SaraNextGen.Com

Chapter 2.2 - Etilikkuruvikal - Chapter 2 11th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் - Text Book Back Questions and Answers

குறுவினா

Question 1.
ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
Answer:

  • மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
  • மழை பெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
  • இயற்கைச்சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால், வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘அழகிய பெரியவன்’ – குறிப்பு வரைக.
Answer:

  • அழகிய பெரியவன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன்.
  • அரசுப் பள்ளி ஆசிரியர்; நாவல், சிறுகதை, கவிதை கட்டுரை படைப்பவர்.
  • ‘தகப்பன் கொடி’ புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன, இவர் படைப்புகள்.

Question 3.
‘ஏதிலிக்குருவிகள்’ காட்சிப்படுத்தும் அவலம் யாது?
Answer:

  • இயற்கைச் சூழலே உயிர்களின் இருப்பை முடிவு செய்கிறது.
  • இயற்கைக்கும் மனிதர்க்குமான தொப்புள்கொடி மழைத்துளிகள்.
  • முதல்துளி விழுகையில், உயர்கள் மலர்கின்றன.
  • ‘ஏதிலிக்குருவிகள்’ கவிதை, சூழலியல் மாற்றத்தால் நிகழ்கிற அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது.

சிறுவினா

Question 4.
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
Answer:

  • சிற்றூர்களால் கூரை வேய்ந்த வீடுகள் இருந்த காலத்தில், நீர்வளம் கரைபுரண்டது; மரங்கள் நிறைந் திருந்தன; அவற்றில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன.
  • தூக்கணாங் குருவிகள் கட்டிய கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் அசைந்தன; அவை, தூக்கணாங் குருவிகளின் வீடுகளாகும்.
  • இன்று மண்வளம் குறைந்தது; தாய்மடி சுரக்காததால், அதில் வாழ்ந்த உயிரினங்கள் மறைந்து போயின என்பதை, அழகிய பெரியவன் ஒப்பீடு செய்கிறார்.

கூடுதல் வினா

Question 1.
‘ஏதிலிக்குருவிகள்’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • ஊரில், இன்று குருவிகளையும் கூடுகளையும் பார்க்க இயலவில்லை. முன்பு அடைமழை என்றால் ஆற்றில் நீர் புரளும். கரைகளில் நின்ற நெடுமரங்களில் பறவைகள் குரலெழுப்பும்.
  • நடந்து போகும் வழிகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் ஆடும். சிட்டுக் குருவிகள் மூங்கில் கிளைகளில் அமர்ந்து, சுழித்தோடும் நீருடன் பாடிக்கொண்டிருக்கும்.
  • இன்றோ, மரங்கள் வெட்டுண்டன; வானமோ பொய்த்தது; மண்ணோ மறுகிவிட்டது. குருவிகள் வாழ வழியின்றி அகதிகளாய் எங்கோ போய்விட்டன என்பதே கவிதைச் செய்தியாகும்.

 

இலக்கணக்குறிப்பு

பார்க்க – வினையெச்சம்
மழைக்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
நெடுமரம் – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. பார்க்க – பார் + க் + க் + அ
பார் – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.

2. சுரந்த – சுர + த் (ந்) + த் + அ
சுர – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

3. பொய்த்தது – பொய் + த் + த் + அ + து
பொய் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – சாரியை,
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

4. மறுகியது – மறுகு + இ (ன்) + ய் + து
மறுகு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படுமெய் சந்தி, து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. மழைக்காலம் – மழை + காலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிரம் (பழைக்காலம்)

2. கரையெல்லாம் – கரை + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கரை + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (கரையெல்லாம்)

3. நெடுமரம் – நெடுமை + மரம்
“ஈறுபோதல்” (நெடுமரம்)

4. வழியெல்லாம் – வழி + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (வழி + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்று பது இயல்பே” (வழியெல்லாம்)

5. காலமது – காலம் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலமது

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
இ) பானை டாக்டர் – குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
Answer:
இ) யானை டாக்டர் – குறும் புதினம்

கூடுதல் வினா

Question 2.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்
i) 1 3 4 2
ii) 1 2 4 3
iii) 3 4 1 2
iv) 3 2 1 4
Answer:
iii) 3 4 1 2

Question 3.
அழகிய பெரியவன் இயற்பெயர்……………..
அ) ராசேந்திரன்
ஆ) ராசகோபாலன்
இ) அரவிந்தன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
இ) அரவிந்தன்

Question 4.
அழகிய பெரியவன் ஊர் ……………
அ) யாழ்ப்பாணம் கொக்குவில்
ஆ) ஈரோடு மாவட்ட மேட்டுப் புதூர்
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
ஈ) சென்னிகுளம் கழுகுமலை
Answer:
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு

Question 5.
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………
அ) குறடு
ஆ) நெறிக்கட்டு
இ) வடக்குவீதி
ஈ) தகப்பன் கொடி
Answer:
ஈ) தகப்பன் கொடி

Also Read : Chapter-2.2---Kaviyam-Chapter-2-11th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen