SaraNextGen.Com

Chapter 7.4 - Maturaikkanci - Chapter 7 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Question 1.
ஊரின் பெயர்க்காரணம் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடுபவர்கள்: செல்வன், கிள்ளை , மது. இன்று நாம் வகுப்பில் மதுரையைப் பற்றி பல அரிய செய்திகள் அறிந்து கொண்டோம். அது போல் எங்கள் ஊருக்கும் பெயர் ஏற்பட காரணங்கள் உண்டு. நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்வோமா!

செல்வன் : மது, கிள்ளை நான் முதலில் சொல்லட்டுமா.

மது : சொல் செல்வா! உன் ஊர் ஈரோடு தானே.

செல்வன் : ஆம், ஈரோடு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ……..
துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான திருமாலின் வாயில் காப்போனாகிய தைபர் என்பவரின் தலை ஓடு நான்காகப் பிளவுபட்டதாம். அதில் பெரிய ஓடு வீழ்ந்த இடம் பேரோடு என்றும், சிறிய ஓடு விழுந்த இடம் சித்தோடு என்றும், வெள்ளை ஓடு விழுந்த இடம் வெள்ளோடு என்றும், ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்றும் பெயர் பெற்றதாம். சித்தோடு, பேரோடு, வெள்ளோடு ஆகிய ஊர்கள் ஈரோட்டிற்கு அருகிலே உள்ளன.

கிள்ளை : அப்படியாடா ஆச்சரியமாக இருக்கிறதே……….
சரி செல்வன் எங்கள் சொந்த ஊர் தூத்துக்குடி. அதன் பெயர்க்காரணம் என்ன தெரியுமா?

தூர்த்து + குடி. தூர்த்து’ என்பதன் பொருள் கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்’ என்பது ஆகும். ‘குடி’ என்பதற்கு ‘குடியமர்தல்’ என்று பொருள். கடலில் இருந்து உருமாறி மக்கள் வாழத் தகும் நகராக மாறியதால் ‘தூத்துக்குடி’ எனப் பெயர் பெற்றதாம்.

மது : எங்கள் ஊர் சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி ஆகும். அதற்கு ஏன் அப்பெயர் வந்தது தெரியுமா?

மல்லிகைப்பூக்கள் (செடிகள்) அதிக அளவில் பயிரிடப்பட்ட பகுதி இது. இவ்விடத்தை சமஸ்கிருதத்தில் ‘புஷ்பகவல்லி’ என்றும், தமிழில் ‘பூவிருந்தவல்லி’ என்றும் வழங்கினர். நாளடைவில், பூந்தமல்லியாக மாறிவிட்டது.

நாம் மூவரும் நம் ஊரின் பெயர்க்காரணத்தை அறிந்து வைத்திருக்கிறோம் மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா?
(மாணவர்களே உங்கள் ஊரின் பெயர்க்காரணத்தையும் அறிந்து கொள்ளுங்கள்)

Question 2.
தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட உலகின் தொன்மை நகரங்களில் ஒன்று மதுரை. அந்நகரத்தில் இயலும் இசையும் நாடகமும் பொங்கிப் பெருகின – இத்தொடர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கருத்துகளைத் திரட்டி ஐந்து மணித்துளிகள் பேசுக.
Answer:
மதுரையின் சிறப்புகள் (மேடைப் பேச்சு)

இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நகரம் மதுரை ஆகும். தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம். 2500 ஆண்டுகளுக்கு மேலான பழம் பெருமை வாய்ந்தது. கி.மு 4 முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்ககாலம். இக்காலத்தில் தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம்.

கௌடில்யர், மெகஸ்தனிஸ் ஆகியோரின் குறிப்புகளிலும் மதுரை பெருமை பெறுகிறது.

மரபுச்சின்னமாக மதிக்கப்படும் மதுரை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட நகரமாகும்.

சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச்சோழர், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், மதுரை சுல்தான், விஜயநகரப்பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் ஆண்டுள்ளனர்.

பல வரலாற்று நினைவிடங்களைக் கொண்டிருந்த போதிலும் மீனாட்சியம்மன் கோவிலும். திருமலை நாயக்கர் அரண்மனையும் புகழ் பெற்றவை. சித்திரைத் திருவிழாவும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும் இந்நகரின் புகழ்பெற்ற திருவிழாக்கள் ஆகும். சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிறப்பு நிகழ்வாகும்.

பொங்கல் திருநாளில் நகரின் அருகில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஏறுதழுவுதல் நிகழ்வும் பெயர் பெற்றது ஆகும்.

இந்நகரம் கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக் கூடல், திரு ஆலவாய் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

7ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற்புராணத்திலும் மதுரையின் சிறப்புப் பெயர்கள், பெருமைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற அனைத்து இலக்கியங்களிலும் மதுரையின் பெருமை பேசப்படுகிறது.

சிலப்பதிகாரம் மூலம் மதுரையில் இயலும், இசையும் பொங்கிப் பெருகியது என்பதை உணரலாம். இவ்வாறு மதுரையின் பெருமை வரலாற்று சிறப்பு என பேசிக் கொண்டே போகலாம். அதற்கு முடிவே இராது.

நன்றி! வணக்கம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
மதுரைக் காஞ்சி – பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள். “மதுரை” நகரைக் குறிக்கும்.
  • மதுரை நகரின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றியக் கருத்துகளைக் கூறுவதாலும், இப்பெயர் பெற்றது.

சிறுவினா

Question 1.
“மாகால் எடுத்த முந்நீர் போல” – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம் :
மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றிக் குறிப்பிடும் போது புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விளக்கம்:
ஆறு போன்ற தெருக்களில் பல்வேறு பொருள்களை வாங்க வந்த பல்வேறு மொழி பேசும் மக்களின் ஒலியோடு விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் ஒலிக்கின்றன. “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ” ஒலிக்கிறது. இதனையே “மாகால் எடுத்த முந்நீர் போல” என்றார் மாங்குடி மருதனார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
அ) மணல்
ஆ) கடல்
இ) அகழி
ஈ) ஆறு
Answer:
இ) அகழி

Question 2.
மதுரைக்காஞ்சி நூலின் மொத்த அடிகள் எத்தனை?
அ) 732
ஆ) 752
இ) 782
ஈ) 792
Answer:
இ) 782

Question 3.
மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?
அ) 254
ஆ) 284
இ) 324
ஈ) 354
Answer:
ஈ) 354

Question 4.
பொருத்துக:
அ) புழை – 1. நீர்நிலை
ஆ) பனை – 2. ஓவியம்
இ) கயம் – 3. முரசு
ஈ) ஓவு – 4. சாளரம்
Answer:
அ) 4 ஆ) 3 இ) 1 ஈ) 2

Question 5.
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
அ) சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) செய்யுளிசை அளபெடை
ஈ) இயற்கை அளபெடை
Answer:
இ) செய்யுளிசை அளபெடை

Question 6.
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
அ) தஞ்சாவூர்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) முசிறி
Answer:
இ) மதுரை

Question 7.
மதுரைக்காஞ்சி பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) ஓரம்போகியார்
ஈ) மாங்குடி மருதனார்
Answer:
ஈ) மாங்குடி மருதனார்

Question 8.
மாங்குடி மருதனார் எட்டுத் தொகையில் …………… பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14
Answer:
இ) பதின்மூன்று

Question 9.
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்
ஆ) கிள்ளிவளவன்
இ) வெற்றிவேற்செழியன்
ஈ) நெடுஞ்செழியன்
Answer:
அ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன்

Question 10.
காஞ்சி என்ற சொல்லின் பொருள் ……………. ஆகும்.
அ) உண்ணாமை
ஆ) அழியாமை
இ) இல்லாமை
ஈ) நிலையாமை
Answer:
ஈ) நிலையாமை

Question 11.
மாகால் – இலக்கணக் குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) தொழிற்பெயர்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
ஈ) உரிச்சொல் தொடர்

குறுவினா

Question 1.
மாங்குடி மருதனார் – குறிப்பு வரைக.
Answer:
மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறுவினா

Question 1.
மதுரைக்காஞ்சி குறிப்பு வரைக.
Answer:

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமைத் தத்துவத்தைக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப் பெயர்.
  • இந்நூல் 782 அடிகளை உடையது.
  • இந்நூலை இயற்றியவர் மாங்குடி மருதனார் ஆவார்.
  • இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்.

நெடுவினா

Question 1.
மதுரை மாநகரின் அழகை மாங்குடி மருதனாரின் வழி விளக்குக.
Answer:
முன்னுரை:
மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கில், மதுரைக்காஞ்சி முதன்மையானது. இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன.

· மதுரையின் சிறப்புகள்:
மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய் பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது. மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

· மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் .பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற

அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

முடிவுரை :
காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலின் பொருள்:

· மதுரை மாநகரிலே ஆழமான, தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது.

· பழமையானதும், வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. வாயில் கதவுகளில் நெய் பூசியதால் கரிய நிறமும், வலிமையும் உடையதாய் மாறிவிட்டன.

· மேகங்கள் உலவும் மலைமுகடுகளைப் போல மாளிகைகள் ஓங்கி உயர்ந்து உள்ளன. இடைவிடாது பாய்ந்தோடும் வைகையைப் போல மக்கள் வாயில் வழி சென்று கொண்டே இருக்கின்றனர்.

· மண்டபம், கூடம், அடுக்களை என பல்வேறு அங்கங்களை உடையதாய், வான்வரை ஓங்கிய, தென்றல் காற்று இசைத்து நுழையும் பல சாளரங்களைக் கொண்ட நல் இல்லங்கள் உள்ளன.

· ஆறு போன்ற அகன்ற நீண்ட தெருக்களில் மலையெனக் குவிந்து கிடக்கும் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்ற நகரம்,

· விழா பற்றிய முரசறைவோனின் முழக்கமானது. பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும்

· இசை, நீர்நிலைகளைக் கைகளினால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகின்றது.

· இசையைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும், அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன என்று மதுரைக் காஞ்சி, மதுரையின் பெருமையைக் கூறுகிறது.

Also Read : Chapter-7.5---Cantai-Chapter-7-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen