SaraNextGen.Com

Chapter 6.4 - Tiruccalal - Chapter 6 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல் - Text Book Back Questions and Answers

குறுவினாக்கள்கூடுதல்

Question 1.
சாழல் – விளக்குக.
Answer:

  • சோழன் என்பது, மகளிர் விளையாட்டுகளுள் ஒருவகை.
  • இது ஒரு மொழி விளையாட்டு. ஒருத்தி ஒரு செய்தி குறித்து வினா எழுப்புவாள்; மற்றொருத்தி தோள் வீசி நின்று, விடை கூறுவதாகச் சாழல் விளையாட்டு அமையும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால், ‘திருச்சாழல்’ எனப்பட்டது.

Question 2.
‘சாழல்’ என்பதை எவ்வெவர் பயன்படுத்தியுள்ளனர்?
Answer:

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழி’யில் இவ்வடியைப் பயன்படுத்தியுள்ளார்.

Question 3.
‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
Answer:
‘திருச்சாழல்’ என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

சிறுவினா

Question 1.
தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answer:
சாழல்’ என்பது, மகளிர் விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பான வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் – குறிப்புத் தருக.
Answer:

  • சிவபெருமான் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருத எசகம்.
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் நகார்’ என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப், திருவாசகம் முழுவதையும் இங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Question 3.
மாணிக்கவாசகர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர் நால்வரும் ஒருவர்.
  • இவர், திருவாதவூரைச் சேர்ந்தவர். எனவே திருவாதவூரார்’ எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

Question 4.
அந்தமிலான் செய்த புதுமை, மேன்மை குறித்துச் சாழலால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
“அழிவு இல்லாதவனாகிய அவன், தன்னை அடைந்த நாயினும் இழிந்தவனையும் எல்லை இல்லா ஆனந்த வெள்றுத்திய அழுத்தும் புதுமையை எவ்வாறு செய்தானடி?” என்று, ஒருத்தி இகழ்வதுபோல் வினா எழுப்பினாள்.

இன்னொருத்தி தன் தோள்களை அசைத்து ஆடியபடி, “அடைந்தவனை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள், தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்பதை அறிந்துகொள்!’ என, அவன் சிறப்பை விடையாகக் கூறினாள்.

நெடுவினா (கூடுதல்)

Question 1.
இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல்மூலம் மாணிக்கவாசகரின் மொழி விளையாட்டினை விவரிக்கவும்.
Answer:
(சாழல் என்னும் விளையாட்டு :
மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு சாழல். இதில் ஒருத்தி வினா எழுப்புவாள். மற்றொருத்தி அதற்கு ஏற்ற விடை கூறுவாள். இறைவன் செயல்களையும் அச்செயல்களால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவதாக அமைந்தது திருச்சாழலாகும். ‘திருச்சாழல்’ என்னும் ஒருவகை மொழி விளையாட்டின்மூலம் இருபது பாடல்களில் இறைவனின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

ஆற்றல் நிறைந்தவன் இறைவன்!
சாழல் ஆடும் ஒருத்தி, “சுடுகாட்டைக் கோவிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை! இத்தகையவரா உங்கள் கடவுள்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு, “எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லையாயினும், அவன் சினந்தால் உலகு அனைத்தும் கல்பொடியாகிவிடும்” என்று மற்றொருத்தி விடை கூறி இறைவனின் ஆற்றலை நிலைப்படுத்தினாள்.

பிறரைக் காக்கவே நஞ்சை உண்டான் :
உடனே அவள், “பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சைப் பருகினானே. அதற்குக் காரணம் என்ன?” என வினவினாள். அதற்கு மற்றொருத்தி, “அந்த நஞ்சை எங்கள் இறைவன் அன்று உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே அழிந்திருப்பார்களே!” எனக் கூறி விளக்கினாள்.

அனைவருக்கும் அவன் அடியே மேலானது :
“முடிவு இல்லாதவனாக இருக்கும் அவனை அடைந்த என்னை, ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தது என்னே புதுமை” எனக் கேட்டாள். அதற்கு மற்றொருத்தி, “உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த அதே திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையானதேயாகும்” என்று கூறி அமைந்தாள்.

சுவைக்கத்தக்க நயம் :
இவ்வகையில் திருச்சாழல் என்னும் விளையாட்டுப் பாடல் மூலம் ஒருத்தி இறைவனைப் பழிப்பதுபோலவும், இன்னொருத்தி இறைவனின் செயல்களை நியாயப்படுத்துவதுபோலவும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ள நயம் சுவைக்கத் தக்கதாகும்.

இலக்கணக்குறிப்பு

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
அயன்மால் – உம்மைத்தொகை
கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை.

உறுப்பிலக்கணம்

1. உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை இல் – எதிர்மறை இடைநிலை,
அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அடைந்த – அடை + த் (ந்) + த் அ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி – கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பொடி)

2. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (உலக் + அனைத்தும்)
“உடல் பால் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகனைத்தும்)

3. திருவடி – திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும்” (திரு + வ் + அடி)
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (திருவடி)

4. தாயுமிலி – தாயும் + இலி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாயுமிலி)

5. தேவரெல்லாம் – தேவர் + எல்லாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தேவரெல்லாம்)

6. தனையடைந்த – தனை + அடைந்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனை + ய் + அடைந்த)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனையடைந்த)

7. புலித்தோல் – புலி + தோல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (புலித்தோல்)

8. தனியன் – தனி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனி + ய் + அன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனியன்)

9. நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை), “முன்னின்ற மெய்திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)

பலவுள் தெரிக

Question 1.
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ………………….
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறுபறை
Answer:
அ) சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ………………….
அ) பெஸ்கி
ஆ) கால்டுவெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஈ) ஜி.யு. போப்

Question 3.
சைவத் திருமுறைகளில் திருவாசகம், ………………….திருமுறையாக உள்ளது.
அ) பன்னிரண்டாம்
ஆ) ஆறாம்
இ) எட்டாம்
ஈ) ஏழாம்
Answer:
இ) எட்டாம்

Question 4.
திருமங்கையாழ்வார் பாடியது………………….
அ) திருச்சாழல்
ஆ) நாட்டார் வழக்கியல்
இ) தேவாரம்
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Question 5.
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள் ………………….
அ) 658
இ) 51
ஈ) 12
Answer:
இ) 51

Question 6.
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் ………………….
அ) பெரியாழ்வார்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) ஆண்டாள்
ஈ) திருப்பாணாழ்வார்
Answer:
ஆ) திருமங்கை ஆழ்வார்

Question 7.
சைவத் திருமுறைகள் ………………….
அ) ஏட்டு
ஆ) பதினெட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
Answer:
பன்னிரண்டு

Question 8.
பைத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக அமைந்தது ………………….
அ) தேவாரம்
ஆ) திருவாய்மொழி
இ) திருவாசகம்
ஈ) திருக்குறள்
Answer:
இ) திருவாசகம்

Question 9.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் ………………….
அ) திருவாசகம், தேவாரம்
ஆ) திருக்கோவையார், தேவாரம்
இ) திருவாசகம், திருக்கோவையார்
ஈ) திருவாசகம், திருப்புகழ்
Answer:
இ) திருவாசகம், திருக்கோவையார்

Question 10.
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ………………….
அ) திருச்சாழல், திருப்புகழ்
ஆ) பெரிய திருமொழி, திருவருட்பா
இ) திருப்புகழ், திருவருட்பா
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி
Answer:
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி

Question 11.
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) இருபது
ஈ) பத்து
Answer:
இ) இருபது

Question 12.
பொருத்துக.
1. காயில் – அ. திருமால்
2. அந்தம் – ஆ. நஞ்சு
3. அயன் – இ. வெகுண்டால்
4. ஆலாலம் – ஈ. முடிவு
– உ. பிரமன்
Answer:
1-இ, 2-ஈ, 3-உ, 4-ஆ

Also Read : Chapter-6.6---Kalaiccollakkam-Chapter-6-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen