SaraNextGen.Com

Chapter 5 - Kanini ulakam - Chapter 5 கணினிஉலகம் Term 3 4th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

Detailed Solutions Of Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 23 கணினி உலகம்

வாங்க பேசலாம்

Question 1.
கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப் பேசுக.
Answer:
கணினி நம் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது.

கணினியின் உள்ளீடு , வெளியீடு கருவிகள் உள்ளன. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் எனவும் தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் எனவும் அழைக்கிறோம்.

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது. கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல் பயன்படுகிறது.

இப்போது புலனம், முகநூல் சுட்டுரை ஆகியவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் ஆக்கப் பயன்களுக்கு மட்டும் செயல்படுத்துவோம்.

சிந்திக்கலாமா?

அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்கிறான்.
அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
அழகன் புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுவது தவறான கூற்றாகும். அவன் நண்பன் கணினியிலும் படிக்கலாம் என்று கூறுவது சரியானதாகும்.

புத்தகத்தில் படிக்கலாம், ஆனால் புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்று கூறவியலாது. ஏனெனில் கணினியின் மூலமாகவும் படிக்கலாம்.

கணினி நமக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் நொடியில் தேடித் தந்து விடுகிறது. அதனால் கணினியில் படிப்பதும் எளிதானது என்பது என் கருத்து.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி ……………………………
அ) தொலைக்காட்சி
ஆ) கணினி
இ) கைப்பேசி
ஈ) மடிக்கணினி
Answer:
ஆ) கணினி

Question 2.
இப்போதெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………
அ) இப்போது + எல்லாம்
ஆ) இப்போ + எல்லாம்
இ) இப்போதே + எல்லாம்
ஈ) இப்போ + வெல்லாம்
Answer:
அ) இப்போது + எல்லாம்

Question 3.
நினைவகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை ……………………………
அ) நினை + வகம்
ஆ) நினை + அகம்
இ) நினைவு + வகம்
ஈ) நினைவு + அகம்
Answer:
ஈ) நினைவு + அகம்

Question 4.
மின் + அஞ்சல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………
அ) மின் அஞ்சல்
ஆ) மின்னஞ்சல்
இ) மின் அஞ்சல்
ஈ) மினஞ்சல்
Answer:
ஆ) மின்னஞ்சல்

Question 5.
பதிவேற்றம் – இச்சொல்லின் பொருள் ……………………………
அ) தகவல் ஆராய்தல்
ஆ) தகவல் வரிசைப்படுத்துதல்
இ) தகவல் பதிவு செய்தல்
ஈ) தகவல் பெறுதல்
Answer:
ஈ) தகவல் பெறுதல்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?
Answer:
அடுக்குமாடிக் கட்டங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியiவ சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.

Question 2.
கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.
Answer:
கணினியின் முதன்மைப் பகுதிகள் :

  1. மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)
  2. கட்டுப்பாட்டகம் (Control Unit)
  3. நினைவகம் (Memory)
  4. உள்ளீ டு மற்றும் வெளியீடு (Input and output)

Question 3.
இணையம் என்றால் என்ன?
Answer:
கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது.

Question 4.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது.

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?

Answer:

மொழி விளையாட்டு

கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?

Answer:

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்

Answer:

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா உள்ளது.
2. கணினியைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாப்பேஜ்.
3. CPU என்பதன் தமிழ் விரிவாக்கம் மையச் செயல்பாட்டுப் பகுதி.
4. Keyboard என்பதன் தமிழ்ச் சொல் விசைப்பலகை.
5. இணையம் மூலமாகக் கடிதமும் எழுதலாம்.
6. புலனம், முகநூல் போன்றவை வலைத்தளச் செயலிகள்.
7. இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் மின்னஞ்சல் எனப்படும்.
8. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
9. காட்சித்திரை, கணினி, அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.
10. எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண உதவுவது இணையம்.

விடையளி :

Question 1.
கணினி – குறிப்பு எழுதுக.
Answer:

  • கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ற வெளியீடுகளைத் தரும் ஒரு மின்னணு சாதனம்.
  • கணினியை சார்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தார்.
  • முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி அளவில் மிகப்பெரியது. அதனை எளிதாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாது.
  • ஆனால், இப்போதோ கையடக்க வடிவிலே கூடக் கணினிகள் உருவாக்கப்படுகின்றன.

Question 2.
கணினியின் அமைப்பினை எழுதுக.
Answer:

  • கணினியின் மையச் செயல்பாட்டுப் பகுதி என்பது செய்நிரல் அடிப்படையில் கணிதச்  செயல்பாடுகளை அமைக்கும்.
  • கட்டுப்பாட்டகம் என்பது செய்திகளைத் திரளாகச் சேமித்து வைத்திருக்கும். செய்திகள்/ தகவல்களை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்தான் நினைவகம்.
  • மையச் செயலகம் ஒருங்கிணைந்த உள்ளீடு, வெளியீடு கருவிகளைத் தன்னுள் பெற்றிருக்கும்.

Question 3.
கணினியின் உள்ளீடு, வெளியீடு கருவிகள் பற்றி எழுதுக.
Answer:

  • விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.
  • காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.

Question 4.
தரவு, பதிவேற்றம், பதிவிறக்கம் – விளக்குக.
Answer:

  • கணினிக்குக் கொடுக்கும் தவல்கள் – தரவுகள்.
  • தரவுகள் பதிவு செய்வது – பதிவேற்றம்
  • தகவல் பெறுவது – பதிவிறக்கம்.

Question 5.
மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் பயன்படுகிறது.

Question 6.
வலைத்தளச் செயலிகள் யாவை?
Answer:
வலைத்தளச் செயலிகள் ;

  • புலனம்
  • முகநூல்
  • சுட்டுரை.

Question 7.
வலைத்தளச் செயலிகளில் நம் கருத்துகளை எவ்வாறு பதிவிடலாம்?
Answer:
வலைத்தளச் செயலிகளைச் செயலி உருவாக்கம் சென்று நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உருவாக்கி நம் கருத்துகளைப் பதிவிடலாம் அல்லது பெறலாம்.

Question 8.
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குக் கலைச்சொல் எழுதுக.
Answer:
1. CPU – மையச் செயல்பாட்டுப் பகுதி
2. Control Unit – கட்டுப்பாட்டகம்
3. Memroy – நினைவகம்
4. Input – உள்ளீடு
5. Output – வெளியீடு
6. Keyboard – விசைப்பலகை
7. Mouse – சுட்டி
8. Monitor – காட்சித்திரை
9. Printer – கணினி அச்சுப்பொறி
10. Data – தரவு
11. Download – பதிவிறக்கம்
12. Website – வலைத்தளம்
13. Email ID – மின்ன ஞ்சல்
14. Whatsapp – புலனம்
15. Facebook – முகநூல்
16. Twitter – சுட்டுரை
17. Webapps – வலைதளச்செயலிகள்
18. Play store – செயலி உருவாக்கம்

Also Read : Chapter-6---Malaiyum-etiroliyum-Chapter-6-மைல-ம்எ-ெரா--ம்-Term-3-4th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen