SaraNextGen.Com

Chapter 3.4 - Kappalottiya tamilar - Chapter 3 Term 1 7th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 கப்பலோட்டிய தமிழர்

Question 1.
பாரதியார், கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பறையில் உரையாற்றுக.
Answer:
பாரதியார்
வணக்கம். நான் தான் உங்கள் முறுக்கு மீசை பாரதி பேசுகின்றேன். மாணவர்களே நலமா? ஒருமுறை எனக்குப் பிடித்த பலகாரம் பற்றி ஒருவர் கேட்டார். நான் சற்றும் தயங்காமல் முறுக்கு என்றேன். அது குறித்த காரணம் இவர் கேட்டார்.முறுக்கு என்றுச் சொல்லும் போது நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி வெள்ளையர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற உணர்ச்சி பெருக்கேற்படுகின்றது.

அதனால் நான் முறுக்கை வீரப்பலகாரம் என்றே அழைக்கின்றேன். இப்போதும் முறுக்கேறி இலஞ்சம், ஊழல் செய்பவரை அடக்க முறுக்கு மீசை துடிக்கின்றது .சரி ! நேரம் ஆகிவிட்டது இற்றொரு நாள் வருகின்றென்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார். அவரின் உரை வழி , அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

சுதேசக் கப்பல்
தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர், கப்பல்களில் ஆங்கிலக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர்.இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை
சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரத நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர். ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது.

..சிதம்பரனாரின் தியாகம்
வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது, உள்ளம் தளரவில்லை . சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவுரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்றும் ஏக்கமும்
வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை ‘மனம் போல் வாழ்வு’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் முதலிய சிறு நூ ல்களைப் படைத்தார். சிறைவாழ்வு முடிந்து வ.உ.சிதம்பரனார் வெளியில் வந்த போது தன் குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார். ஆனால் கடற்கரையில் தன் ஆசைக்குழந்தை சுதேசக் கப்பலைக் காணாமல் வருத்தம் அடைந்தார் என்று நற்காலம் வருமோ என்று ஏங்கினார்.

முடிவுரை
“பயக் காண்பது சுதந்திர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்”
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?
என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர்
அ) அண்ணா
ஆ) இரா.பி. சேது
இ) வ.உ.சி
ஈ) பாண்டித்துரையார்
Answer:
ஆ) இரா.பி. சேது

Question 2.
தமிழின்பம் என்னும் நூலை எழுதியவர்
அ) அண்ணா
ஆ) இரா.பி. சேது
இ) வ.உ.சி
ஈ) பாண்டித்துரையார்
Answer:
ஆ) இரா.பி. சேது

Question 3.
இரா.பி. சேதுவின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
அ) தமிழின்பம்

Question 4.
வ.உ.சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி இரா.பி. சேதுவின் நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
இ) கடற்கரையினிலே

Question 5.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் நூல்
அ) தமிழின்பம்
ஆ) ஆற்றங்கரையினிலே
இ) கடற்கரையினிலே
ஈ) தமிழ் விருந்து
Answer:
அ) தமிழின்பம்

Also Read : Chapter-3.5---Valakku-Chapter-3-Term-1-7th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen