SaraNextGen.Com

Chapter 7.3 - Muttollayiram - Chapter 7 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Question 1.
நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு, என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக.
Answer:
நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும்.
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன் “சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்” ஆவார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடிசூட்டிக் கொண்டனர்.
தென்காசி பெரியகோயில் பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காணப்படுகின்றன.

தென்காசிப் பகுதியை ஆண்ட பாண்டியர்களில் “கொல்லங்கொண்டான்” என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான். தென்காசியில் பாண்டிய மன்னர்களின் ஆளுகை 17ம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது. தென்காசி கோவிலில் உள்ள இவனது மெய்க்கீர்த்தி “பூமிசைவளிதை நாவினில் பொலிய” எனத் தொடங்குகிறது. பொன்னி பெருமான், மானக்கவசன் போன்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். திருக்குற்றாலத்தில் சேர மன்னன் ஒருவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான்.

ஆற்றிய அறப்பணிகள்:

  • ஐந்து ஊர்களில் அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான்.
  • திருக்குற்றாலம், திருப்புடைமருதூரில் உள்ள சிவாலயங்களுக்கு மண்டபங்கள் அமைத்தான்.
  • நெல்லை சிவன் கோவிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான்.
  • செங்கோல் ஆட்சி நடத்திய சடையவர்மன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான்.
  • இவ்வாறு எங்கள் ஊரை ஆண்ட பாண்டிய வேந்தனின் பெருமைகளை எழுதிக்கொண்டே போகலாம். எம் ஊரில் வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

Question 2.
நெல் விதைப்பு முதல் அரிசி புடைப்பது வரை, வயல்களக்காட்சியை அறிந்து தகுந்த படங்களுடன் காட்சிப்படுத்துக.
Answer:

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உருவகத்தொடர், வினைத்தொகை
ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை
ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
Answer:
ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

Question 2.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை
ஆ) புள் – தாவரம்
இ) அள்ளல் – சேறு
ஈ) மடிவு – தொடக்கம்
Answer:
இ) அள்ளல் – சேறு

Question 3.
நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
Answer:
இ) சேர நாடு, சோழ நாடு

குறுவினா

Question 1.
அள்ளல் பழனத்து அரக்காம்பால் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
Answer:

  • அள்ளல் – சேறு
  • பழனம் – வயல்

சிறுவினா

Question 1.
சேர, சோழ, பாண்டி நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
Answer:
சேரநாடு:
சேறுபட்ட நீர்வளம் மிகுந்த வயல்பகுதிகளில் அரக்கு நிறம்கொண்ட செவ்வாம்பல் மலர்கள் மெல்ல தம் வாயவிழ்ந்து விரிந்தன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தம் தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

சோழநாடு:
சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்து “நாவலோ” என்று கூவி அழைப்பர் நாவலோ “இந்நாள் வாழ்க சிறக்க” என்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

பாண்டியநாடு:
வெண்கொற்றக்குடையை உடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்துகிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக்குவியல்களைப்போலவே காட்சியளித்தன என்று முத்தொள்ளாயிரம் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துக் கூறுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
அ) சோழநாடு
ஆ) சேரநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சேரநாடு

Question 2.
‘நாள்வாழ்க’ என்னும் வாழ்த்துப்பொருளை உணர்த்தும் சொல் யாது?
அ) காவலோ
ஆ) நாவலோ
இ) பந்தரோ
ஈ) நச்சிலையோ
Answer:
ஆ) நாவலோ

Question 3.
“கொல் யானை மேலிருந்து” இத்தொடரில் கொல்யானை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) உரிச்சொற்றொடர்
இ) உருவகம்
ஈ) வினைத்தொகை
Answer:
ஈ) வினைத்தொகை

Question 4.
பொருத்துக.

Answer:

Question 5.
பொருத்திக்காட்டுக.
அ) கோதை – 1. சோழர்
ஆ) கிள்ளி – 2. பாண்டியர்
இ) தென்னன் – 3. சேரர்
அ) 3, 1, 2
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 1, 2

Question 6.
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு அடிகளில் இடம் பெறும் அணி ………………
அ) உவமை
ஆ) உருவகம்
இ) பிறிதுயெறுதல்
ஈ) வேற்றுமை
Answer:
அ) உவமை

Question 7.
முத்தொள்ளாயிரத்தின் பா …….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) வெண்பா

Question 8.
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள முத்தொள்ளாயிரத்தின் செய்யுள்கள்
அ) 106
ஆ) 108
இ) 110
ஈ) 112
Answer:
ஆ) 108

Question 9.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
அ) நக்கீரர்
ஆ) பரணர்
இ) கபிலர்
ஈ) அறிய முடியவில்லை
Answer:
ஈ) அறிய முடியவில்லை

Question 10.
முத்தொள்ளாயிரம் ஆசிரியரின் காலம் ……………….
அ) முன்றாம் நூற்றாண்டு
ஆ) நான்காம் நூற்றாண்டு
இ) ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) ஆறாம் நூற்றாண்டு
Answer:
இ) ஐந்தாம் நூற்றாண்டு

Question 11.
பொருத்திக்காட்டுக.
அ) சேர நாடு – 1. ஏர்க்க ளச் சிறப்பு
ஆ) சோழ நாடு – 2. அச்சமில்லாத நாடு
இ) பாண்டிய நாடு – 3. முத்துடை நாடு
அ) 2, 1, 3
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 2, 3, 1
Answer:
அ) 2, 1, 3

குறுவினா

Question 1.
சோழ நாட்டின் சிறப்புகளாக முத்தொள்ளாயிரச் செய்யுளில் கூறப்படுவன யாவை?
Answer:
ஏர்க்களச் சிறப்பு, போர்க்களச் சிறப்பு.

Question 2.
நீர்ப்பறவைகள் அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டதற்காண காரணம் யாது?
Answer:
சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்ததைக் கண்டு தண்ணீரில் தீப்பிடித்துவிட்டதாக அஞ்சி தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் நீர்ப்பறவைகள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.

Question 3.
‘நாவலோ’ என்று கூவி அழைப்பவர் யார்?
Answer:
நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர்.

Question 4.
முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெறும் மன்னர்களைக் குறிப்பிடுக.
Answer:
சேர, சோழ, பாண்டியர்.

Question 5.
அஞ்சி, வெண்குடை – இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பை எழுது.
Answer:
அஞ்சி – பெயரெச்சம்,
வெண்குடை – பண்புத்தொகை.

Also Read : Chapter-7.4---Maturaikkanci-Chapter-7-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen