SaraNextGen.Com

Chapter 4.3 - Palturaik kalvi - Chapter 4 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 1.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
Answer:

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் …………..
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
Answer:
அ) இளமை

Question 3.
இன்றைய கல்வி …………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
Answer:
ஈ) தொழிலில்

நிரப்புக

1. கவப்பில் …………. உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு …………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ……………. இன்பம் ஆகும்.
Answer:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய

பொருத்துக

1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
2. இயற்கைத் தவம் – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் — பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
Answer:
1. இயற்கை ஓவியம் –  பத்துப்பாட்டு
2.. இயற்கைத் தவம் – சிந்தாமணி
3. இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்
4. இயற்கை அன்பு – பெரிய புராணம்

குறுவினா

Question 1.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
இன்றைய கல்வியின் நிலை :
(i) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(ii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iii) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகும் என்று இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுகிறார்.

Question 2.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
Answer:
நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. முதலில் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

Question 3.
திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.

சிறுவினா

Question 1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக்.
Ans;
(i) தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்து விடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன.

(ii) அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.

(iii) தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

(iv) கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

Question 2.
அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை.

(ii) உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.

(iii) புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

(iv) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் :
(i) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ செல்ல வேண்டும்.

(iii) தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

சிந்தனை வினா

Question 1.
திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
Answer:
(i) நான் கற்க விரும்புவது இசைக்கல்வி.

(ii) இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இறைவனிடம் நாம் பேசுவது இசைமொழியில்தான்.

(iii) ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்களுடைய பாடல்களை இசைத்தே இறைவனை மகிழ்வித்துள்ளனர். இசையானது, கவலை என்ற நோயைத் தீர்க்கும் மருந்தாகும். எனவே நான் இசைக்கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அறிவே ………………… என்பது ஆன்றோர் கூற்று.
2. ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்பவை ……………………
3. கேடில் விழுச்செல்வம் ………………..
4. அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது ……………… எனப்படும்.
5. ……………… மட்டும் கல்வி ஆகாது.
6. கல்வி என்பது …………………… தேடும் வழிமுறையன்று.
7. ஒவ்வொருவரும் அவரவர் ……………… வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு.
8. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ………………. ஒன்று.
9. இயற்கை ஓவியம் ……………………
10. இயற்கை இன்பக்கலம் …………………….
11. இயற்கை வாழ்வில்லம் ……………….
12. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் ……………………
13. இயற்கைத் தவம் …………………
14. இயற்கைப் பரிணாமம் …………………..
15. இயற்கை அன்பு ………………..
16. , இயற்கை இறையுறையுள் …………………….
17. இன்றைய சூழலில் ………………….. இன்றியமையாதது.
18. நாடகத்துக்கு நல்வழியில் ………………… வழங்க வேண்டும்.
19. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது …………………. என்னும் அறிவுக்கலை.
20. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் …………………… போன்றது.
21. திரு.வி.க. …………………. என்று அழைக்கப்படுகிறார்.
22. பல்துறைக்கல்வி’ என்ற பாடப்பகுதி ……………….. என்னும் நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
23. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் ………………….

Answer:
1. ஆற்றல்
2. அறிவும் உழைப்பும்.
3. கல்வி
4. கல்வி
5. ஏட்டுக்கல்வி
6. வருவாய்
7. தாய்மொழி
8. காவிய இன்பமும்
9. பத்துப்பாட்டு
10. கலித்தொகை
11. திருக்குறள்
12. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
13. சிந்தாமணி
14. கம்பராமாயணம்
15. பெரியபுராணம்
16. தேவார, திருவாசக திருவாய் மொழிகள்
17. இசைப் பயிற்சியும்
18. புத்துயிர்
19. அறிவியல்
20. கொழுகொம்பு
21. தமிழ்த்தென்றல்
22. இளமைவிருந்து
23. விஜயலட்சுமி பண்டிட்

விடையளி :

Question 1.
நாடகக்கல்வி பற்றி திரு.வி.க.வின் கருத்து யாது?
Answer:
நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன். இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு. இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை. நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும். நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக.

Question 2.
திரு.வி.க. – சிறுகுறிப்பு வரைக.
Answer:
(i) திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்றும் அழைக்கப்படுகிறார்.

(ii) இவர், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 3.
எது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்?
Answer:
(i) இந்நாளில் ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி ஆகாது.

(ii) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(iii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iv) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்.

Question 4.
இசைக்கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலருக்கு துணை செய்வதில்லை. அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.

(ii) பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.

(iii) தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம்.

(iv) அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்த வேண்டும்

Question 5.
திரு.வி.க. இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
(i) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
(ii) பெண்ணின் பெருமை
(iii) தமிழ்ச்சோலை
(iv) பொதுமை வேட்டல்
(v) முருகன் அல்லது அழகு
(vi) இளமை விருந்து.

Also Read : Chapter-4.4---Anra-kutippirattal-Chapter-4-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen