SaraNextGen.Com

Chapter 7.5 - Cantai - Chapter 7 9th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை

Question 1.
சந்தை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
நாடகம்
நேரம் : காலை
உறுப்பினர் : தாத்தா, கீர்த்தி, குமரன், தாத்தாவின் நண்பர்

காட்சி – 1

தா.நண்பர் : வாங்க! வாங்க! என்ன பேரன் பேத்தியோடே வரீக!
தாத்தா : ஆமா ஆமா …… ஊர்ல இருந்து வந்திருக்காக. அங்கெல்லாம் ‘மால்’ போய் பழகுனவங்க…. வித்தியாசமா இருக்கட்டுமேனு கூட்டிட்டு வந்தேன்.
தா.நண்ப ர் : ஓ …… அப்படியா ….. சரி சரி …..
நான் பொருள்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நீங்க சீக்கிரம் போங்க கொஞ்ச நேரத்துல கூட்டம் அலைமோதும்.

காட்சி – 2

(தாத்தா, கீர்த்தி, குமரன்)
குமரன் : என்ன தாத்தா கூட்டம் அலைமோதுமா என்ன?
தாத்தா : ஆமாம் குமரா! சுற்றி உள்ள அத்தன ஜனமும் இந்த சந்தைக்குத் தான் வருவாக…..
கீர்த்தி : அப்படியென்ன தாத்தா இந்த சந்தையில் விசேஷம்.

தாத்தா :  இந்த சந்தையிலே கிடைக்காத பொருளே கிடையாது……. கடுகு, சீரகத்துல
இருந்து, மண்பானை, அலுமினியப்பானை, பூ, பழம், இரும்புப்பொருள், துணிமணின்னு என்னென்ன உண்டோ அனைத்தும் வாங்கலாம்.
குமரன் : விலை எல்லாம் எப்படித் தாத்தா இருக்கும்?

தாத்தா : கண்ணு ….. கிராமத்து சந்தையில், உற்பத்தியாளன் தான் விற்பனையாளன். பிற ஊருக்கு அனுப்புவது, இடைத் தரகர்கள், குளிரூட்டப்பட்ட அறை என்று எந்தக் கூடுதல் செலவும் கிடையாது. உற்பத்தியாளரே தருவதால் சரியான விலைக்குக் கிடைக்கும்.

கீர்த்தி : தாத்தா ……. அதோ அந்தப்பக்கம் கோழி, ஆடு, மாடும், இருக்கு

தாத்தா : ஆமாம்மா….. உழவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கின்ற கோழி, கோழிக்குஞ்சு, ஆடு, மாடுகளைக் கூட்டி வந்து விலை கூறி விற்பர். கால்நடைகளை வளர்த்து விற்பதும் சிலருக்கான தொழில் …….

இருவரும் : சந்தையைப் பற்றிக் கேட்கவே ஆசையா இருக்கு தாத்தா. இனி நாங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம், சந்தை கூடும் நாளில் எங்களை அழைத்து வாங்க தாத்தா! சரியா!.

Question 2.
சந்தை/அங்காடியில் உள்ள பொருள்களுக்கான விலைப்பட்டியல் எழுதிய விளம்பரப்பதாகை ஒன்றை உருவாக்குக.
Answer:

Question 3.
சிறு வணிகர் ஒருவரிடம் நேர்காணல் செய்க.
Answer:
எ.கா: சந்தைப் பொருள்கள் மீதமானால் என்ன செய்வீர்கள்?
இடம் : கடை வீதி
சிறுவணிகர் : நாகராஜன். கா.
நேர்காண்பவர் : அமிழ்தன்

அமிழ் : ஐயா! தங்கள் பெயர் என்ன?
வணிகர் : என் பெயர் நாகராஜன்.
அமிழ் : எத்தனை ஆண்டுகளாக இந்த இடத்தில் வணிகம் செய்கிறீர்கள்?
வணிகர் : பத்து ஆண்டுகள் முடிந்து போயிருச்சு.
அமிழ் : என்னென்ன பொருள்கள் வைத்து வணிகம் செய்கிறீர்கள்?
வணிகர் : தேங்காய், கீரை வகைகள், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற கறிகாய் வகைகள்.

அமிழ் : ஐயா! இவையெல்லாம் உங்கள் தோட்டத்தில் விளைந்ததா?
வணிகர் : இல்லை தம்பி! எனக்குத் தோட்டம் துரவெல்லாம் கிடையாது. பக்கத்து கிராமத்துக்குக் காலையிலேயே போயி, தோட்டக்காரங்ககிட்ட நேரடியா வாங்கிட்டு வருவேன்……
அமிழ் : உங்களுக்குப் போதுமான வருமானம் வருதா ஐயா?
வணிகர் : எங்க தம்பி, போட்ட காச எடுத்தாலே போதும் …. சில நாள் அது கூட கிடைக்காது.

அமிழ் : ஏன் ஐயா! சந்தை, தினசரி சந்தை இப்படி எங்காவது போய் விற்கலாம் அல்லவா!
வணிகர் : அங்கெல்லாம் பெரிய, பெரிய வணிகருங்க இருப்பாங்க. கடை வாடகைக்குப் பிடிக்கணும் வரி குடுக்கணும் அதெல்லாம் கட்டுப்படியாகாது அப்பா…..
அமிழ் : ஐயா! இந்தக் காய்கறி, கீரை எல்லாம் மிஞ்சிப்போனா என்ன பண்ணுவீங்க?

வணிகர் : சாயுங்காலம் வரை பாத்துட்டு விலையைக் கொஞ்சம் குறைச்சுக் குடுப்பேன். இல்லன்னா தெரிஞ்ச ஹோட்டல் கடைகள். வேற மளிகைக் கடையில கொடுத்துருவேன் தம்பி ……
அமிழ் : சரி ஐயா! கேட்ட கேள்விக்கு எல்லாம் பொறுமையாய்ப் பதில் சொன்னீங்க. உங்க வணிகம் வளர வாழ்த்துகள் ஐயா

நன்றி!

Question 4.
“கடன் அன்பை முறிக்கும்” இது போன்ற சொற்றொடர்களைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், சந்தைகளில் பார்த்து எழுதுக.
Answer:

  • கடன் அன்பை முறிக்கும்.
  • கடன் கிடையாது.
  • கடன் நட்புக்குப் பகை.
  • கடன் படாதே கலங்கி நில்லாதே. கடன் கேட்காதீர்.
  • உனக்குக் கடன் தந்தால் என் கடன் அடைக்க இயலாது.
  • கடனாளி ஆகாதே. என்னையும் கடனாளி ஆக்காதே.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.
Answer:
உற்பத்தியாகும் பொருள் :
மனிதர்கள் நாடோடியாக, வேட்டையாடி கிடைத்த உணவை உண்டனர். பின்னாளில் நால்வகை நிலங்களில் உற்பத்தி பெருகியது. காய்கறி, கீரை, தானியம் ஆகியவற்றை உற்பத்தி செய்தனர்.

சந்தையில் காணும் பொருள்:
உழவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்கவும், மாற்றுப்பொருளை வாங்கவும் முச்சந்தி, நாற்சந்தி என மக்கள் கூடும் இடங்களில் கடை விரித்துப் பொது வணிகமாக்கினர்.

நெடுவினா

Question 1.
எங்கள் ஊர் சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக.
Answer:

நாளிதழ் செய்தி

மானூர் சந்தையின் புகழ்:
ஜூன் 16 – நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (சனிக்கிழமை) மட்டும் கூடும். எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

காய்கறிகள், தானியவகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தைவெளியில் உண்டாம்.

எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.

வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு.

சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.

நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மாட்டுத்தாவணி என்னும் சொல்லில் தாவணி என்பதன் பொருள்………….
அ) நுந்தை
ஆ) சந்தை
இ) கூட்டம்
ஈ) தொழுவம்
Answer:
ஆ) சந்தை

Question 2.
கூற்று 1: சந்தையில் வணிகம் மட்டும் அல்லாது வாங்குபவரின் மனநிறைவும் பேணப்பட்டது.
கூற்று 2 : பகலில் செயல்படும் அங்காடி அல்லங்காடி
கூற்று 3 : நாகர்கோவில் தோவாளை பூச்சந்தையாகும் – இவற்றுள் சரியான கூற்று எவை?
Answer:
கூற்று 1, 3 சரியானவை

Question 3.
புகழ்பெற்ற போச்சம்பள்ளிச் சந்தை எம்மாவட்டத்தில் உள்ளது?
அ) கிருஷ்ண கிரி
ஆ) தர்மபுரி
இ) கடலூர்
ஈ) தஞ்சாவூர்
Answer:
அ) கிருஷ்ணகிரி

குறுவினா

Question 1.
நாளங்காடி, அல்லங்காடி – வேறுபடுத்துக.
Answer:

  • பகலில் செயல்படும் கடைவீதிகளை ‘நாளங்காடி’ என்றும்
  • இரவில் செயல்படும் கடைவீதிகளை அல்லங்காடி’ என்றும் கூறுவர்.

சிறுவினா

Question 1.
சந்தைக்கும் பல்பொருள் அங்காடிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுக.
Answer:

Question 2.
போச்சம்பள்ளிச் சந்தை – குறிப்பு வரைக.
Answer:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள். விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது. 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது. கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.

Question 3.
தமிழகத்தில் சந்தைக்குப் பெயர் பெற்ற ஊர்களைப் பட்டியலிடுக.
Answer:

· மணப்பாறை – மாட்டுச்சந்தை

· அய்யலூர் – ஆட்டுச்சந்தை

· ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை

· நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை

· ஈரோடு – ஜவுளிச்சந்தை

· கடலூர், காராமணி குப்பம் – கருவாட்டுச் சந்தை

· நாகப்பட்டினம் – மீன் சந்தை

Also Read : Chapter-7.6---Akupeyar-Chapter-7-9th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen