Chapter 1.1 - Enkal tamil - Chapter 1.5 - குற்றியலுகரம், குற்றியலிகரம் - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 1.1 - Enkal tamil - Chapter 1.5 - குற்றியலுகரம், குற்றியலிகரம் - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்
Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்
Question 1.
“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
Question 2.
பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் …………………..
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
Answer:
அ) வழி
Question 2.
‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
Answer:
ஆ) குரல் + ஆகும்
Question 3.
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானலி
Answer:
ஆ) வானொலி
நயம் அறிக
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்று போல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
அருள்நெறி – கொல்லா – எல்லா
அதுவே – கொள்கை – என்றும்
2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
அருள் – கொல்லா – அன்பும்
பொருள் – எல்லா – இன்பம்
3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
தரலாகும் – புகழாது – ஊக்கிவிடும்
குரலாகும் – இகழாது – போக்கிவிடும்
குறு வினா
Question 1.
தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
(ii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
(iii) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.
Question 2.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
Answer:
(i) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
(ii) தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
சிறு வினா
Question 1.
எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
(ii) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
(iii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
(iv) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.
சிந்தனை வினா
Question 1.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பொருத்துக.
1. விரதம் – அ) வழி
2. நெறி – ஆ) நோன்பு
3. குறி – இ) தருகின்ற
4. பொழிகிற – ஈ) குறிக்கோள்
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-இ 2-அ 3-ஈ 4-ஆ
இ) 1-ஆ 2-ஈ 3-ஆ 4-இ
ஈ) 1-ஈ 2- அ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ
Question 2.
நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
Question 3.
காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
Question 4.
நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று
அ) மலைக்கள்ளன்
ஆ) என்கதை
இ) சங்கொலி
ஈ) காந்திபுராணம்
Answer:
ஈ) காந்திபுராணம்
Question 5.
“அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்” என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்
Question 6.
“பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதாரையும் இகழாது” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) பொருள் – போற்றா
ஆ) யாரையம் – தாரையும்
இ) பொருள் – பெற
ஈ) புகழாது – இகழாது
Answer:
ஈ) புகழாது – இகழாது
Question 7.
“கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக” – இவ்வடிகளில் ‘நோன்பு’ என்னும் பொருள் தரும் சொல் எது?
அ) கொல்லா
ஆ) விரதம்
இ) குறி
ஈ) நெறி
Answer:
ஆ) விரதம்
Question 8.
“கத்தியின்றி இரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது” – இவ்வடிகளைப் பாடியவர்
அ) வெ.இராமலிங்கனார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
Answer:
அ) வெ.இராமலிங்கனார்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிகத்தின் முதல் அரசவைக் கவிஞர் …………….
2. உலகமொழிகளில் தொன்மையானது ………………….
3. ‘எங்கள் தமிழ்’ என்னும் தலைப்பில் கவிதை இடம்பெறும் நூல் ……………………
4. மலைக் கள்ளன் , சங்கொலி , என் கதை என்னும் நூல்களை எழுதியவர் …………………..
5. வெ.இராமலிங்கனாரை ……………….. என்றும் அழைப்பர் …………………
6. நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். …………………..
7. எங்கள் தமிழ்மொழி ……………….போன்ற மொழியாகும்
8. விடுபட்ட சீர்களை நிரப்புக.
…………… அறிவைத் தரலாகும்.
அதுவே_ ………….. குரலாகும்
Answer:
1. கவிஞர் வெ.இராமலிங்கனார்.
2. தமிழ்மொழி
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
4. கவிஞர் வெ.இராமலிங்கனார் .
5. நாமக்கல் கவிஞர்
6. தமிழ்மொழி
7. தேன்
8. அருள்நெறி, தமிழன்
குறு வினா
Question 1.
நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கக் காரணம் யாது?
Answer:
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.
Question 2.
நாமக்கல் கவிஞரின் பன்முகத் தன்மையினை எழுதுக.
Answer:
- தமிழறிஞர்
- கவிஞர்
- விடுதலைப் போரட்ட வீரர்
Question 3.
நாமக்கல் கவிஞரின் படைப்புகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
- மலைக்கள்ளன்
- சங்கொலி
- என் கதை
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
சிறு வினா
Question 1.
தமிழின் சிறப்புகள் சிலவற்றை எழுதுக.
Answer:
- உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி.
- மென்மையும் இனிமையும் வளமையும் உடையது.
- வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது.
- காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்கிறது.
Question 2.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் – குறிப்பு வரைக
Answer:
(i) இயற்பெயர் : இராமலிங்கனார்
(ii) சிறப்புப்பெயர்: நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர்.
(iii) சிறப்பு : தமிழறிஞர், கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.
(iv) படைப்புகள் : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி
சொல்லும் பொருளும்
ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
குறி – குறிக்கோள்
பொருள் – செல்வம், நற்செயல்
அறம் – நற்செயல்
விரதம் – நோன்பு
பொழிகிற – தருகின்ற
அருள் – இரக்கம்
அச்சம் – பயம்
போக்கி – நீக்கி
