SaraNextGen.Com

Chapter 8.3 - Iratcaniya yatrikam - Chapter 8 12th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் - Text Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.
பொறுத்தாரை இவ்வுலகம் பொன்போல் போற்றும் – என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.
Answer:
பங்கு பெறுவோர் : ராமு, கோபு மற்றும் தமிழ் ஆசிரியர்.

இருவரும் : ஐயா வணக்கம்.

தமிழ் ஐயா : வணக்கம் வாருங்கள் என்ன வேண்டும்?

ராமு : ஐயா, பொறுத்தார் என்பவரைப் பற்றிக் கூறுங்கள்

ஐயா : பிறர் நமக்கும் செய்யும் தவறுகளை, குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர் பொறுத்தார் ஏனென்றால் அவர் அறியாமையால் கூட தவறு செய்திருக்கலாம்.

கோபு : பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து – இந்தத் தொடருக்கு விளக்கம் வேண்டும் ஐயா!

சோமு : இதற்குச் சான்றான நடந்த நிகழ்வைக் கூறுங்கள் ஐயா.

ஐயா : விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்திக்கு எவ்வளவோ துன்பங்கள் எதிர்கொண்டன. இங்கிலாந்தில் ஒரு முறை சர்ச்சில் அரையாடைப் பண்டிதர் என்ற கேலி செய்தாராம். சபர்மதி ஆசிரமத்தில் ஹரிஜன மக்கள் உறுப்பினராவதை எதிர்த்து உயர்சாதி உறுப்பினர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர்.

காந்தி இதனையும் பொறுத்தார். அண்ணல் அம்பேத்காரைச் சட்ட அமைச்சராக்கி, அரசியல் நிருணய சபையின் தலைவராக்கியதால் அதில் இருந்த உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. இதை அம்பேத்கர் பொறுத்துக் கொண்டார் போதுமா
மாணவர்களே!

இருவரும் : நன்றி ஐயா! ‘பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து’ என்பதன் விளக்கம். அற்புதமாக இருக்கிறது ஐயா.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
Answer:

  • இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
  • வானம் இடிந்து விழவில்லையே!
  • கடல் நீர் வற்றவிவ்லையே!
  • உலகம் அழியவில்லையே எனப் புலம்பினர்.

சிறுவினா

Question 1.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் குமாரப் பருவத்தில் சரிதப்படலத்தில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
யூதர்களின் கொடுஞ்செயலில் இருந்து விடுபட முடியாமல் ஓர் ஏழைப்போல அமைதியாய் இருந்தார் என்பது பொருள்.

விளக்கம் :
யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டும் போது அவர் உடன்பட்டு இருந்தார். தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படாமல் வாழ வேண்டும் என்று இரக்கப்பட்டார். அன்பு என்ற கட்டிலிருந்து விடுபடாமல், எந்த உதவியும் இல்லாமல் ஏழையாய் அமைதியாய் நின்றார்.

நெடுவினா

Question 1.
எச்.ஏ. கிருட்டிணனார் “கிறித்துவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய ஐரோப்பியக் கிறுத்துவ தொண்டர்களைப் போல் தமிழ் சிறுத்துவ தொண்டாகளும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ.கிருட்டிணனார். இவருடைய பெற்றோரும் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கொண்டவர்.

தன் தந்தையின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் தான் கிருட்டிணனாரைக் கம்பராமாயணம் போல் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்று தூண்டியது. இக்காப்பியத்தின் இடையே தேவாரம் போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

(i) இறைமகனாரை (இயேசுவை) யூதர்கள் கயிற்றால் கட்டப்பட்டுத் துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து விடுபட முடியாமலும், எந்த உதவியும் பெற இயலாது ஏழையாய் நின்றார். அவர்கள் தமக்கு இழிவான செயல்கள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படுவார் என்று அவர்களுக்காக இரங்கினார்.

(ii) கொடியோர்கள் கூறிய இகழ்ச்சி மொழியானது தீக்கொள்ளியை தம் இதயத்தில் அழுத்தியது போல் இருந்தது. தம்மை துன்புறுத்தியவரை சினந்து கொள்ளாமல் மறுச்சொல்லும் கூறாமல் அமைதி காத்தார். இறைமகனாரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத்தரவும் உறுதியாக இருந்தனர்.

(iii) இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றினர். முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட முடியை அவருடைய தலையில் இரத்தம் பீறிட செய்தனர். கையிலிருந்த கோலினைப் பிடுங்கி தலையில் வன்மையாக அடித்தனர். திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர். இதைக் கண்ட மக்கள்

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
வானம் இடிந்து விழவில்லையே!
கடல் நீர் வற்றவில்லையே!
இன்னும் உலகம் அழியாமல் காலம் தாழ்த்தியதைக் கண்டு மக்கள் கொதித்தனர்.
பொல்லாத யூதர்கள் இறைமகனை இகழ்ந்து பேசிய சொல்லத்தகாத பழிமொழிகளைக் கேட்டு பொறுத் – திருந்தார்.

இலக்கணக் குறிப்பு

கருத்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
வெந்து, சினந்து, போந்து – வினையெச்சம்
உன்னலிர் – முன்னிலைப்பன்மை வினைமுற்று
ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
சொற்ற, திருந்திய – பெயரெச்சம்
பாதகர் – வினையாலணையும் பெயர்
ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

பகைத்த = பகை + த் + த் + அ
பகை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பழித்தனர் = பழ + த் + த் + அன் + அர்
பழடி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

களைந்து = களை + த்(ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

இடிந்து = இடி + த்(ந்) + த் + உ
இடி – பகுதி
த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. முன்னுடை = முன் + உடை

  • தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் எனும் விதிப்படி, முன்ன் + உடை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பு எனும் விதிப்படி, (ன் + உ = னு) முன்னுடை என்று புணர்ந்தது.

2. ஏழையென = ஏழை + என

  • ‘இ, ஈ, ஐ வழி யவ்வும் = எனும் விதிப்படி (ஐக்குய் தோன்றி) = ஏழை + ய் + என = என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி (ய் + எ = யெ) ஏழையென என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் ஆங்கில நூலின் தழுவலாக அமைந்த படைப்பு
அ) இரட்சணிய யாத்திரிகம்
ஆ) இரட்சணிய மனோகரம்
இ) மனோன்மணியம்
ஈ) போற்றித் திருஅகவல்
Answer:
அ) இரட்சணிய யாத்திரிகம்

Question 2.
இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர்
ஆ) வேநாயகம்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்
ஈ) ஜி.யு. போப்
Answer:
இ) எச்.ஏ.கிருட்டிணனார்

Question 3.
இரட்சணிய யாத்திரிகம் என்பது
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்
ஆ) சிற்றிலக்கியம்
இ) சிறு காப்பியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்

Question 4.
இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள்
அ) 3566
ஆ) 3677
இ) 3766
ஈ) 3244
Answer:
இ) 3766

Question 5.
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 6.
இரட்சணிய யாத்திரிகத்தின் இரட்சணிய சரித படத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் அமைந்துள்ள பருவம்
அ) ஆதிபருவம்
ஆ) குமார பருவம்
இ) நிதான பருவம்
ஈ) ஆரணிய பருவம்
Answer:
ஆ) குமார பருவம்

Question 7.
கிறித்துவக் கம்பர் என்று போற்றப்பட்டவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்
இ) ஜி.யு. போப்
ஈ) ஈராசு பாதிரியார்
Answer:
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்

Question 8.
திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் தொடராக வெளிவந்த ஆண்டுகள்
அ) 10
ஆ) 12
இ) 13
ஈ) 15
Answer:
இ) 13

Question 9.
இளமைத்தமிழே இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக வெளி வந்த நாள்
அ) 1894 – மே
ஆ) 1896 – ஏப்ரல்
இ) 1896 – மே
ஈ) 1892 – ஏப்ரல்
Answer:
அ) 1894 – மே

Question 10.
பொருத்துக.
i) பாதகர் – கூறவில்லை
ii) மாற்றம் – குற்றமில்லாத
iii) ஏதமில் – சொல்
iv) நுவன்றிவர் – கொடியவர்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 11.
பொருத்துக.
i) ஆக்கினை – உறுதி
ii) கூவல் – கடல்
iii) உததி – கிணறு
iv) நிண்ண யம் – தண்டனை

Question 12.
பொருத்துக.
i) மேதினி – கெடுதல்
ii) வாரிதி – பழி
iii) நிந்தை – கடல்
iv) பொல்லாங்கு – உலகம்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இறைமகன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் …………….. ஆளுநரின் முன் கொண்டுபோய் நிறுத்தினர்.

அ) போந்தியுராயன்
ஆ) போந்தியு பிலாத்து
இ) ஏரோது
ஈ) அகஸ்டஸ் சீசர்
Answer:
ஆ) போந்தியு பிலாத்து

Question 14.
பொருத்துக.
i) கருந்தடம் – வினையெச்சம்
ii) ஓர்மின் – பெயரெச்சம்
iii) வெந்து – பண்புத்தொகை
iv) திருந்திய – ஏவல் பன்மை வினைமுற்று

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 1, 3, 2
Answer:
அ) 3, 4, 1, 2

Question 15.
பொருத்துக.
i) உன்ன லிர் – வினையெச்சம்
ii) பாதகர் – அடுக்குத்தொடர்
iii) ஊன்ற ஊன்ற – வினையாலனையும் பெயர்
iv) போந்து – முன்னிலைப் பன்மை வினைமுற்று

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 16.
இறைமகன் இயேசுவை இகழ்ந்து பேசியவர்கள்
i) பொல்லாத யூதர்கள்
ii) போர்ச் சேவகர்
iii) போந்தியு பிலாந்து

அ) i, ii – சரி
ஆ) iii – மட்டும் தவறு
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
ஆ) iii – மட்டும் தவறு

Question 17.
இறைமகன் இயேசுவுக்கு வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, …………. மலர் போன்ற ஓர் சிவந்த அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
அ) காந்தன்
ஆ) முல்லை
இ) முளரி
ஈ) முருக
Answer:
ஈ) முருக

Question 18.
பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – இவ்வடிகளில் அமைந்துள்ள இலக்கிய நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) அந்தாரி
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை

குறுவினா

Question 1.
இரட்சணிய யாத்திரிகம் குறிப்பு வரைக.
Answer:

  • ஜான்பனியன் எழுதிய பில்கிரிமஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூல்.
  • எச். ஏ. கிருட்டிணனார் தமிழில் எழுதினார்.
  • 3766 பாடல்கள்.
  • ஐந்து பருவம் : ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம்.

Question 2.
யூதர்களின் கொடுஞ்செயலுக்கு இறைமகனார் இரங்கிய தன்மை யாது?
Answer:
இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்பட்டார்.

Question 3.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் எந்த இதழில் எத்தனை ஆண்டுகள் வெளியானது?
Answer:

  • ‘நற்போதம்’ எனும் ஆன்மிக மாத இதழ்.
  • பதின்மூன்று ஆண்டுகள்.
  • முதல் பதிப்பு – 1894 மே திங்கள்.

Question 4.
நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகம் எந்தப்பகுதியில் இடம் பெற்றுள்ளது?
Answer:
குமார பருவத்தில் இரட்சணிய சரித படலத்தில் இடம் பெற்றுள்ளது.

Question 5.
‘எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்தேனும் இறை முன்’ இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இயேசு பெருமானுக்குத் தண்டனை பெற அழைத்துச் செல்லுதல்.

விளக்கம்:
இறைமகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் நிறுத்தினர். தண்டனை பெற்று தரவும் உறுதியாகவும் இருந்தனர்.

Question 6.
எச்.ஏ. கிருஷ்ணனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
போற்றித்திருவகல், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம்.

Question 7.
கிறித்துவக் கம்பர் எனப் போற்றப்படுபவர் யார்?
Answer:
எச்.ஏ. கிருட்டிணனார்.

Question 8.
பாரி, பேகன் செயல் குறித்துப் பழமொழி நானூறு கூறுவன யாவை?
Answer:

  • முல்லைக்கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செயலும் அறியாமையால் செய்யப்பட்டவை அல்ல.
  • ஈகையால் செய்யப்பட்டவையே இது. இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பது. இதையே பழமொழி நானூறு.
  • ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.

Question 9.
என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்
என்கொல் வானம் இடிந்து விழுந்திவது என்பார். இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
பொருள் :
இறைமகனாரை யூதர்கள் துன்புறுத்தும் போது மக்களின் புலம்பல்.

விளக்கம் :
அணிந்திருந்த ஆடையைக் கழற்றி விட்டு முருக்க மலர் போன்ற ஆடையை அணிந்தனர். தலையில் கூர்மையான முள் முடியை அழுத்தினர். இரத்தம் பீறிட்டதைக் கண்டு உலகம் வெடிக்கவில்லையே! வானம் விழவில்லையே! கடல் வற்றவில்லையே! உலகம் இன்னும் ஏன் அழியவில்லை என்று ஜெருசலேம் மக்கள் புலம்பினர்.

Question 10.
சிறுபாணாற்றுப்படை – குறிப்பு வரைக.
Answer:
இயற்றியவர் : நல்லூர் ரத்தத்தனார்
நூல் அமைப்பு : பத்துப்பாட்டுகளுள் ஒன்று
பாட்டுடைத்தலைவன் : ஒய்மாநாட்டு நல்லியக் கோடன்
மொத்த அடிகள் : 269
ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று.
பரிசு பெற்ற பாணன் வழியில் கண்ட மற்றொரு பாணைனை ஆற்றுப்படுத்தல்.

சிறுவினா

Question 1.
எச். ஏ. கிருட்டிணனார் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
பெற்றோர் : சங்கர நாராயணன் – தெய்வநாயகி
காலம் : ஏப்ரல், 23, 1827 (23.04.1827)
ஊர் : திருநெல்வேலி – கரையிருப்பு
பணி : 32 ஆண்டு தமிழாசிரியர்
நூல்கள் : இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய நவநீதம், இரட்சணிய சமய நிர்ணயம்.
பெருமை : கிறித்துவக் கம்பர் இவருடைய நூல் நற்போதகம்’ எனும் இதழில் வெளிவந்தது.

Question 2.
இறைமகனாருக்கு யூதர்கள் செய்த கொடுஞ்செயல்கள் யாவை?
Answer:

  • யூதர்கள் இறைமகனாரைக் கயிற்றால் கட்டினர். ஒன்று கூடி இகழ்ந்தனர்.
  • கொல்வதற்காக ஆளுநர் போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர்.
  • அணிந்திருந்த ஆடையைக் கழற்றி முழுக்க மலர் போன்ற சிவந்த ஆடையைப் போர்த்தினர்.
  • கூர்மையான முள் செடியால் ஆன முடியை தலையில் வைத்து அழுத்தி, இரத்தம் பீறிடச் செய்தனர்.
  • கையில் இருந்த கோலைப் பிடுங்கி தலையில் அடித்தனர்.
  • திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர்.

Question 3.
தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல் குறிப்பு வரைக.
Answer:

  • புறநானூறு குறிப்பிடப்படும் வள்ளள் குமணன்.
  • முதிர மலையை ஆட்சி செய்தவன் (பழனி மலை)
  • தன் தம்பியிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்.
  • இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்று அறிவித்தான்.
  • அவ்வேளையில் குமணனை நாடி வந்த சாத்தனாருக்கு பொருள் இல்லாமையால் இடைவாளைத் தந்து தன் தலையை அரிந்து சென்று இளங்குமணனிடம் பரிசு பெறுமாறு வேண்டினான்.
  • இச்செய்தியைப் புறம் 158 – 164 – 165 பாடல் மூலம் அறிய முடிகிறது.

Also Read : Chapter-8.4---Cirupanarruppatai-Chapter-8-12th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen