SaraNextGen.Com

Chapter 7.1 - Karril kalanta perocai - Chapter 7 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.1 காற்றில் கலந்த பேரோசை - Text Book Back Questions and Answers

குறுவினா
Question 1.

‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.
Answer:
‘வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு பருருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.
கூடுதல் வினாக்கள்

Question 2.
ஜீவா குறித்து அறிந்தவற்றைச் சுருக்கமாக எழுதுக.
Answer:

  • ‘ஜீவா’ என அழைக்கப்பெறும் ‘ப. ஜீவானந்தம்’, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
  • தொடக்கக் காலத்தில் காந்தியவாதி; பின்னர்ச் சுயமரியாதை இயக்கப் போராளி.
  • ஜீவா, சிறந்த தமிழ்ப் பற்றாளர்; எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர்.

Question 3.
ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணம் எது
Answer:
“நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டிருக்கிறேன்; படித்துக்கொண்டே இருப்பேன்” என்பது, ஜீவாவின் மனத்தில் பசுமையாக இருந்த எண்ணமாகும்.

Question 4.
ஜீவாவின் பிரார்த்தனை யாது?
Answer:
“மனிதச் சிந்தனையே! கற்பனை கும் எட்டாத பேராற்றலே! நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை ஒருமுறை என்னிடம் கூறு. அதலன எட்டுத் திசைகளிலும் பரப்பி, மனித இனத்தை நீ சொல்லும் இடத்திற்கு அழைத்து வருவேன். முடிந்தமட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள். கைம்மாறு வேண்டேன்! என்னைப் பயன்படுத்திக் கொள்வதே, நீ எனக்குச் செய்யும் கைம்மாறு” என்பதே, ஜீவாவின் பிரார்த்தனை.

Question 5.
ஜீவாவின் கொள்கையில் நம்பிக்கையும் எதிலிருந்து பிறந்தன?

Answer:
‘கற்பனைக்கு எட்டாத பேராற்றலான மனிதச் சிந்தனையில் சிறந்தவற்றை, எட்டுத் திசைகளிலும் பரப்பி, மன்ற இனத்தை உயர்த்தத் தம்மால் இயன்றதைக் கைம்மாறு கருதாமல் செய்யவேண்டும்’ என்னும் அடிப்படை மனோபாவத்திலிருந்து பிறந்ததே, ஜீவாவின் கொள்கையும் நம்பிக்கையுமாகும்.

Question 6.
ஜீவாவின் நினைவில் எப்போதும் நிற்கும் எளிய உண்மை யாது?
Answer:
தழக்குத் தெரியாத அரிய செய்திகள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்னும் எளிய உண்மை , வாவின் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும்.

சிறுவினா

Question 1.
ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன யாவை?
Answer:

  • ஜீவாவின் பாணி, இரவல் பாணியோ, கற்று அறிந்ததோ அன்று! ‘பேச்சுக்கலை’ என்பது ஜீவா பெற்ற வரம்!
  • மக்கள் தரத்தை, அனுபவ அறிவை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளைத் தெளிவாக அறிந்த
  • ஒருவர், கூறவந்த செய்திகளைக் கலைநோக்கோடு அணுகி, கற்பனை கலந்த காலப்போக்கில்
  • வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுநடை, ஜீவாவின் பேச்சுநடை!
  • உழுது விதைத்தால் நல்ல அறுவடை காணமுடியும் என்பதை உணர்ந்தவர் ஜீவா!

Question 2.
கூடுதல் வினாக்கள் ஜீவா சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு குறித்து எழுதுக.
Answer:

  • நாஞ்சில் நாட்டுத் தோவாளையில் மக்களிடம் பள்ளி மாணவர் குழு ஒன்று, திருவாங்கூர் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை எடுத்துக் கூறித் துயர் துடைக்க நிதி திரட்டியது.
  • பள்ளி இறுதி வகுப்பு மாணவரான ஜீவா, அக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
  • சமூக நலனுக்காக ஜீவா தம்மை ஈடுபடுத்திக் கொண்ட முதல் நிகழ்வு அது.
  • அதுவே அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் ஜீவா, தம்மைக் கூர்வாளாக மெருகேற்றிக் கொண்ட முதல் நிகழ்வாகும்.

Question 3.
ஜீவா மேடையில் வாழ்ந்த மாமனிதர் என்பதை விவரி.
Answer:

  • எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த ஜீவா, சிறந்த மேடைப் பேச்சாளர்.
  • ஜீவா, தமக்கென ஒரு தத்துவத்தைப் படைத்துக் கொண்டவர் அல்லர்.
  • தாம் நம்பிய தத்துவத்தை, அச்சில் உயிரிழந்து கிடக்கும் சித்தாந்தக் கருத்துகளைத் தமது அரிய பேச்சாற்றலால், கலைநோக்கால், கற்பனையால் உயிர்பெற்று எழச் செய்தார்கள்
  • தம் மேடைப்பேச்சால் அந்த மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தார் எனலாம், தம் மேடைப்பேச்சால், மனித இனத்தை உன்னத உயரத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்.
  • ‘என் வாழ்க்கை என் கைகளில்’ என்னும் நம்பிக்கையோடு மேடையில் வாழ்ந்தார்.

நெடுவினா

Question 1.
சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’ என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
Answer:
மக்கள் நம்பிக்கை :
மக்கள் கூட்டத்தின் முன் நின்று அண்டம் முட்ட, நாற்றிசையும் அலை பரவச் சங்கநாதமென முழங்கிய ஜீவாவின் மரணம், முத்திரை கொண்டதாகத்தான் இருக்குமென அனைவரும் நம்பினர். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்க வேண்டுமென, மக்களின் பேதை மனம் எண்ணுகிறது. ஜீவா என்கிற தொண்டன், இறுதி மூச்சு நிற்பதுவரை மேடையில் கர்ஜித்துக்கொண்டு இருந்திருப்பான் என்பதில், அனைவருக்கும் அத்தனைம்பிக்கை.

மேடைப்பேச்சில் வண்ண ஜாலம்
பேச்சு, அவர் பெற்ற வரம் பேச்சுக்கலை குறித்துக் கூறும் புத்தக விதிகளை மறுத்து, தம் சொந்தப் பாணியில் கற்றதை வெளிபடுத்தியவர். மக்களின் தரம், அறிவு, பழக்கவழக்கம், நம்பிக்கைகளைப் புரிந்து, விஷயத்தோடும், கலைநோக்கோடும் கற்பனை கலந்ததாக அவர் பேச்சுப் பாணி அமைந்தது. உழுது விதைத்து நல்ல அறுவடைகாண விரும்பியவர் அவர். எனவே, செய்திகளைக் குவியல் குவியலாகக் கூறிக் குழப்பாமல், சில றிப் புரிய வைத்தவர்.

காற்றில் கலந்த பேரோசை :
பேச்சுக்கலை, அவர் காலடியில் விழுந்து கிடந்தது. இப்போது மேடையில் ஒரு 

நாற்காலி கானமாக விட்டது. அது, இனிக் காலியாகவே கிடக்கும். ஆற்றில் விழுந்த கிளை, எதிர்நீச்சல் போட்டுக் கடவுளின் முன்னேற்பாடுகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. பேரோசை, காற்றில் கலந்துவிட்டது என்கிறார் சுந்தர ராமசாமி.

பலவுள் தெரிக

Question 1.
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
Answer:
இ) மக்கள் வெள்ளம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
அ) சுந்தர ராமசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) குமட்டூர் கண்ண னார்
ஈ) குடவாயில் பாலசுப்பிரமணியன்
Answer:
ஆ) ப. ஜீவானந்தம்

Question 3.
‘சொரிமுத்து’ என்பது,……………….இயற்பெயர்.
அ) மதுசூதனின்
ஆ) வைத்தியலிங்கத்தின்
இ) ஜீவாவின்
ஈ) ராசேந்திரனின்
Answer:
இ) ஜீவாவின்

Question 4.
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் ………….
அ) ஆத்மாநாம்
ஆ) பிரபஞ்சன்
இ) பாரதியார்
ஈ) சுந்தர ராமசாமி
Answer:
ஈ) சுந்தர ராமசாமி
Question 5.
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்……………..
அ) திருவிதாங்கூர்
ஆ) நாகர்கோவில்
இ) தோவாளை
ஈ) குற்றாலம்
Answer:
இ) தோவாளை
Question 6.
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் வந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர் ……………
அ) திரு. வி. க.
ஆ அறிஞர் அண்ணா
இ) ஜீவானந்தம்
ஈ) சங்கரதாசு சுவாமிகள்
Answer:
இ) ஜீவானந்தம்
Question 7.
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
அ) பேச்சு எனக்குக் கைவந்த கலை
ஆ) எல்லாம் கரைத்துக் குடித்துவிடவில்லை
இ) இயற்கை விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போடமுடியும்
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
Answer:
ஈ) எனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்
விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டுமென எண்ணுகிய பேதை மனசு.
வினா : பேதை மனசு எவ்வாறு எண்ணுகிறது?

2. “அன்சு நின்றுவிட்டது” என்று நான் சொன்னபோது, “பேச்சு நின்றபோதா?” எனத் திருப்பிக் கே கிறார்கள்.
வினா : “பேச்சு நின்றபோதா?” என எப்போது திருப்பிக் கேட்கிறார்கள்?

3. பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வினா : அவர் பெற்ற வரம் என்று, எதனைச் சொல்ல வேண்டும்?

4. பேச்சுக்கலைதான் அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது.
வினா : அவருடைய காலடியில் விழுந்து கிடந்தது எது?

5. தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும் என்ற எளிய உண்மை , எப்போதும் அவர் நினைவில் நிற்கும்.
வினா : எவ்வுண்மை அவர் நினைவில் எப்போதும் நிற்கும்?

6. ‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பினார் அவர்.
வினா : அவர் என்னவென்று நம்பினார்?

7. நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது.
வினா : நீரில் விழுந்த கிளை எங்குச் சென்றுவிட்டது?

Also Read : Chapter-7.2---Puratcikkavi-Chapter-7-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen