SaraNextGen.Com

Chapter 2.3 - Nilam potu - Chapter 2 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீலம் பொது

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.3 நீலம் பொது

Question 1.
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் :
(i) நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
(ii) காடுகள், மலைகள் அழிக்கப்படக்கூடாது.
(iii) வனவிலங்குகள், பறவைகளைப் பாதுகாத்தல்.
(iv) உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளதால் அவை அனைத்தையும் பாதுகாத்தல்.
(v) நீர்நிலைகளை கோடைக்காலத்தில் தூரெடுத்து வைத்து மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்தல். அதன் மூலம் நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்த்தல்.
(vi) நம் தேவைக்கு மரங்களை வெட்டினாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்.
(vii) நதிப்படுகைகளில் மரங்களை நடுதல்.
(viii) இயற்கை முறை வேளாண்மையை மேற்கொள்ளுதல்.

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ………………….. மதிக்கின்ற னர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
Answer:
அ) தாயாக

Question 2.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
Answer:
இ) இனிமை + ஓசை

Question 3.
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பால் ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
Answer:
ஆ) பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக

1. வேடிக்கை – விபத்து நேரிட்டால் வேடிக்கை பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.

2. உடன்பிறந்தார் – உற்றார், உறவினர், உடன்பிறந்தார், நண்பர் என அனைவருடனும் பாகுபாடின்றி அன்புடன் பழக வேண்டும்.

குறுவினா

Question 1.
விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
Answer:
விலைகொடுத்து வாங்க இயலாதவை : காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. எனவே இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாது.

Question 2.
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
Answer:
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.

Question 3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Answer:
(i) எருமைகள் கொல்லப்படுவது,
(ii) எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல்,
(iii) தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருதல் ஆகியனவற்றைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
Answer:
(i) “ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை.

(ii) இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள்.
(iii) இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்.

(iv) இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.

(v) இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்” இவ்வாறு சியாட்டல் கூறுகிறார்.

Question 2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
Answer:
சியாட்டல் கூறும் ஒரே குடும்பம் :
(i) “இந்தப் பூமி எமது மக்களுக்குத் தாயாகும். அதனால் இப்பூமியை எமது மக்கள் எப்பொழுது மறப்பதேயில்லை.

(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியது.

(iii) இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.

(iv) மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்” என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

Question 1.
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
தாய்மொழி, தாய்நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கும். அதன்படி செவ்விந்தியர்கள் தாய்மண் மீது வைத்துள்ள பற்றினைப் பற்றிய சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவரான சியாட்டல் கூறுவதைப் பார்ப்போம்.

ஒரே குடும்பம் :
காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் அனைவருக்கும் பொதுவானவை. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு ஊசியிலையும் அனைத்துக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பும் பூச்சி வகைகளும் இவர்களுக்குப் புனிதமானவை. இந்தப் பூமி. எமது மக்களுக்குத் தாயாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள், மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலைமுகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

நீர்நிலைகள் :
“ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீ ரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்.”

தாய் தந்தை :
இந்தப் பூமியை விலை கொடுத்து வாங்குபவர்கள் அயலவர்கள். இப்பூமி அவர்களின் உடன்பிறந்தார் அன்று. பகைவரே. இதனை வாங்குபவர்கள் வாங்கிய பின் இந்நிலத்தைவிட்டுச் சென்றுவிடுவார்கள். மண்ணை மறந்துவிடுவார்கள். இப்பூமியைப் பாலைவனமாக்கிவிடுவார்கள். ஆனால் செவ்விந்தியர்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுவார்கள்.

சிந்தனை வினா

Question 1.
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நான் கருதுவன :
(i) நிலங்களை மண் அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைய மரங்களை வளர்த்தல்.

(ii) ஏரி, குளம், போன்ற நீராதாரங்களைத் தூர்வாரச் செய்து மழைக் காலங்களில் நீரைச் சேமித்தல் மற்றும் அதிகளவில் அணைகளைக் கட்டுதல்.

(iii) ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்த் தொட்டித் திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றச் செய்வேன்.

(iv) நம் நாட்டின் மண்வளத்திற்கேற்ற புதிய வேளாண்மையைப் பரிந்துரை செய்தல். இயற்கை வேளாண் திட்டத்தை கட்டாயப்படுத்துதல்.

(v) நெகிழியைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல்.

(vi) வீட்டு விலங்குகள், வனவிலங்குகள் அழியாமல் பாதுகாத்தல்.

(vii) செல்பேசி கோபுரங்கள் இல்லாமல் செல்பேசியை இயங்கச் செய்தல்.

(viii) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அமெக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ………………………. பழங்குடியினர்.
2. பூஜேசவுண்ட்/சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ……………………
3. சியாட்டல் ……………………….. காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
4. சியாட்டல் அமெரிக்கக் ……………………… கடிதம் எழுதினார்.
5. விலை கொடுத்து வாங்க முடியாதவை என சியாட்டல் கூறியவை ……………………….
6. சுகுவாமிஷ் பழங்குடியினர் ………………… தாயாகவும் …………………… தந்தையாகவும் கருதக் கூடியவர்கள்.
Answer:
1. சுகுவாமிஷ்
2. சியாட்டல்
3. இயற்கை வளங்கள்
4. குடியரசுத் தலைவருக்குக்
5. காற்றின் தூய்மை, நீரின் உயர்வு
6. பூமியைத், வானத்தைத்

குறுவினாக்கள் :

Question 1.
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு எவையெல்லாம் புனிதமானவை?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினருக்கு பூமியின் ஒவ்வொரு துகளும் புனிதமானது. கூடவே, மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை.

Question 2.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் சகோதர சகோதரிகள் என்று கருதுகினற்னர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர், அவர்களுடைய பூமியில் உள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் தமது சகோதரிகள் என்றும் மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் தமது சகோதரர்கள் என்றும் கருதுகின்றனர்.

Question 3.
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியையும் வானத்தையும் எவ்வாறு கருதுகின்றனர்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதுகின்றனர்.

Question 4.
சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றையெல்லாம் விரும்புவார்கள்?
Answer:
சுகுவாமிஷ் பழங்குடியினர் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள் என்று சியாட்டல் கூறுகிறார்.

Question 5.
சியாட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவது, எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது, தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவது ஆகியவற்றைத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சியாட்டல் குறிப்பிடுகிறார்.

Question 6.
சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வைத்த வேண்டுகோள் யாது?
Answer:
“நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல நிலத்தை நேசியுங்கள்” என்று சியாட்டல் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Question 7.
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியவையாக சியாட்டல் கூறியது யாது?
Answer:
“எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.”

சிறுவினாக்கள்:

Question 1.
அமெரிக்கர்கள், பழங்குடியினரின் நிலத்தை எவ்வாறு மாற்றி விடுவார்கள் என்று சியாட்டல் கூறுகின்றார்?
Answer:
சியாட்டல் கூறுவன :
“இப்பூமியானது உங்களின் உடன்பிறந்தார் அன்று; பகைவரே. இதனை வென்று கையகப்படுத்தியபின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுங்கள். நீங்கள் உங்கள் தந்தையர்களின் இடுகாடுகளைக்கூட மறந்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவீர்கள். பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையுங்கூட நீங்கள் மறந்துவிடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும் உங்களுக்கு ஆடுகள் அல்லது மணிகள் விற்பது போன்றவை. உங்களுடைய கோரப் பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.”

Question 2.
அமெரிக்க நகரங்களின் காட்சிகளெல்லாம் செவ்விந்தியர்களின் கண்களை எவ்வாறு உறுத்துகின்றன?
Answer:
அந்நகரங்களில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை . அவர்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை.

மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன. மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்க இயலாது.

Question 3.
காற்றின் இன்றியமையாமை குறித்து சியாட்டல் கூறுவன யாவை? (அல்லது) காற்றைப் பற்றி செவ்விந்தியர்களின் கருத்து யாது?
Answer:
காற்று மிகவும் மதித்துப் போற்றக்கூடியது. விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் காற்று இன்றியமையாத ஒன்றாகும்.

Question 4.
‘நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்று’ – விளக்குக.
Answer:
நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகும். நாம் படுத்துறங்கும் இடத்தை நாமே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நாம் தூக்கியெறிந்த குப்பைகளுக்குள்ளேயே நாம் மூச்சுமுட்டி இறக்க நேரிடும். எனவே நிலத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Also Read : Chapter-2.4---Vettukkiliyum-carukumanum-Chapter-2-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen