SaraNextGen.Com

Chapter 2.4 - Vettukkiliyum carukumanum - Chapter 2 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
இடம் : குறிஞ்சி புதர்
கதாபாத்திரங்கள் : வெட்டுக்கிளி, சருகுமான்
(குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அங்கு வந்த கூரன் என்ற சருகுமானிடம் வெட்டுக்கிளி பேசியது…)

காட்சி – 1
வெட்டுக்கிளி :
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”

சருகுமான் :
காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடி ஓடிக் களைத்துப் போய்விட்டேன்.
(சிறுத்தை துரத்திக் கொண்டு வருவதால் கூரன் மரக்கிளைக்கு அடியில் ஒளிந்து கொண்டு வெட்டுக்கிளியை எச்சரித்தது.)

சருகுமான் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.

காட்சி – 2
(பித்தக்கண்ணு சத்தமில்லாமல் மரக்கிளைக்கு அருகில் வந்து சேர்ந்தது.)

பித்தக்கண்ணு : கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(வெட்டுக்கிளி பதில் கூறவில்லை . ஆனால் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. பித்தக்கண்ணு வெட்டுக்கிளியின் செய்கையால் கூரன் ஒளிந்திருந்த மரத்தடிப் பக்கம் சென்று மோப்பமிட்டது. மோப்பம் பிடித்தபடி சுற்றி வந்தது. அதற்குக் கூரனின் உடல்வாடை தெரியவில்லை . முதல் நாள் இரவு அந்த மரத்தடியில் தங்கியிருந்த புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. எனவே அது அந்த இடத்தைவிட்டு வேறு பக்கம் சென்றது. கூரன் : (தன்னைக் காட்டிக் கொடுக்க எண்ணிய வெட்டுக்கிளியை மிரட்ட வேண்டும் என்று எண்ணியபடி வெளியே வந்தது.)

கூரன் :
முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான். இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.

(சொல்லிக் கொண்டே கூரன் தன் கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. குறிஞ்சிப்புதர் ஆடியதில் வெட்டுக்கிளி கீழே விழப்போனது. கூரன் காட்டுக்குள் ஓடியது. அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது.)

மதிப்பீடு

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது முன்னோர்களின் வாழ்வை வருங்காலத் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு சொல்லிய கதைகளுள் ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறிஞ்சிப்புதர் :
நடுக்காட்டில் ஓடும் ஓடையையுடைய பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் அந்த மரத்தை மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டு விலங்குகள் நீர் அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்ததும் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

வெட்டுக்கிளியும் சருகுமானும் (கூரனும்) :
குறிஞ்சிப் புதரில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும். கூரன் என்ற சருகுமான் சிறிய பிராணி, கூச்சப்படும் விலங்கு. அதனால் வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன் குறிஞ்சிப் புதர் அருகே இளைப்பாற வந்தது.

கூடி ஒளிந்த கூரன் :
கூரனைப் பார்த்த வெட்டுக்கிளி, “இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தாய்? ஏன் இங்கும் அங்கும் வேகமாய் ஓடுகிறாய்?” என்று கேட்டது. கூரன், “காட்டின் அந்தக்கோடியில் இருந்தேன். உன்னிடம் பேச நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்துகிறது” என்று கூறிவிட்டு அம்மரத்தடியில் ஒளிந்து கொண்டது. வெட்டுக்கிளியிடம் நீ “பித்தக்கண்ணுவிடம் நான் இங்கு இருப்பதைச் சொல்லிவிடாதே. என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்…” என்றது. பித்தக்கண்ணு என்பது பெரிய, மஞ்சள் நிற கண்களை உடைய சிறுத்தையாகும்.

வெட்டுக்கிளியின் செயல் :
பித்தக்கண்ணுவைப் பக்கத்தில் பார்ப்பது வெட்டுக்கிளிக்கு இதுதான் முதல்முறை. உற்சாக மிகுதியால் பதில் சொல்ல எண்ணிய பொழுது கூரனுக்கு அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தால் வாயை மூடிக் கொண்டது. ஆனால் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

பித்தக்கண்ணுவின் ஏமாற்றம் :
வெட்டுக்கிளியின் ஆட்டத்திற்கான பொருளை உணர்ந்த பித்தக்கண்ணு, கூரன் , பதுங்கிக் கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல்நாள் இரவுதான் அந்த மரத்தடியில் புனுகுப் பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம் மிகவும் நாறும். அதனால் கூரனின் உடல்வாடை பித்தக்கண்ணுவின் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக புனுகுப்பூனையின் துர்நாற்றமே எட்டியது. பித்தக்கண்ணு சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

கூரனின் மிரட்டல் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்த வெட்டுக்கிளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணியது. “முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக் குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல் விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்” என்று வெட்டுக்கிளியைக் கூரன் மிரட்டிக் கொண்டே தனது கூர்மையான பாதங்களை மண்ணின் மீது அழுத்தி எகிறிக் குதித்தது. தன் கோபப் பார்வையை வீசிவிட்டுக் காட்டுக்குள் ஓடியது.

முடிவுரை :
அன்றிலிருந்து வெட்டுக்கிளி அச்சத்துடன் வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தத் திசையை நோக்கியும் குதிப்பதில்லை.

Also Read : Chapter-2.5---Vinaimurru-Chapter-2-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen