SaraNextGen.Com

Chapter 5.3 - Nattuppurak kaivinaik kalaikal - Chapter 5 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 1.
உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்களைச் செய்து காட்சிப்படுத்துக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பனையோலையால், செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை …………………
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
Answer:
இ) பனையோலைகள்

Question 2.
பானை ……………….. ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
Answer:
ஆ) வனைதல்

Question 3.
‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
Answer:
ஈ) மட்டும் + அல்ல

Question 4.
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்க ட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
Answer:
அ) கயிற்றுக்கட்டில்

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. முழுவதும் – தொழிலாளி நாள் முழுவதும் உழைப்பார்.

2. மட்டுமல்லாமல் – புயல் காற்று வீசியதில் செடிகொடிகள் மட்டுமல்லாமல் மரங்களும் வீழ்ந்தன.

3. அழகுக்காக – முகத்தின் அழகுக்காக இயற்கைக் களிம்புகளை மட்டும் பயன்படுத்தலாம்.

4. முன்பெல்லாம் – மாணவர்களுக்கு முன்பெல்லாம் ஓடியாடி விளையாடுவதற்கு நேரம் இருந்தது.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
Answer:
கைவினைக் கலைகள் :
(i) மண்பாண்டங்கள் செய்தல்.
(ii) மூங்கில் கொண்டு பொருள்கள் செய்தல்.
(iii) பனையோலையில் பொருள்கள் செய்தல்.
(iv) பிரம்பினால் பொருள்கள் செய்தல்.
(v) மண் பொம்மைகள் செய்தல்.
(vi) – மரபொம்மைகள் செய்தல்.
(vii) காகிதப் பொம்மைகள் செய்தல்.
(viii) தஞ்சாவூர்த்தட்டு செய்தல்.
(ix) சந்தன மாலையும், ஏலக்காய் மாலையும் செய்தல்.
(x) மாட்டுக்கொம்பு, சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்

Question 2.
மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.
Answer:

Question 3.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
Answer:
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் :
(i) குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை
(ii) பொம்மைகள்
(iii) பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்
(iv) பெரிய கூடை
(v) சுளகு
(vi) விசிறி
(vii) தொப்பி
(vii) ஓலைப்பாய்

சிறுவினா

Question 1.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
Answer:
(i) முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவர்.
(ii) சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி – வளைப்பர்.
(iii) அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும்.
(iv) பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும்.
(v) பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவர்.

Question 2.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
Answer:
(i) மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன.

(ii) மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக் குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன.

(iii) பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.

(iv) திருமணத்தின் போது துணிகள், பழங்கள், பலகாரங்களை வைத்துக் கொடுப்பதற்குச் சீர்க்கூடைகளாகப் பயன்படுகின்றது.

(v) கடவுள் வழிபாட்டின் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை முறத்தில் வைத்துப் படைப்பர். அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன.

நெடுவினா

Question 1.
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். மண்பாண்டம்

செய்தல் :
குளங்கள், ஆற்றங்கரை, வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும் களிமண்ணைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இப்பாண்டங்கள் சமையல் செய்வதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் பயன்படுகின்றன.

சுடுமண் சிற்பங்கள் :
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். இதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் செய்யப்படுகின்றன.

மூங்கில்கலை :
மூங்கிலைக் கொண்டு மட்டக்கூட்டை, தட்டுக் கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத் தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் செய்யப்படுகின்றன.

கோரைப்பாய் :
கோரைப்புல்லைப் பயன்படுத்தி பந்திப்பாய், தடுக்குப்பாய், திண்ணைப்பாய், பட்டுப்பாய், தொழுகைப்பாய் எனப் பலவகையான பாய்கள் செய்யப்படுகின்றன. பாய்களில் மயில், பூக்கள், குத்துவிளக்கு, வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவையும் இடம் பெறுகின்றன.

பனையோலை :
பனையோலைகளைப் பயன்படுத்திக் கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் போன்றவை செய்யப்படுகின்றன. பனைமட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன. பிரம்புக்கலை :
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப் பெட்டி எனப் பல பொருள்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன.

பலவகைப் பொருள்கள் :
மண் பொம்மைகள், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப் பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக் கொம்பினால் கலைப் பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்.

முடிவுரை :
கைவினைக் கலை அழியாமல் இருக்க நாம் அப்பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

சிந்தனை வினா

Question 1.
கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) தமிழகக் கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டவை.

(ii) பயன்பாட்டிற்குப் பின்னர் இவற்றை மண்ணில் போட்டாலும் நிலவளம் பாதிக்காது. . ஏனெனில் இவை மட்கும் தன்மையுடையவை.

(iii) இப்பொருட்களை செய்வதற்கு எவ்வித இரசாயனப் பொருள்களையும் * பயன்படுத்துவில்லை. ஆகையால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. .

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்தவை ……………….
2. ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை …………………. தாழிகள்.
3. செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்டவை ………………….
4. கீழடியில் கிடைத்தவை ……………. பொருள்கள்.
5. பானை செய்யும் சக்கரம் ……………. எனப்படும்.
6. பானை செய்தலைப் ……………….. என்று சொல்வது மரபு.
7. மண்பாண்டங்களில் வைத்த தண்ணீர் ……………… இருக்கும்.
8. மண்பாண்டக்கலையின் வளர்ச்சி நிலை …………………..
9. வேண்டுதல் நிறைவேறினால் வைக்கப்படும் சிற்பம் ……………………
10. ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்னும் பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல் ………………..
11. பிரம்பு …………… வகையைச் சேர்ந்த தாவரம்.
Answer:
1. பானை ஓடுகள்
2. முதுமக்கள்
3. மண்கலங்கள்
4. சுடுமண்
5. திருவை
6. பானை வனைதல்
7. குளிர்ச்சியாக
8. சுடுமண் சிற்பக்கலை
9. குதிரைச் சிற்பம்
10. புறநானூறு
11. கொடி

குறுவினா :

Question 1.
களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
Answer:
குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி.

Question 2.
களிமண் எங்கெங்குக் கிடைக்கும்?
Answer:
களிமண் குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

Question 3.
சுடுமண்ணில் செய்யப்படும் சிற்பங்கள் யாவை?
Answer:
மனித உருவங்கள், விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பல வகையான சிற்பங்கள் சுடுமண்ணில் செய்யப்படுகின்றன.

Question 4.
பாயின் பயன்பாட்டினைப் பற்றிப் புறநானூறு கூறுவது யாது?
Answer:
முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய் பயன்பட்டுள்ளது என்பதனைப் புறநானூறு ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்னும் அடியில் குறிப்பிடுகிறது.

Question 5.
பாய்களில் எவ்வெவை இடம் பெறுகின்றன?
Answer:
(i) திருமணத்திற்குப் பயன்படுத்தும் பட்டுப்பாய்களில் மணமக்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.
(ii) குத்துவிளக்கு, மயில், பூக்கள், வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவைகளும் இடம் பெறும்.

Question 6.
பிரம்பில் செய்யப்படும் பொருள்கள் யாவை?
Answer:
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத் தட்டு, வெற்றிலைப்பெட்டி எனப் பலவகையான பொருள்கள் பிரம்பில் செய்யப்படுகின்றன.

சிறுவினா :

Question 1.
பலவகையான பாய்களின் பெயர்களை எழுதுக.
Answer:
(i) குழந்தைகளைப் படுக்கவைப்பது தடுக்குப்பாய்.
(ii) உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய்.
(iii) உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய்.
(iv) திருமணத்துக்குப் பயன்படுத்துவது பட்டுப்பாய்.
(v) இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப்பாய்.

Question 2.
நீ அறிந்த கைவினைக் கலைகள் யாவை?
Answer:
(i) மண் பொம்மைகள் செய்தல்
(ii) மரப் பொம்மைகள் செய்தல்
(ii) காகிதப் பொம்மைகள் செய்தல்
(iv) தஞ்சாவூர்த் தட்டு செய்தல்
(v) சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல்
(vi) மாட்டுக் கொம்பினால் கலைப்பொருள்கள் செய்தல்
(vii) சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல் ஆகியவையாகும்.

Also Read : Chapter-5.4---Tamilar-icaikkaruvikal-Chapter-5-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen