SaraNextGen.Com

Chapter 7.3 -Patirruppattu - Chapter 7 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 7.3 பதிற்றுப்பத்து - Text Book Back Questions and Answers

குறுவினாக்கள்

Question 1.
செந்துறைப் பாடாண் பாட்டு – துறைவிளக்கம் எழுதுக.
Answer:

  • பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது, ‘பாடாண்’ எனப்படும்.
  • உலகினுள் இயற்கை விசையால் இயன்ற மக்களைப் பாடுதல் செந்துறையாகும்.
  • இவ்வகையில், அமைந்த பாடல் செந்துறைப் பாடாண்பாட்டுத் துறை ஆகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
வண்ணம், ஒழுகு வண்ணம் – விளக்குக.
Answer:

  • ‘வண்ணம் என்பது, சந்த (ஓசை நய) வேறுபாடாகும்.
  • ‘ஒழுத வண்ணம்’ என்பது, ஒழுகிய (நெகிழ்ந்த) ஓசையால் சொல்லுதலாகும்.

Question 3.
தாக்கும் செந்தூக்கு – விளக்குக.
Answer:
தூக்கு’ என்பது, செய்யுள் அடி அளவை வரையறை செய்வதாகும். செந்தூக்கு’ என்பது, வஞ்சிப் பாவின் இறுதி அடி போன்றோ, ஆசிரியப்பா அடியின் இறுதி போன்றோ அமைவதாகும்.

Question 4.
திருவள்ளுவர், சிறந்த நாடு குறித்துக் கூறும் செய்தி யாது?
Answer:
மிகுபசியும் தீராநோயும் பெரும்பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 5.
சேரலாதனின் எச்சிறப்புகளைக் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து பாடியுள்ளார்?
Answer:
சேரலாதனின் நாடுகாத்தல் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்ந்து
பாடியுள்ளார்.

Question 6.
சேரலாதனைக் குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் நெடுஞ்சேரலாதன்.
  • இமயம்வரை படை நடத்தி வெற்றி பெற்றவன்.
  • கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
  • தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.

Question 7.
பாடாண் திணை – விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண்திணை. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது.
  • அதாவது ஒரு சிறந்த தலைவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலிய பண்புகளை ஆராய்ந்து கூறுவதாகும். கைக்கிளைத் திணைக்குப் பாடாண் திணை புறனாகும்.

Question 8.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் யார்? பெற்ற பரிசில்கள் யாவை?
Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். அதற்காக உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசில்களாகப் பெற்ற

Question 9.
சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை – ஏன்?
Answer:

  • செல்வவளம் மிக்கது சேரநாடு.
  • அச் சேரநாட்டு மக்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கண்போலப் பாதுகாத்தான்.
  • எனவே, சேரநாட்டு மக்கள் புலம் பெயர்ந்ததில்லை.
  • வேற்று நாடு சென்று குடியேறுவதையும் விரும்பியதில்லை.

சிறுவினா

Question 1.
சேரநாடு, செல்வவளம் மிக்கது என்ற கூற்றிற்குரிய தரிணங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • நெடுஞ்சேரலாதன், தன் நாட்டையும் மக்களையும் காண்போல் பாதுகாத்தான்.
  • மக்கள், பசியும் பிணியும் அறியாது, வேற்று நாட்டுக்கும் செல்ல விரும்பாமல் சுற்றம் சூழ வாழ்ந்தனர்.
  • புதுவருவாய்ப் பெருக்கமும், ஈந்து உவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.
  • இக்காரணங்களால், சேரநாடு செல்வவளம் மிக்கதாக விளங்கியது.

கூடுதல் வினா

Question 2.
பதிற்றுப்பத்துக் குறித்துக் குதிப்பெழுதுக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களும், புறப்பொருள் குறித்த நூல் பதிற்றுப்பத்து.
  • இது, சேர மன்னக்கலைத்துப் பேரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறது.
  • புறப்பொருள்களும் பாடாண் திணை’ குறித்தமைந்த நூல். * ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு , பாடலின் பெயர் ஆகியன இடம் பெற்றிருக்கும். பாடலில் இடம்பெறும் சிறந்த சொற்றொடர், அப்பாடலுக்குத் தலைப்பாக இப்பட்டிருக்கும்.
  • இத்தொகை நூலுள், முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

 

இலக்கணக்குறிப்பு

துய்த்தல், பிழைப்பு – தொழிற்பெயர்கள்
ஒரீஇய – சொல்லிசை அளபெடை
புகழ்பண்பு – வினைத்தொகை
நன்னாடு, கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகைகள்
மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று
ஒடியா, தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
இகந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
புரைவயின் புரைவயின் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

1. மருண்ட னென் – மருள் (ண்) + ட் + அன் + என்
மருள் – பகுதி, ‘ள்’, ‘ண்’ ஆனது விகாரம், ட் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை, என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

2. துய்த்த ல் – துய் + த் + தல்
துய் – பகுதி, த் – சந்தி, தல் – தொழிற்பெயர் விகுதி.

3. நல்கி – நல்கு + இ
நல்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

4. எய்தி – எய்து + இ
எய்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

5. தருதல் – தா (தரு) + தல்
தா – பகுதி, ‘தரு’ என்றானது விகாரம், தல் – தொழிற்பெயர் விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. மண்ணுடை – மண் + உடை
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (மண்ண் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மண்ணுடை)

2. புறந்தருதல் – புறம் + தருதல்
“மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்” (புறந்தருதல்)

3. நன்னாடு – நன்மை + நாடு
“ஈறுபோதல்” (நன் + நாடு), “னலமுன் றன ஆகும் காக்கள்’ (நன்னாடு)

4. நல்லிசை – நன்மை + இசை
“ஈறுபோதல்” (நன் + இசை), “முன்நின்ற மெய்திதெல்” (நல் + இசை )
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்ரம்” நல்ல் + இசை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நல்லிசை)

குறள் பொருள் அறிக.

Question 1.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
Answer:
மிக்க பசியும், துன்புறுத்தும் நோயும், அழிக்கும் பகையும் சூழாது இருப்பதே சிறந்த நாடாகும்.

Question 2.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்தில் வந்து.
Answer:
நோயில்லாமை, பொரு செல்வம், விளைபொருள், இன்பவாழ்வு, பாதுகாப்பு என்னும் ஐந்தும், ஒரு நாட்டிற்கு அணிகளரகம்.

பலவுள் தெரிக

Question 1.
கூபா – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்.
காரணம் : சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) இரண்டும் சரி
இ) இரண்டிற்கும் தொடர்பு இல்லை
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
ஆ) இரண்டும் சரி

கூடுதல் வினாக்கள்

Question 2.
“பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி” – இத்தொடரில், ‘வாழ்தல்’ என்னும் பொருளுடைய……………..
சொல் அ) பதி
ஆ) பிழைப்பு
இ) துய்த்தல்
ஈ) எய்தி
Answer:
ஆ) பிழைப்பு

Question 3.
புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்” இத்தொடரில், பாதுகாப்பு’ என்னும் பொருளை உணர்த்தும் சொல்……………..
அ) புரைவயின்
ஆ) நல்கி
இ) ஏமம்
ஈ) சீர்கெழு

Question 4.
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது……………..
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) ஏமம்

Question 5.
சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்தநின் பண்புபல நயந்தே – இப்பாடலில், நெடியோன் என்பவன் யார்?
அ) சிவபெருமான்
ஆ) திருமால்
இ) நெடுந்சேரலாதன்
ஈ) விழாத்தலைவன்
Answer:
ஆ) திருமால்

Question 6.
“உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு” என்று கூறியவர்……………..
அ) குமட்டூர்க் கண்ண னார்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) திருவள்ளுவர்
ஈ) இமயவரம்பன்
Answer:
இ) திருவள்ளுவர்

Question 7.
இமயத்தில் வில் பொறித்தவன்……………..
அ) உதியன் சேரலாதன்
அ) நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Question 8.
கடம்பர்களை வென்றவன்……………..
அ) உதியன் சேரலாதன்
ஆ) செங்குட்டுவன்
இ) கரிகாலன்
ஈ) நெடுஞ்சேரலாதன்
Answer:
ஈ) நெடுஞ்சேரலாதன்

Question 9.
பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தைப் பாடியவர்……………..
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) குமட்டூர்க் கண்ணனார்
ஈ) ஔவையார்
Answer:
இரு குமட்டூர்க் கண்ணனார்

Question 10.
‘நிரை வெள்ளம்’ என்னும் தொடரின் பொருள்……………..
அ) வானுலக வீரர்கள்
ஆ) வெற்றி பெற்றோர்
இ கவசமானோர்
ஈ) நரகத்து வீரர்கள்
Answer:
ஈ) நரகத்து வீரர்கள்

Question 11.
கைக்கிளைக்குப் புறனாக அமையும் திணை……………..
அ) பெருந்திணை
ஆ) வெட்சித்திணை
இ) வாகைத்திணை
ஈ) பாடாண்திணை
Answer:
ஈ) பாடாண்திணை

Question 12.
‘வண்ணம்’ என்பது……………..
அ) செய்யுள் வேறுபாடு
ஆ) துள்ளல் ஓசை
இ) சந்த வேறுபாடு
ஈ) புலமை வேறுபாடு
Answer:
இ) சந்த வேறுபாடு

Question 13.
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்கள்……………..
அ) பதிற்றுப்பத்து, நற்றிணை
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு
ஈ) புறநானூறு, பரிபாடல்
Answer:
இ) பதிற்றுப்பத்து, புறநானூறு

Question 14.
பதிற்றுப்பத்து நூல் முழுமையும், …………….. திணையில் அமைந்துள்ளது.
அ) வெட்சி
ஆ) நொச்சி
இ) பாடாண்
ஈ) பொதுவியல்
Answer:
இ) பாடாண்

Question 15.
பதிற்றுப்பத்து என்பது, …………….. மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளைப் பாடுவது.
அ) பாண்டிய
ஆ) சோழ
இ) பல்லவ
ஈ) சேர
Answer:
ஈ) சேர

Question 16.
பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறும் திணை……………..
அ) கரந்தை
ஆ) வஞ்சி
இ) பாடாண்
ஈ) பொகவியல்
Answer:
இ) பாடாண்

Question 17.
சந்த வேறுபாட்டைக் குறிப்பது, ……………..என்னும் தொடர்.
அ) துறை
ஆ) திணை
இ) தூக்கு
ஈ) வண்ணம்
Answer:
ஈ) வண்ணம்

Question 18.
பதிற்றுப்பத்துள் கிடைக்காத பத்துகள்……………..
அ) முதற்பத்து, எட்டாம்பத்து
ஆ) நான்காவத்து, ஆறாம்பத்து
இ) எட்டாம்பத்து, இறுதிப்பத்து
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து
Answer:
ஈ) முதல்பத்து, இறுதிப்பத்து

Question 19.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது……………..
அ) முதல்பத்து
ஆ) நான்காம்பத்து
இ) பத்தாம்பத்து
ஈ) இரண்டாம்பத்து
Answer:
ஈ) இரண்டாம்பத்து

Question 20.
பதிற்றுப்பத்து’ என்னும் தொடர்பு ……………..எனப் பிரியும்.
அ) பதிற் + றுப்பத்து
ஆ) பதிறு + பத்து
இ) பதிற்று + பத்து
ஈ) பத்து + பத்து
Answer:
ஈ) பத்து + பத்தில்

Question 21.
பொருத்துக.
1. சான்றோர் – அ. கடுந்துப்பு
2. புதுவருவாய் – ஆ. மருண்டனென்
3. மிதவலிமை – இ. மன்னுயிர்
4. வியப்படைந்தேன் – ஈ. புரையோர்
– உ. யாணர்
Answer:
1 – ஈ. 2 – உ, 3 – அ, 4 – ஆ

Question 22.
தவறான விடையைக் கண்டறிக. பாடாண் திணை என்பது.
அ) கைக்கிளைக்குப் புறனானது
ஆ) மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மைகளைக் கூறுவது
இ) ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.
Answer:
ஈ) ஆண்மகனின் போர்ச்சிறப்பை மட்டும் பாடுவது.

Also Read : Chapter-7.4---Cintanaip-pattimanram-Chapter-7-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen