SaraNextGen.Com

Chapter 6 - Malaiyum etiroliyum - Chapter 6 மைல ம்எ ெரா ம் Term 3 4th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated On May 15, 2024
By SaraNextGen

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

Detailed Solutions Of Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 24 மலையும் எதிரொலியும்

வாங்க பேசலாம்

மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பேசுக.
Answer:
நான் விடுமுறையில் என் குடும்பத்தினருடன் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கிறேன். கொடைக்கானலுக்குச் சென்றோம். எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அடர்ந்த செடி கொடிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மலைகளிலிருந்து விழும் அருவி நீர் வெள்ளியைக் காய்ச்சி ஊற்றியதைப் போல உள்ளது. இயற்கை நம் மனதை மிகவும் அமைதியாக வைத்துள்ளது. மலையில் ஏறும் போது வளைந்து வளைந்து செல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சிந்திக்கலாமா?

மேலே உள்ள இரண்டு படங்களிலும் நீங்கள் காண்பது என்ன? இருவரில் யாருடைய செயல் சிறந்தது?
Answer:

  • முதல் காட்சியில் நாயின் வாலைப் பிடித்து இழுக்கிறான். அது தவறானது.
  • இரண்டாவது காட்சி நாயை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறான். இச்செயலே சிறந்தது. பிற உயிர்களிடத்து அன்பு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
தந்தையும் மகனும் எங்குச் சென்று கொண்டிருந்தனர்?
Answer:
தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

Question 2.
சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?
Answer:
“யார் நீ” என்று கேட்டது, பிறகு “உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று கூறியது.

Question 3.
சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருந்தால் மலை என்ன சொல்லி இருக்கும்?
Answer:
சிறுவன் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லிருந்தால் மலையும் “நான் அன்பு கொண்டவன்” என்று சொல்லியிருக்கும்.

Question 4.
இக்கதையின் மூலம் தந்தை மகனுக்குக் கூறிய அறிவுரை யாது?
Answer:

  • “நீ மற்றவர்களிடம் அதிகமான திறமையை எதிர்பார்த்தால் முதலில் உன்னுடைய திறமையை அதிகரித்துக் கொள்”.
  • “நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது”.
  • உன்னுடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று, அது உன்னுடைய எதிரொலிதான் என்று தந்தை மகனுக்கு அறிவுரை கூறினார்.

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

மாணவர்கள் தாங்களாகவே வண்ணம் தீட்டி மகிழ வேண்டும்.

விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

Question 1.
வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்?

Answer:
தட்டு

Question 2.
உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?

Answer:
மலை

Question 3.
நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

Answer:
கடல்

Question 4.
நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?
Answer:

விடை:
கண்ணாடி

Question 5.
தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

Answer:
விமானம்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி

Answer:

அறிந்து கொள்வோம்

உலகின் மிக உயரமான சிகரம். – இமயமலையில் உள்ள எவரெஸ்ட்
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – ஆனைமலையிலுள்ள ஆனைமுடி

செயல் திட்டம்

உனக்குப் பிடித்த செல்லப் பிராணி எது? அதனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்? எழுதி வருக.
Answer:
எனக்குப் பிடித்த செல்லப் பிராணி நாய். நான் அதனிடம் அன்பாக நடந்து கொள்வேன். தினமும் காலையும் மாலையும் அதனை அழைத்துக் கொண்டு காலார நடப்பேன். மூன்று வேலையும் அதற்கான உணவைக் கொடுப்பேன். அதனிடம் பேசிக் கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் கொஞ்ச நேரம் விளையாடுவேன். எங்களில் ஒருவனாக அந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்வேன். கட்டிப்போட மாட்டேன். சுதந்திரமாக வீடு முழுவதும் சுற்றிவரும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி.

எழுவாய், பயனிலை அறிவோமா?

கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிந்து வட்டமிடுக

Answer:

கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளுக்கேற்றவாறு அட்டவணைப்படுத்துக.
1. அவர் சிறந்த மருத்துவர்.
2. என்னை அழைத்தவர் யார்?
3. அருளரசன் நல்ல மாணவன்
4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.
5. முக்கனிகள் யாவை?
6. புலி உறுமியது.

Answer:

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தந்தையும் மகனும் ………………. பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய ………………. எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் ………………. என்றார்.
4. தந்தை மகனிடம் ………………. வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே ………………. ‘விளைவிக்கின்றன.
Answer:
1. தந்தையும் மகனும் மலைப் பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் நீ வெற்றி வீரன் என்றார்.
4. தந்தை மகனிடம் திறமையை வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும், தீமையையும் ‘விளைவிக்கின்றன.

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மகன் “ஆ ஆ ஆ!” என்று ஏன் கத்தினான்?
Answer:
தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மகன் திடீரென்று கீழே விழுந்து அடிபட்டதால், “ஆ ஆ ஆ!” என்று கத்தினான்.

Question 2.
மகன் மலையிடம் பேசியவை யாவை?
Answer:
முதலில் “யார் நீ” என்று கேட்டான்.
இரண்டாவது “உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்று கத்தினான்.
மூன்றாவது “உன்னால் நேரில் வர முடியாதா?” என்று திட்டினான்.

Question 3.
வாழ்க்கை பற்றி அப்பா கூறியது யாது?
Answer:
நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது. நம்முடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று. அது நம்முடைய எதிரொலிதான் என்று கூறினார்.

Also Read : Chapter-7---Nitineri-vilakkam-Chapter-7-நீ-ெந--ளக்கம்-Term-3-4th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen