SaraNextGen.Com

Chapter 3.3 - Teciyam katta cemmal pacumpon u.Mutturamalinkattevar - Chapter 3 Term 1 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

Question 1.
நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்கள் பற்றிய பிற செய்திகளைத் திரட்டி எழுதுக.
Answer:
காந்தியடிகள்:
(i) அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்குப்பாடுபட்டவர்.
(ii) வெள்ளையனே வெளியேறு இயக்கம் , உப்புச் சத்தியாகிரகம் ,ஒத்துழையாமை இயக்கம் , தீண்டாமை ஒழிப்பு ,மதுவிலக்கு முதலியன

நேதாஜி :
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.

வ.உ.சிதம்பரனார் நம் நாட்டிற்காகச் சுதேசக்கப்பல் வாங்கியவர். நாட்டுமக்களுக்காக சிறையில் செக்கிழுத்தவர்.

ஜவஹர்லால் நேரு காந்தியடிகளுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர்.

பூலித்தேவன் ஆங்கிலேயரை எதிர்த்து தன்பகுதியை வென்றவர்.விடுதலைப் போரின் முதல் முழக்கமிட்டவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமாட்டோம் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் …………………..
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
Answer:
இ) சாயல்குடி

Question 2.
முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் ……………….
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
Answer:
ஆ) நேதாஜி

Question 3.
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் ………………..
அ) இராஜாஜி
ஆ) பெரியார்
இ) திரு.வி.க
ஈ) நேதாஜி
Answer:
அ) இராஜாஜி

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு …………………
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு ………………….. யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் …………………………
Answer:
1. புலி
2. பெண்
3. அடர்ந்த முடிகள்

குறு வினா

Question 1.
முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
Answer:
1. வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.

2. உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி. – என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார்.

Question 2.
முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?
Answer:
1. முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.

2. அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.

3. இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது.

4. மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது.

Question 3.
முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
Answer:
1. முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

2. சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.

Question 1.
நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
Answer:
(i) நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார்.
(ii) அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
(iii) முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939ல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
(iv) நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
(v) விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்

Question 2.
தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
Answer:
(i) 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.

(ii) மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

(iii) உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.

(iv) பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

சிந்தனை வினா

Question 1.
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
1. உரிமைக்காகப் போராடுதல்
2. மக்கள் நலம் காத்தல்
3.பொதுநல வாழ்வு
4. பேச்சாற்றல்
5. சாதி, மத, இன,மொழி ஆகியன பாராமை
6. ஒழுக்கம் காத்தல்
7. பிறர்நிலையில் தன்னை வைத்துப்பார்த்தல்
8. மனிதநேயம்
9. நாட்டுப்பற்று
10. தியாக உணர்வு
ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தந்தைப் பெரியாரால் ‘சுத்தத் தியாகி’ என்று பாராட்டப்பட்டவர் ………………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 2.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் ……………._
அ) பசும்பொன்
ஆ) மதுரை
இ) கோவை
ஈ) சென்னை
Answer:
அ) பசும்பொன்

Question 3.
முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம் ………………….
அ) பசும்பொன்
ஆ) மதுரை
இ) இராமநாதபுரம்
ஈ) கமுதி
Answer:
ஈ) கமுதி

Question 4.
முத்துராமலிங்கத் தேவர் படித்துக்கொண்டிருந்த போது பரவிய நோய் ……………
அ) காலரா
ஆ) பிளேக்
இ) மலேரியா
ஈ) மஞ்சள் காமாலை
Answer:
ஆ) பிளேக்

Question 5.
வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட தலைவர் ……………….
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காந்திஜி
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
அ) பாலகங்காதர திலகர்

Question 6.
வங்கச் சிங்கம் என்று போற்றப்படுபவர்
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காந்திஜி
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
ஆ) காந்திஜி

Question 7.
நேதாஜி என்னும் வார இதழை நடத்தியவர் ………………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 8.
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் ……………..
அ) சாயல்குடி
ஆ) பசும்பொன்
இ) இராமநாதபுரம்
ஈ) வங்கம்
Answer:
அ) சாயல்குடி

Question 9.
முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு விடுதலைப்போருக்கு உதவும் என்று கூறியவர் ……………….
அ) பாலகங்காதர திலகர்
ஆ) காமராசர்
இ) நேதாஜி
ஈ) திரு.வி.க
Answer:
ஆ) காமராசர்

Question 10.
தென்னாட்டுச் சிங்கம் என்றழைக்கப்படக் கூடியவர் ……………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 11.
முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு ……………….
அ) 1947
ஆ) 1937
இ) 1957
ஈ) 1973
Answer:
ஆ) 1937

Question 12.
முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்திய இடம் ……………
அ) கமுதி
ஆ) பசும்பொன்
இ) சாயல் குடி
ஈ) இராமநாதபுரம்
Answer:
அ) கமுதி

Question 13.
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு
அ) 1948
ஆ) 1984
இ) 1949
ஈ) 1943
Answer:
அ) 1948

Question 14.
பாரதமாதா கூட்டுறவுப் பண்டக சாலை ஏற்படுத்தப்பட்ட இடம்
அ) கமுதி
ஆ) பசும்பொன்
இ) சாயல் குடி
ஈ) இராமநாதபுரம்
Answer:
அ) கமுதி

Question 15.
பாரதமாதா கூட்டுறவுப் பண்டக சாலை ஏற்படுத்தியவர் ………………
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 16.
ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தியவர் ……………….
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

Question 17.
உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தியவர் ………………..
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர

Question 18.
பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் …………………..
அ) முத்துராமலிங்கத் தேவர்
ஆ) நேதாஜி
இ) திரு.வி.க.
ஈ) காந்திஜி
Answer:
அ) முத்துராமலிங்கத் தேவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இளமையில் அன்னையை இழந்து இஸ்லாமியத்தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டவர் ………………
2. முத்துராமலிங்கத் தேவர் உயர்நிலைக் கல்வியைப் படித்த இடங்கள் ……………, ……………..
3. முத்துராமலிங்கத் தேவர் இளமையிலேயே ………………… ஆர்வம் மிகுதி.
4. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு …………………
5. நேதாஜி பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தியவர் ………………..
6. முதன் முதலில் முத்துராமலிங்கத் தேவர் பேசிய தலைப்பு ………………….
7. இந்திய அரசால் முத்துராமலிங்கத் தேவர் தபால்தலை வெளியிடப்பட்ட ஆண்டு ………………….
8. ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகப் கொண்டு வரப்பட்ட சட்டம் ……………………
9. முத்துராமலிங்கத் தேவர் ………………….. கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.
Answer:
1. முத்துராமலிங்கத் தேவர்
2. மதுரை, இராமநாதபுரம்
3. அரசியல்
4. கி.பி.1939
5. முத்துராமலிங்கத் தேவர்
6. விவேகானந்தர் பெருமை
7. கி.பி.1995
8. குற்றப்பரம்பரைச் சட்டம்.
9. மதுரை வைத்தியநாத ஐயர்

குறுவினா

Question 1.
முத்துராமலிங்கத் தேவர் எங்கு எப்போது பிறந்தார்?
Answer:
முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்ற ஊரில் பிறந்தார்.

Question 2.
முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் யாவர்?
Answer:
தந்தை : உக்கிர பாண்டியத்தேவர், தாய் : இந்திராணி அம்மையார்.

Question 3.
முத்துராமலிங்கத் தேவரின் படிப்பு பாதியில் நின்ற காரணம் யாது?
Answer:
இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருந்த போது , அவ்வூரில் பிளேக்’ நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதியில் நின்றது.

Question 4.
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்?
Answer:
நேதாஜி சுபாஷ் சந்திர போசு.

Question 5.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து மூதறிஞர் இராஜாஜி கூறியது யாது?
Answer:
முத்துராமலிங்கத் தேவர் பேச்ச உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது உதடுகளில் இருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது, அவர் வழக்கம் என்று முத்துராமலிங்கத் தேவர் குறித்து மூதறிஞர் இராஜாஜி பாராட்டுகிறார்.

Question 6.
முத்துராமலிங்கத் தேவர் பேச்சு குறித்து வட இந்திய இதழ்கள் பாராட்டிய செய்தி யாது?
Answer:
பாராளுமன்றத்தில் அவர் பேசிய ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர்காலத்தில் விட்டல் பாய், வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

Question 7.
முத்துராமலிங்கத் தேவரின் சிறப்புப்பெயர்கள் யாவை?
Answer:

  1. தேசியம் காத்த செம்மல்
  2. வித்யா பாஸ்கர்
  3. பிரவசன கேசரி
  4. சன்மார்க்க சண்ட மாருதம்
  5. இந்து புத்தசமய மேதை

Question 8.
விவசாயிகளின் தோழன் முத்துராமலிங்கத் தேவர் என்பதற்கான நிகழ்வினைக்குறிப்பிடுக.
Answer:
1. முத்துராமலிங்கத் தேவர் ‘ஜமீன் விவசாயிகள் சங்கம்’ ஏற்படுத்தி விவசாயிகள் துன்பம் போக்கப் பாடுபட்டார்.

2. தமக்குச் சொந்தமான 321/2 சிற்றூர்களில் இருந்த விளை நிலங்களைக் குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார்.

Question 9.
முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டிருந்த இடங்கள் யாவை?
Answer:

  1. அலிப்பூர்
  2. அமராவதி
  3. தாமோ
  4. கல்கத்தா
  5. சென்னை
  6. வேலூர்

Question 10.
முத்துராமலிங்கத் தேவர் எப்போது மறைந்தார்?
Answer:
30.10.1963ல் முத்துராமலிங்கத் தேவர் மறைந்தார்.

Question 1.
முத்துராமலிங்கத் தேவரின் இளமைக்காலம் குறித்து எழுதுக.
Answer:
பிறப்பு :
முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்ற ஊரில் பிறந்தார்.

முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் :
தந்தை : உக்கிர பாண்டியத்தேவர் தாய் : இந்திராணி அம்மையார். இளமையில் அன்னையை இழந்து இஸ்லாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.

படிப்பு பாதியில் நின்ற காரணம் :
இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருந்த போது , அவ்வூரில் ‘பிளேக்’ நோய் பரவியதால் அவரின் படிப்பு பாதியில் நின்றது.

Question 2.
முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு செய்த சிறப்புகள் யாவை?
Answer:
அரசு விழா
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் 30 ஆம் நாள் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகின்றது.

படம் மற்றும் சிலை
(i) தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
(ii) சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
(iii) நாடாளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தபால்தலை இந்திய அரசால் 1995ல் இவரின் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

Question 3.
பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை நிறுவியவர் யார்?எதற்காக நிறுவப்பட்டது?
Answer:
நிறுவியவர் :
பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை

நிறுவியவர் : முத்துராமலிங்கத் தேவர் நிறுவக்காரணம் கமுதியில் வியாபரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைப்பதற்காக பாரத மாதா கூட்டுறவு பண்டக சாலையை நிறுவினார்.

Also Read : Chapter-3.4---Kappalottiya-tamilar-Chapter-3-Term-1-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen