SaraNextGen.Com

Chapter 6.2 - Malaiccoru - Chapter 6 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Question 1.
உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா
உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா
என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.

(ii) நாடு செழித்திடவே
நல்ல மழை பெய்ய வேணும்
தேசம் செழித்திடவே
செல்ல மழை பெய்ய வேணும்.

(iii) பட்டி பெருகவேணும்
தம்பிரானே
பால்பானை பொங்க வேணும்
தம்பிரானே
மேழி பெருகவேணும்
தம்பிரானே
மாரிமழை பெய்ய வேணும்
தம்பிரானே.

(iv) வானத்து ராசாவே! மழை வழங்கும் இன்னுயிரே!
கூழு குடிச்சறியோம்! கூப்பிட்டா சத்தமில்லே!
சட்டியிலே மாவரைத்துச் சந்தியெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியுமுன்னே ஒருகொள்ளை மழை பெய்யாதோ!
நாடு செழிக்க நல்ல மழை பெய்யாதோ!
காடு செழிக்க கனத்த மழை பெய்யாதோ!
ஏத்து மீனும் ஏறாதோ?
எங்க பஞ்சம் தீராதோ?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ……………….
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடைமிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
Answer:
அ) பெருமழை

Question 2.
‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்
Answer:
அ) வாசல் + எல்லாம்

Question 3.
‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
Answer:
ஈ) பெற்று + எடுத்தோம்.

Question 4.
கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
Answer:
ஆ) காலிறங்கி

குறுவினா

Question 1.
மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
Answer:
மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை :
மழை பெய்யாததால் செடி, கொடிகள் வளரவில்லை. உழவர்களின் பசி தீரவில்லை. மழை இல்லாததால் கலப்பையைப் பிடிக்க இயலவில்லை. ஏற்றம் இறைக்க இயலவில்லை. இவற்றையெண்ணி உழவர்கள் மனம் சோர்ந்து மனம் ஏங்கி வேதனையுற்றனர்.

Question 2.
மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
Answer:
உழவர்கள் மழையை வேண்டி வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகும் மழைபெய்யாததால் ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

சிறுவினா

Question 1.
கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
Answer:
கோலம் கரையாத நிலை:
(i) வாளியில் பச்சரிசி மாவைக் கரைத்து வாசல் முழுவதும் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.

(ii) பானையில் மாவைக் கரைத்து பாதையெல்லாம் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.

Question 2.
மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
Answer:
(i) கல் இல்லாத காட்டில் கடலைச்செடி போட்டனர்.
(ii) முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டனர்.
(iii) முத்து போன்ற மழை பெய்யாததால் அவையெல்லாம் வாடின என்று பாடுகின்றனர் உழவர்கள்.

Question 3.
மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
Answer:
மழைச்சோறு எடுத்தபின் பேய்மழை பெய்தது. ஊசிபோல நிலத்தில் இறங்கி உலகம் முழுவதிலும் மழை பெய்தது. சிட்டுபோல் மின்னல் மின்னி உலகெங்கும் பொழிந்தது. உலகெங்கும் செல்ல மழை பெய்தது. .

சிந்தனை வினா

Question 1.
மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?
Answer:
மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன :
(i) மரங்கள் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
(ii) வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நட வேண்டும்.
(iii) ஆற்று மணலை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(iv) நிலத்தடி நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(v) குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர்நிலைகளைக் கோடைக் காலங்களில் தூர்வாரி வைத்து மழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(vi) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ………………….. உண்டு.
2. ‘கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரை …………………. என்னும் நூலில் உள்ளது.
3. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்’ என்னும் நூலின் பதிப்பாசிரியர் ………………….
Answer:
1. மாமழைக்கு
2. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
3. அ. கௌரன்

விடையளி :

Question 1.
‘மழைச்சோறு’ பாடலில் மழை பெய்யாததால் மக்கள் என்ன செய்தனர்?
Answer:
(i) மழை பொய்த்ததால் மக்கள் மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்தனர். அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

(ii) பாடலைப் பாடிக்கொண்டே சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

Question 2.
‘மழைச்சோற்று நோன்பு’ என்பது யாது?
Answer:
(i) மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.

(ii) ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.

(iii) கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வு மழைச்சோற்று நோன்பு எனப்படுகிறது.

நூல் வெளி
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு ‘மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

தெரிந்து தெளிவோம்
மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.

கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

Also Read : Chapter-6.3---Konkunattu-vanikam-Chapter-6-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen