற்பக்கலைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். இந்தியச் சிற்ப வரலாற்றில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்கள் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளன. கங்கை கொண்ட சோழபுரம் சிற்பக்கூடமாக அமைந்துள்ளது. இச்சிறப்புகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மாணவன் 1 : இது நம் தமிழகத்திற்கே பெருமையன்றோ ?
மாணவர்கள் : ஆமாம். பெருமைதான்.

Question 2.
சுராவின் – தமிழ் உரைநூல் (முழு பருவம்) – 5 ஆம் வகுப்பு நீங்கள் கண்டுகளித்த சுற்றுலா இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுக. நான் கண்டுகளித்த சுற்றுலாத்தளம் – பிச்சாவரம் :

· பிச்சாவரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்தி காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடாகும்.

· சிறுசிறு தீவுக்கூட்டங்கள், படகுக் குழாம், எழில்மிகு கடற்கரை, மாங்குரோவ் செடிகளைக் கொண்ட காடுகளின் ஊடே படகுப் பயணம் இவை மிகவும் சிறப்பானது.

· கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள கால்வாய்களையும் காடுகளையும் பார்வையிட படகு மூலம் சென்று பார்த்தேன்.

· இங்கு உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதி நவீன தொலைநோக்கிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியைப் பார்த்தேன்.

· இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து வியந்து போனேன். பிச்சாவரம் பார்க்கப் பார்க்க ஆனந்ததை அள்ளித் தந்தது.

Also Read : Chapter-8---Inaippuccorkal-Chapter-8-Term-2-5th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen