SaraNextGen.Com

Chapter 5.2 - Patarittu olukutal - Chapter 5 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

Question 1.
அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பசியால் வாடும் ……………. உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
Answer:
ஆ) அலந்தவர்க்கு

Question 2.
நம்மை …………..ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
Answer:
அ) இகழ்வாரை

Question 3.
மறைபொருளைக் காத்தல் …………….. எனப்படும்.
அ) சிறை
ஆ) அறை
இ) கறை
ஈ) நிறை
Answer:
ஈ) நிறை

Question 4.
‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) பாட் + அறிந்து
ஆ) பா + அறிந்து
இ) பாடு + அறிந்து
ஈ) பாட்டு + அறிந்து
Answer:
இ) பாடு + அறிந்து

Question 5.
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) முறையப்படுவது
ஆ) முறையெனப்படுவது
இ) முறை எனப்படுவது
ஈ) முறைப்படுவது
Answer:
ஆ) முறையெனப்படுவது

குறுவினா

Question 1.
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
Answer:
(i) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(ii) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

Question 2.
முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
Answer:
(i) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ii) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.

சிறுவினா

Question 1.
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்கள்:
(i) இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
(ii) பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
(iii) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(iv) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
(v) அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
(vi) செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
(vii) நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
(viii) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ix) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

சிந்தனை வினா

Question 1.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்கள் :
(i) பிறரிடம் அன்பு காட்டுதல்.
(ii) இனிமையாகப் பழகுதல்.
(iii) மறந்தும் கூட பிறருக்குக் கேடு நினையாமை
(iv) பெற்றோரை மதித்தல், பேணுதல்.
(v) தெய்வத்தை வழிபடுதல்.
(vi) ஒழுக்கத்துடன் வாழ்தல்.
(vii) பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமை.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. அலந்தவர் – வறியவர்
2. செறாஅமை – வெறுக்காமை
3. நோன்றல் – பொறுத்தல்
4. போற்றார் – பகைவர்
5. கிளை – உறவினர்
6. பேதையார் – அறிவற்றவர்
7. மறாஅமை – மறவாமை
8. பொறை – பொறுமை

நிரப்புக :

1. கலித்தொகை …………….. நூல்களுள் ஒன்று.
2. கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் ………………
3. கலித்தொகை ………………. என்னும் பாவகையால் பாடப்பட்டது.
4. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………….
5. கலித்தொகையில் நல்லந்துவனார் இயற்றிய பிரிவு ……………….
6. சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் …………………
7. பாதுகாத்தல் என்பது ……………… பிரியாது வாழ்தல்.
8. வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பது ……………..
9. தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் …………….
10. அறிவு எனப்படுவது ………………. கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்வது.
Answer:
1. எட்டுத்தொகை
2. கலித்தொகை
3. கலிப்பா
4. நல்லந்துவனார்
5. நெய்தற்கலி
6. பண்பு
7. அன்புடையோரைப்
8. இல்வாழ்வு
9. பொறுமை
10. அறிவற்றவர்

விடையளி :

Question 1.
கலித்தொகை – குறிப்பு எழுதுக.
Answer:
தொகுத்தவர் நல்லந்துவனார்
(i) கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
(ii) இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
(iii) நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
(iv) குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

Question 2.
நல்லந்துவனார் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
(ii) இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
(iii) கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியுள்ளார்.

Question 3.
ஆற்றுதல், போற்றுதல் ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
Answer:
(i) இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
(ii) பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

Question 4.
அறிவு, செறிவு என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
Answer:
(i) அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
(ii) செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நூல் வெளி
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றிவரும் இவரே.

பாடலின் பொருள்
இல்வாழ்வு என்பது வறியவர்க்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

Also Read : Chapter-5.3---Nattuppurak-kaivinaik-kalaikal-Chapter-5-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen