SaraNextGen.Com

Chapter 6.1 - Valam perukuka - Chapter 6 Term 2 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

Question 1.
உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
நெசவுத்தொழிலின் பல செயல்கள் :
(i) சாயம் போடுதல்.
(ii) பாவு சரி செய்தல்.
(iii) இழைச் சிக்கெடுத்தல்.
(iv) கஞ்சி போடுதல்.
(v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல்.
(vi) தறியேற்றுதல்.
(vii) சரிகை வடிவமைப்புச் செய்தல்.
(viii) நெய்தல்.
(ix) மடித்தல்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………… எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள்
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்
Answer:
ஈ) வித்துகள்

Question 2.
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ………………….. பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
Answer:
இ) வாரி

Question 3.
‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
Answer:
அ) அ + களத்து

Question 4.
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிரின்ன
Answer:
இ) கதிரீன

குறுவினா

Question 1.
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?
Answer:
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது தகுந்த காலத்தில் பொழியும் மழை ஆகும்.

Question 2.
உழவர்கள் எப்போது ஆர்வார ஒலி எழுப்புவர்?
Answer:
நெற்போரினை அடித்து நெல்லினைத் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்.

சிறுவினா

Question 1.
உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
Answer:
(i) சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கியது.

(ii) அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிட்டன.

(iii) முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிந்தது.

(iv) தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்ந்தன.

(v) கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈன்றன.

(vi) அக்கதிர்கள் அறுவடை செய்யப்பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைந்தன.

(vi) அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குகிறது.

(vii) போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர். இவையே உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவனவாகும்.

சிந்தனை வினா

Question 1.
உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதன :
(i) மாறும் சூழலுக்கு ஏற்ப விவசாய முறையை மாற்றுதல்.

(ii) இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் பொருள்களுக்கு ஏற்ற விலையை நிர்ணயித்தல்.

(iii) விளைநிலங்களை வீடுகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.

(iv) உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பு இருந்தால் உழவர்களின் பொருளுக்கேற்ற விலை அவர்களுக்குக் கிடைக்கும்.

(v) இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து, புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.

(vi) இதற்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாத்து மழையின் அளவு பெருகுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். பொழிகின்ற மழைநீரைச் சேமித்து நிலத்தடிநீர் உயர்வதற்கான பணியைச் செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வாரி – வருவாய்
2. எஞ்சாமை – குறைவின்றி
3. முட்டாது – தட்டுப்பாடின்றி
4. ஒட்டாது – வாட்டம் இன்றி
5. வைகுக – தங்குக
6. ஓதை – ஓசை
7. வெரீஇ – அஞ்சி
8. யாணர் – புதுவருவாய்

நிரப்புக :

1. யாணர் என்பதன் பொருள் …………… .
2. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் ……………… கிளத்து வளரும்.
3. உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் அஞ்சிப் பறப்பவை ………………..
4. தகடூர் இன்று ………………. என்று அழைக்கப்படுகிறது.
5. தகடூர் யாத்திரையின் சில பாடல்கள் ………………….. என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Answer:
1. புது வருவாய்
2. வாட்டமின்றி
3. நாரை இனங்கள்
4. தர்மபுரி
5. புறத்திரட்டு

விடையளி :

Question 1.
தகடூர் யாத்திரை பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
(ii) இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை .
(iii) இந்நூலில் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

பாடலின் பொருள்
சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக. அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க.

கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக.

போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.

Also Read : Chapter-6.2---Malaiccoru-Chapter-6-Term-2-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen