WELCOME TO SaraNextGen.Com

Chapter 2.2 - Appatiye nirkattum anta maram - Chapter 2.6 - திருக்குறள் - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 2.2 - Appatiye nirkattum anta maram - Chapter 2.6 - திருக்குறள் - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
பலாமரம்

  1. நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம்
  2. முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம்
  3. பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ?
  4. பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்
  5. கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்

Question 2.
உங்கள் பகுதியிலுள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது …………………
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

Question 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………….
அ) ஒட்டிய பழங்கள் .
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

Question 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெயர் + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர் + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

Question 4.
‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………….
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

Question 5.
‘நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

குறுவினா

Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
Answer:
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.

Question 2.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
Answer:

  1. காக்கை
  2. குருவி
  3. மைனா
  4. பெயரறியாப் பவைகள்
  5. அணில்
  6. காற்று

சிறுவினா

Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
1. ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

2. அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

4. காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

5. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

6. இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

7. அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.

சிந்தனை வினா

Question 1.
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
Answer:
1. பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

2. குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.

3. அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர்.
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 2.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

Question 3.
‘பெருவாழ்வு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..
அ) பெரு + வாழ்வு
ஆ) பெ + ருவாழ்வு
இ) பெருமை + வாழ்வு
ஈ) பேர் + வாழ்வு
Answer:
இ) பெருமை + வாழ்வு

Question 4.
ஊரின் வடகோடியில் இருந்த மரம் ………………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 5.
தாத்தா நட்டு வைத்த மரம்
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 6.
பொருத்துக.
1. பரவசம் – அ) துக்கம் விசாரித்ததல்
2. துஷ்டி கேட்டல் – ஆ) விரவி
3. பரவி – இ) எல்லை
4. கோடி – ஈ) மகிழ்ச்சிப்பெருக்கு

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2-அ 3-ஆ 4- இ

Question 7.
‘செங்காய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது …………………….
அ) செம்மை + காய்
ஆ) செம் + காய்
இ) செங் + காய்
ஈ) செ + காய்
Answer:
அ) செம்மை + காய்

Question 8.
இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி …………………
அ) வௌவால் கூட்டம்
ஆ) காக்கைக் கூட்டம்
இ) குருவிக் கூட்டம்
ஈ) மைனாக் கூட்டம்
Answer:
அ) வௌவால் கூட்டம்

Question 9.
நாவற்பழங்களை உதிர்த்துவிடுவனவற்றுள் பறவைகள் அல்லாத ஒன்று ……………….
அ) காக்கை
ஆ) குருவி
இ) அணில்
ஈ) மைனா
Answer:
இ) அணில்

Question 10.
பெருவாழ்வு வாழ்ந்த மரம் ……………
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 11.
நேற்று இரவுப் பேய்க்காற்றில் வேறோடு சாய்ந்தது …………….
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Ans;
இ) நாவல் மரம்

Question 12.
குன்றுகளின் நடுவே மாமலை போன்றது ……………..
அ) புளிய மரம்
ஆ) மாமரம்
இ) நாவல் மரம்
ஈ) அரசமரம்
Answer:
இ) நாவல் மரம்

Question 13.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்
அ) ராஜமார்த்தாண்டன்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
அ) ராஜமார்த்தாண்டன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே ……………………..
2. …………….. பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன.
3. ………………. – பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
4. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் …………………… பொறுக்குகின்றனர்
5. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – என்ற நூலை இயற்றியவர் ………………….
6. குன்றுகளின் நடுவே மாமலை போல நின்றது. …………………

Answer:
1. மரங்கள்
2. மரங்கள்
3. நாவல்
4. நாவல்பழம்
5. ராஜமார்த்தாண்டன்
6. மாமரம்

குறு வினா

Question 1.
நாவல் மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.

Question 2.
சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கக் காரணம் யாது?
Answer:
நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

Question 3.
எப்போது நாவில் நீர் ஊறும்?
Answer:
பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.

Question 4.
சிறுவர் கூட்டம் அலைமோதக் காரணம் யாது?
Answer:
காக்கை, குருவி,மைனா , பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.

Question 5.
தங்கைகள் யாருக்காக நாவல் பழம் பொறுக்குகின்றனர்?
Answer:
தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.

Question 6.
இரவு நேரத்தில் நாவல்மரத்தை நோக்கிப் படைஎடுத்தது எது? ஏன்?
Answer:
இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.

Question 7.
ஊர்மக்கள் எதனைப் பார்க்கச் சென்றனர்?
Answer:
பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.

Question 8.
கவிஞர் மனதில் என்றும் நிற்பது எது?
Answer:
குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் என்றும் நிற்கிறது.

சிறு வினா:

Question 1.
கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : இராசமார்த்தாண்டன்
திறன்கள் : இதழாளர், கவிதைத் திறனாய்வாளர்.
பரிசு : ராஜமார்த்தாண்டன் கவிதைகள் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றவர்.
படைப்புகள் : ராஜமார்த்தாண்டன் கவிதைகள், அப்படியே நிற்கட்டும் அந்த மரம், சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்துள்ளார்.

சொல்லும் பொருளும்

1. பரவசம் – மகிழ்ச்சிப்பெருக்கு
2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்ததல்
3. தாண்டி – கடந்து
4. பழந்தின்னி – பழம் உண்ணும்
5. பரவி – விரவி
6. வடகோடி – வட எல்லை