WELCOME TO SaraNextGen.Com

Chapter 3.2 - Pancai valam - Chapter 3.5 - வழக்கு - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 3.2 - Pancai valam - Chapter 3.5 - வழக்கு - Term 1 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 1.
உங்கள் வீட்டிலுள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
முடுகு
எட்டுத் திசையும் பதினாறு கோணமும்
கட்டியே காத்தவன் கட்டபொம்மன்
ஆத்துரு வாழும் அண்ணா சாய்பு
அண்ணனும் தம்பியும் வல்லவனாம்
குளத்தூர் வாழும் சுப்பையா
கொள்ளை யடிப்பதில் வல்லவனாம்
கிழக்கே எல்லையாம் கீழக்கரை
மேக்க எல்லையாம் சூலக்கரை
ஆயிரம் கண்ணுள்ள மாரியம்மா
ஆதரிக்க வேணும் இந்த நேரம்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஊர்வலத்தின் முன்னால் ………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியில் ……………… நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்

Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு

ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடிவீடு
Answer:
ஈ) மாடிவீடு

Question 4.
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டும் + கதவுகள்

Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை

Question 6.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) வாசல் அவங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
ஆ) வாசலங்காரம்

பொருத்துக.

பொக்கிஷம் – அழகு
சாஸ்தி – செல்வம்
விஸ்தாரம் – மிகுதி
சிங்காரம் – பெரும்பரப்ப
Answer:
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி

விஸ்தாரம் – பெரும்பரப்பு
சிங்காரம் – அழகு

குறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.
  2. அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

சிறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  2. வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
  3. வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

(ii) பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

(iii) மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?
Answer:

1. மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
2. அஞ்சா நெஞ்சினர்.
3. ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர் …………………..
அ) நா.வானமாமலை
ஆ) சு.சண்முகசுந்தரம்
இ) அன்னகாமு
ஈ) சண்முக சுந்தரம்
Answer:
அ) நா.வானமாமலை

Question 2.
குறையில்லாத வீரன் ………………
அ) கட்டபொம்மன்
ஆ) ஆங்கிலேயன்
இ) மருது
ஈ) நா.வானமாமலை
Answer:
அ) கட்டபொம்மன்

Question 3.
கட்டபொம்மனின் நாடு ……………..
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Question 4.
பாஞ்சாலங்குறிச்சியில் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும் இடம்
அ) கடைகள்

ஆ) வீதிகள்
இ) வீடுகள்
ஈ) சோலைகள்
Answer:
இ) வீடுகள்

Question 5.
நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிப்பவை ……………..
அ) குயில், மயில்
ஆ) யானை, பசு
இ) பசு, புலி
ஈ) முயல், நாய்
Answer:
இ) பசு, புலி

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியின் தண்ணீருக்குக் கூறப்பட்ட உவமை …………………
அ) பால்
ஆ) மணி
இ) அமுதம்
ஈ) சந்தனம்
Answer:
அ) பால்

Question 7.
கறந்து வைத்த பாலைக் குடிக்காதது ……………
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
அ) காகம்

Question 8.
வீரம் மிகுந்த நாடு ………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை

Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Question 9.
பாஞ்சாலங்குறிச்சியில் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடியது ……………….
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
இ) மயில்

Question 10.
அன்பு வளரும் நாடு …………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Question 11.
பொருத்துக.
1. வாரணம் – அ) பாக்கு
2. பரி – ஆ) அழகு
3. சிங்காரம் – இ) குதிரை
4. கமுகு – ஈ) யானை

அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ
ஆ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ
இ) 1-ஆ 2-இ 3-அ 4-ஈ
ஈ) 1-அ 2- ஈ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ‘பாஞ்சை’ என்ற அழைக்கப்படும் நாடு ……………….
2. தமிழ்நாட்டில் பல வகையான ………………….. இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.
3. கதைப்பாடல் என்பது ……………… தழுவிய பாடல்.
4. ‘பரி வளரும் சாலை’ – இதில் ‘பரி’ என்பதன் பொருள் ……………..
5. ‘கமுகு’ என்பதன் பொருள் ……………..

6. ……………… யில் மாங்குயில் கூப்பிடுமாம்.
7. முயலும் ………………. விரட்டும்.
8. வரந்தருபவள். ……………….
Answer:
1. பாஞ்சாலங்குறிச்சி
2. நாட்டுப்புற
3. கதை
4. குதிரை
5. பாக்கு
6. சோலை
7. நாயை
8. சக்கமாதேவி

குறு வினா

Question 1.
குயில்கள் எங்கு கூவும் ? மயில்கள் எப்படி விளையாடும்?
Answer:
குயில்கள் சோலைகளில் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்ப்பன எது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

Question 3.
கரந்த பாலைக் காகம் குடிக்காததற்குக் காரணம் யாது?
Answer:
மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

Question 4.
பசு மற்றும் புலியின் செயல் யாது?
Answer:
பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

Question 5.
எவ்வெற்றுக் கெல்லாம் பாஞ்சாலங்குறிச்சியில் இடங்கள் இருந்தன?
Answer:

  1. யானைக் கூடம்
  2. குதிரைக் கொட்டில்
  3. தோரணங்கள் கட்டப்பட்ட மேடை
  4. தாயம் ஆடுவதற்கான இடம்.

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரம் நிறைந்த விலங்குகள் எவை?
Answer:

  1. முயல்
  2. பசு

Question 7.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. யானை
2. குதிரை
3. குயில்கள்
4. மயில்கள்
5. முயல்
6. வேட்டை நாய்
7. பசு
8. புலி
9. காகம்.

Question 8.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
Answer:

  1. யானை
  2. குதிரை
  3. முயல்
  4. வேட்டை நாய்
  5. பசு
  6. புலி

Question 9.
வீரபாண்டியக ட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பறவைகள் யாவை?
Answer:

  1. குயில்கள்
  2. மயில்கள்
  3. காகம்

சிறு வினா:

Question 1.
“சில அதிசயங்கள் சொல்கின்றேன் கேளுமையா” – பாஞ்சாலங்குறிச்சி அதிசயங்கள் யாவை?
Answer:
1. வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

2. பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

3. மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

சொல்லும் பொருளும்

சூரன் – வீரன்
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
விஸ்தாரம் – பெரும்பரப்பு
வாரணம் – யானை
பரி – குதிரை
சிங்காரம் – அழகு
கமுகு – பாக்கு