SaraNextGen.Com

Chapter 4.4 - Anra kutippirattal - Chapter 4 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 ஆன்ற குடிப்பிறத்தல்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 ஆன்ற குடிப்பிறத்தல்

Question 1.
திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வந்து வகுப்பில் பகிர்க.
Answer:
குறள் :
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உணர்த்தும் கதை :
“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…. மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
“தெரியலப்பா…”
“இறங்கி யாருன்னு பாரு…”
“வாட்ட சாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா… நீங்க…”
“வெளியூருப்பா… வண்டி நின்னு போச்சு….!”
“அப்படியா…. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க மழை வர்ற மாதிரியிருக்கு ஊரு ரொம்ப தூரம்… வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

இரவுல தூங்கப் போறப்ப…. அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க…. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்படுகிறாரே…

மதிப்பீடு

Question 1.
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
குறள் வழிக் கதை மூலம் மாணவன் ஒருவன் நடந்து கொண்ட விதமும் ஊராரின் எண்ணங்களும் ஆசிரியரின் நல்ல முடிவு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

ஆசிரியரின் வேட்டி :
ஆசிரியர் ஒருநாள் தனது வேட்டியைத் துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்றார். பிறகு வந்து பார்த்தபோது வேட்டியைக் காணவில்லை. ஊராரில் சிலர் சிகாமணிதான் எடுத்திருப்பார் என்று சந்தேகத்துடனும் சிலர் உறுதியுடனும் கூறினர். சிகாமணியின் தந்தையும் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். அதனால் அவரது பழக்கம் இவரைத் தொற்றிக் கொண்டது என்றனர்.

வகுப்பறையில் ஆசிரியர் :
ஆசிரியருக்கு வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. அன்று வகுப்பறையில் பண்புடைமை’ என்ற அதிகாரத்திலுள்ள குறட்பாவை நடத்தத் தொடங்கினார். ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்ற தொடருக்குப் பொருள் கூறும்போது வகுப்பிலிருந்த சிகாமணியின் மகன் சகாதேவன் ஆசிரியரை கூர்ந்து நோக்கினான். ஆசிரியரும் அவனை அடிக்கடி பார்த்தார்.

குறள்வழி அறிவுரை :
“ஆன்ற குடிப்பிறத்தல்’ என்றால் சிறந்த குடி உன்னிடமிருந்து தொடங்கட்டும். அப்பன் திருடனாயிருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் சொல், திருடன்தான்! அவன் பையனைச் சொல்லாதே, அவன் மிக நல்லவன் என்று உலகோர் பேசுவர். அதுபோல் கெட்டப்பழக்கங்கள் தந்தையுடன் செல்லட்டும். உன்னிலிருந்து நல்ல புதிய குடி உதிக்கட்டும்” என்றார். மேலும் “ஒழுக்கம் இல்லாத பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்கவேண்டும்” என்று கூறினார்.

உணவு இடைவேளை :
உணவு இடைவேளையில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவன் சகாதேவன் கொடுக்கச் சொன்னதாக வேட்டியைக் கொடுத்தான். பிறகு ‘வேட்டியைச் சிகாமணிதான் எடுத்தார் என்றும் தானே ஆசிரியரிடம் கொடுப்பதற்கு வெட்கப்படுவதாகவும், சகாதேவன் கூறியதாகக் கூறினான்.

உண்மை அறிந்த ஊரார் :
சிகாமணிதான் திருடன் என அறிந்ததும் ஊரார் அவரைத் தண்டிக்கத் தொடங்கினர். ஆசிரியர் தடுத்துவிட்டார். சிகாமணியைத் தண்டித்தால் அவன் அவனுடைய மகனான சகாதேவனைத் தண்டிப்பான். அதனை சகாதேவன் நேர்மைக்குக் கிடைத்த பலனாகக் கருதி வருந்துவான்” என்று தடுத்தமைக்குக் காரணம் கூறினார்.

மறுத்த ஊரார் :
“அவனைவிடக்கூடாது சார்!” என்று கடைசிவரை ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஆசிரியர் இறுதியில் “நீங்கள் தண்டனைதான் கொடுக்க வேண்டுமெனில், நான் என் வேட்டியே திருடு போகவில்லை என்று கூறுவேன்” என்றார்.

முடிவுரை :
ஒருவிதமாக ஊரார் ஆசிரியரின் கருத்தைப் புரிந்து கொண்டனர். சிகாமணி, சகாதேவன், ஆசிரியர் மூவரும் தப்பித்தனர்.

Also Read : Chapter-4.5---Verrumai-Chapter-4-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen