SaraNextGen.Com

Chapter 3.3 - Kuruntokai - Chapter 3 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.3 குறுந்தொகை - Text Book Back Questions and Answers

குறுவினா

Question 1.
குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களைக் கொண்டது.
  • உரையாசிரியர் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
  • இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ

கூடுதல் வினா

Question 2.
குறுந்தொகைத் தலைவன் பரிசுப் பொருட்களை எவ்வாறு அனுப்பினான்?
Answer:
தலைப்பாகை அணிந்து, கையில் தண்டுடன் சென்ற முதியவர்கள் வாயிலாகப் பெண்வீட்டார் போதும் போதும் என்று கூறும் அளவுக்குப் பரிசுப் பொருள்களைக் குறுந்தொகைத் தலைவன் அனுப்பினான்.

சிறுவினா

Question 1.
சங்ககாலத்தில், நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கான சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக.
Answer:
சங்ககாலத் தமிழகத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளுள் ஒன்றான திருமணத்திற்கு, மணமகன் முதியவர்கள் மூலம் தலைவியின் இல்லத்திற்குப் பரிசுப் பொருள்களை அனுப்பித் திருமணத்தை உறுதி செய்ததை, வெள்ளிவீதியார் பாடலால் அறிய முடிகிறது.

அதாவது, அக்காலத்தில் பெண்ணுக்கு, மணமகன் பொன்பொருள் அளித்து மணந்தமை புலப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் இதே சமூக நிகழ்வு, மணம் பேசுதல் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவிதைகளும் சிறுகதைகளும் நாவல்களும் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்ணை மணப்பதற்கு, மணமகனுக்கு மணக்கொடை அளித்தால்தான் திருமணம் நிச்சயம் நடைபெறும் என்ற இழிநிலை காணப்படுகிறது.

பொன் கொடுத்துப் பெண் கொண்டதைப் பெருமையாகக் கருதிய அதே தமிழகத்தில்தான் இன்று,
“பொன் கொடுத்தால்தான் பெண் கொள்வேன்” என்னும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், எங்கோ சில இடங்களில் வரதட்சணை பெறாமல் மணம்புரியும் நிகழ்வும் நடைபெறுகிறது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறிஞ்சித்திணை – விளக்குக.
Answer:
தலைவன் தலைவியர் கூடுதலையும், அதற்குக் காரணமான நிகழ்வுகளையும் உரிப்பொருளாகக் கொண்ட ஒழுக்கம் குறிஞ்சித்திணையாகும்.

இந்நிகழ்வுக்கு மலையும் மலைசார்ந்த நிலமும், குளிர்காலமும் முன்பனிக் காலமுமாகிய பெரும்பொழுதுகளும், யாமம் என்னும் சிறுபொழுதும் பின்புலமாக அமையும்.

அத்துடன், குறிஞ்சித் தெய்வம் (முருகன்), உணவு (மலைநெல், தினை), விலங்கு (புலி, கரடி), பறவை (கிளி, மயில்), தொழில் (தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்) முதலான கருப்பொருள்களும் பின்புலமாகும்.

Question 3.
துறை : ‘தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ’ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது – விளக்குக.
Answer:
தலைவியை மணம் முடிப்பது குறித்துப் பேசத் தலைவன், அவனுடைய சுற்றத்தவரான கான்றோரை அனுப்புகிறான். அப்போது தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ, எனத் தலைவி மனம் கலங்குகிறாள்.

இந்நிலையில் தலைவியிடம் தோழி, ‘தலைவனின் தரப்பினராகிய சான்டோரைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்’ என்று, சொன்னதைக் குறித்து விளக்குவதாகும்.

Question 4.
குறுந்தொகைத் தோழி தலைவியை எவ்வாறு தேற்றினாள்?
Answer:
மணம் பேசத் தலைவன் சார்பாக வந்தவர்களைத் தன் பெற்றோர் மறுத்து அனுப்பி விடுவார்களோ எனத் தலைவி கவலை கொண்டாள். அவளைத் தேற்றும்வகையில் தோழி, “ஊர் மக்களின் அவையில், முன்பு பலமுறை தலைவனின் பரிசுப் பொருள்களு திருப்பி அனுப்பப்பட்டன.

இன்றோ, தலைப்பாகை அணிந்து, கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகப் போதுமென்று கூறத்தக்க அளவுக்குப் பரிசுப் பொருள்களைத் தலைவன் அனுப்பி, அவைமுன் வைத்துள்ளான்.

நம் உறவினரும் அவற்றைக் கண்டு, ‘நன்று நன்று’ எனக் கூறி மகிழ்ந்தனர். எனவே, “தோழி! நம் ஊரில் முன்பெல்லாம் பரிசுத்தொகை போதென்று பிரித்து விடப்பட்ட தலைவன் தலைவியரைப் போதிய பரிசுத்தொகை அளித்ததும் சேர்த்து வைப்போர் இருந்தனரா?” என வினா எழுப்பி, விரைவில் மணம் முடியும் என்பதைத் தோழி உறுதிப்படுத்தித் தலைவியைத் தேற்றி மகிழ்வித்தாள்.

கற்பவை கற்றபின்

திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமே – விவாதிக்க.
Answer:
முகிலன் : நீ இன்று ஏதோ திருமணத்திற்குச் செல்வதாகச் சொன்னாயே! போகவில்லையா?

தமிழ் : அதை ஏன் கேட்கிறாய்? அந்தத் திருமணம் கடைசி நேரத்தில் நின்று போனது.
முகிலன் : ஏன் என்ன காரணம்?

தமிழ் : மணமகன் வீட்டார், திடீரென்று இரண்டுலட்சம் ரூபாய், மணக்கொடை கேட்டுள்ளனர். பயண்வீட்டார், ‘கொஞ்சம் குறைத்துக் கொடுக்கிறோம்; நகை எல்லாம் போட்டுக் கலியாணச் செலவையும் பார்ப்பதால் முடியவில்லை’ என்று சொல்லியுள்ளார்கள். மணமகன் வீட்டார், ‘அதெல்லாம் முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்

எழிலி : இது மிகவும் கொடிய செயல். மணக்கொடை கேட்டதாகக் காவல் துறையில் புகார் செய்து, மணமகன் வீட்டாரைத் தண்டித்திருக்க வேண்டும்.

தமிழ் : உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதே. இது இந்தக் கால வழக்கமாகிவிட்டது. சரி இல்லை என்றால் ஒதுக்கிவிட்டு, நம் வேலையைப் பார்ப்பதுதான் நல்லது. திருமணத்திற்குப்பின் இப்படி நிகழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?

எழிலி : இந்த வழக்கம் எப்படி வந்தது? நாம் பழைய இலக்கியங்களில் ஏன், சில நாவல்களில்கூட மணமகன் வீட்டார் பொன் கொடுத்துப் பெண் கொண்டதாகத்தானே படிக்கிறோம். தமிழகத்தில் இந்த நிலை ஏன் உருவானது?

முகிலன் : இதை எல்லாம் ஆராய்ந்து பயனில்லை. சமுதாயப் பழக்க வழக்கங்களை மாற்ற இளையோர் முடிவு எடுக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ நன்றாகப் படித்து, ஒரு தொழிலைச் செம்மையாகச் செய்ய உறுதி எடுக்கவேண்டும். அதன்பின் திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் : நல்ல படிப்பு, நல்ல தொழில், நல்லொழுக்கம் இவற்றை அடிப்படையாக வைத்துத் தகுதியானவரைத் தேர்வு செய்து மணக்கவேண்டும். பணம் பணம் என்று அலைபவர்களை ஒதுக்கவேண்டும்.

எழிலி : மணக்கொடை கொடுக்கவும் கூடாது; கேட்கவும் கூடாது. பெற்றோர் விரும்பிச் செய்வதை ஏற்கின்ற மனப்பக்குவத்தை, எதிர்கால இளைஞர்கள் பெறவேண்டும். தனித்து நின்று போராட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

முகிலன் : நன்றாகச் சொன்னாய். எதிர்காலத்தில் நாம் இதை நிறைவேற்றிச் சமூக மாற்றத்தை ஏற்படுத்த, நண்பர்களோடு கலந்துபேச வேண்டும். இதை உறுதிமொழியாக ஏற்போம். “நான் மணக்கொடை கேட்கவும் மாட்டேன்! மணக்கொடை கொடுக்கவும் மாட்டேன் ” என்று, எல்லாரும் சொல்லுங்கள் பார்ப்போம். உழைப்போம்! உயர்கேம்!

இலக்கணக்குறிப்பு

புணர்ப்போர், பிரிந்தோர் – வினையாலணையும் பெயர்கள்
நன்று நன்று – அடுக்குத்தொடர்
வாழி – வியங்கோள் வினைமுற்று
வெண்டலை – பண்புத்தொகை
அம்ம – முன்னிலை விளி
கொல்லோ (கொல் + ஓ) – அசைகள்

உறுப்பிலக்கணம்

1. பிரிந்தோர் – பிரி + த் (ந்) + த் + ஓர்
பிரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆகாது) விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஓர் – பலர்பால் வினைமுற்று விடுதி.

2. வாழி – வாழ் + இ
வாழ் – பகுதி, இ – வியக்கோள் வினைமுற்று விகுதி.

3. இருந்தனர் – இரு ந்) + த் + அன் + அர்
இரு – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. தண்டுடை – தண்டு + உடை
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (தண்ட் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தண்டுடை)

2. நம்மூர் – நம் + ஊர்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நம்ம் + ஊர்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நம்மூர்)

3. வெண்டலை – வெண்மை + தலை
“ஈறுபோதல்” (வெண் + தலை)
“ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்” (வெண்டலை)

4. மக்களோடு – மக்கள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மக்களோடு)

பலவுள் தெரிக

Question 1.
சங்ககாலப் பெண்பால் புலவர்களுள் ஒருவர் ……………..
அ) காரைக்காலம்மை
ஆ) மணிமேகலை
இ) ஆண்டாள்
ஈ) வெள்ளிவீதியார்
Answer:
ஈ) வெள்ளிவீதியார்

Question 2.
தொகைநூல்களுள் முதலில் தொகுக்கப்பட்டது……………….
அ) நற்றிணை
ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை
ஈ) ஐங்குறு நூறு
Answer:
இ) குறுந்தொகை

Question 3.
‘குறுந்தொகை’ நூலைத் தொகுத்தவர் ……………..
அ) வெள்ளிவீதியார்
ஆ) சாத்தனார்
இ) பூரிக்கோ
ஈ) பெருந்தேவனார்
Answer:
இ) பூரிக்கோ

Question 4.
குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் ……………
அ) நக்கீரர்
ஆ) சாத்தனார்
இ) பெருந்தேவனார்
ஈ) பூரிக்கோ
Answer:
இ) பெருந்தேவனார்

Question 5.
குறுந்தொகை, …………… திணை சார்ந்த நூல்.
அ) அகத்
ஆ) புறத்
இ) உயர்
ஈ) அல்
Answer:
அ) அகத்

Question 6.
“தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” – இத்தொடரில் தலைப்பாகை’ என்னும் பொருளுடைய சொல் ………..
அ) தண்டு
ஆ) கையர்
இ) வெண்டலை
ஈ) சிதவல்
Answer:
ஈ) சிதவல்

Question 7.
சரியான விடையைத் தேர்க.
“நன்றுநன் றென்னும் மாக்களொடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே” இப்பாடல் வரிகளின் பொருள்.
அ) குறிஞ்சித்திணை சார்ந்தது
ஆ) முல்லைத்திணை சார்ந்தது
இ) மருதத்திணை சார்ந்தது
ஈ) நெய்தல்திணை சார்ந்தது
Answer:
அ) குறிஞ்சித்திணை சார்ந்தது

Also Read : Chapter-3.4---Purananuru-Chapter-3-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen