WELCOME TO SaraNextGen.Com

Chapter 4.2 - Kavinmiku kappal - Chapter 4.5 - இலக்கியவகைச் சொற்கள் - Term 2 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 4.2 - Kavinmiku kappal - Chapter 4.5 - இலக்கியவகைச் சொற்கள் - Term 2 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.2 கவின்மிகு கப்பல்

Question 1.
கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
முத்து, உலோகத் தாதுக்கள், எண்ணெய், இயற்கை வாயு, வளிம நீரேறிகள், பவளம், சுண்ணாம்பு கற்கள், சிப்பிகள், சங்குகள், உப்பு.

Question 2.
கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
கடல் – எஸ்.கண்ண ன்
அவன் ஒரு இளைஞன். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கள்ளச்சாரயம் குடித்து அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா மற்றும் திருமண வயதில் தங்கை அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேலையில் குடும்பத்தை நடத்தவே பணம் போதவில்லை. தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையே அவனுக்குப் பெரிதாக இருந்தது.

மனதின் நிம்மதிக்காக அனைவரும் கடற்கரை நோக்கிச் செல்வர். அவனும் அப்படியும் சில நாட்கள் சென்றான். கை நிறைய எப்போது சம்பாதிப்பது? எப்போது தங்கைக்குத் திருமணம் செய்வது? இவை அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தற்கொலை செய்யலாம் என்ற எண்ணத்துடன் கரையோரம் அமர்ந்து இருந்தான். அது இரவு நேரம் கடற்கரையில் யாருமில்லை.

கடல் நீர் அவன் வேதனை போல் உப்பாகவே இருந்தது. தூரத்தில் யாரோ கடலை நோக்கி ஒடுவது போல் இருந்தது. இவன் அவளைக் காப்பாற்றினான். அவளது அப்பா, அம்மா ஓடோடி வந்தனர். திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவன் இறந்ததால் அவள் இத்தகைய முடிவுக்கு வந்ததை அறிந்தான்.

அந்தப் பெண்ணின் அப்பா, பெரிய கார் நிறுவனத்தின் முதலாளி. இவன் நிலையை அறிந்து, அவனுக்கு வேலையும் கொடுத்து, அவனது தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தார். அவனது நன்னடத்தையால் நிறுவனத்தின் எம்.டி. ஆக உயர்ந்தான். முதலாளி அவரது பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றார். மீண்டும் தனக்கு வாழ்வு தந்த கடற்கரைக்குச் செல்கின்றான். அலை ஆனந்தத்துடன் ஆர்ப்பரித்து, அவன் மீது விழுந்தது. இன்பத்தில் கடல் நீர் இனிமையானது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் …………………
அ) நிலம்
ஆ) நீர்

இ) காற்று
ஈ) நெருப்பு
Answer:
இ) காற்று

Question 2.
மக்கள் ……………. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில்
ஆ) காற்றில்
இ) கழனியில்
ஈ) வங்கத்தில்
Answer:
ஈ) வங்கத்தில்

Question 3.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
Answer:
இ) கடல்

Question 4.
‘பெருங்கடல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
Answer:
ஆ) பெருமை + கடல்

Question 5.
இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.
அ) இன்று ஆகி
ஆ) இன்றி ஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றாஆகி
Answer:
இ) இன்றாகி

Question 6.
எதுகை இடம்பெறாத இணை ……………..
அ) இரவு – இயற்கை
ஆ) வங்கம்-சங்கம்
இ) உலகு -புலவு
ஈ) அசைவு – இசைவு
Answer:
அ) இரவு – இயற்கை

பொருத்துக

1. வங்கம் – பகல்
2. நீகான் – கப்பல்
3. எல் – கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்
Answer:
1. வங்கம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

குறுவினா

Question 1.
நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?
Answer:
நாவாயின் தோற்றம் உலகம் இடம்பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு கூறுகிறது.

Question 2.
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
Answer:
இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்குத் துணை செய்கின்றது..

சிறுவினா

Question 1.
கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?
Answer:

  1. உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.
  2. அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  3. இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
  1. உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
    – என்று கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

சிந்தனை வினா

Question 1.
தரைவழிப்பயணம் , கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
Answer:
தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நான் விரும்புவது : கடல்வழிப் பயணம்.

காரணம் :
கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல்..
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஈ) அகநானூறு

Question 2.
கலித்தொகையில் மருதத்திணைப் பாடல்களைப் பாடிய புலவர்
அ) மருதன் இளநாகனார்
ஆ) கபிலர்
இ) பேயனார்
ஈ) நல்லந்துவனார்
Answer:
அ) மருதன் இளநாகனார்

Question 3.
கவின் மிகு கப்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல் இடம் பெறும் நூல்
அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஈ) அகநானூறு

Question 4.
‘எல்’ என்ற சொல்லின் பொருள்
அ) அழகு
ஆ) பகல்
இ) பிளக்க
ஈ) கரை
Answer:
ஆ) பகல்

Question 5.
பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்வது…
அ) நாவாய்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) காற்று
ஈ) நீகான்
Answer:
அ) நாவாய்

Question 6.
கலங்கரை விளக்கம் என்னும் பொருள் தரும் சொல்…
அ) மாட ஒள்ளெரி
ஆ) நீகான்
இ) எல்
ஈ) கோடு உயர்
Answer:
அ) மாட ஒள்ளெரி

பொருத்துக

1. உரு – பிளக்க
2. போழ – அழகு
3. வங்கூழ் – கரை உயர்ந்த
4. கோடு உயர் – காற்று.
Answer:
1. உரு – அழகு
2. போழ – பிளக்க

3. வங்கூழ் – காற்று
4. கோடு உயர் – கரை உயர்ந்த

குறு வினா

Question 1.
புலால் நாற்றமுடையது எது?
Answer:
அலை வீசும் பெரிய கடல் நீர் புலால் நாற்றமுடையது.

Question 2.
உள்ளம் உவகையில் துள்ளும் எப்போது?
Answer:
அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காண உள்ளம் உவகையில் துள்ளும்.

Question 3.
கப்பல் என்பதற்குப் பாடலில் இடம் பெறும் வேறு சொல் எது?
Answer:
கப்பல் என்பதற்குப் பாடலில் இடம் பெறும் வேறு சொல் : வங்கம்

Question 4.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:

 

  1. அகநானூறு எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.
  2. புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.
  3. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் இதுவே.

Question 5.
மருதன் இளநாகனார் குறிப்பு வரைக.
Answer:

  1. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  2. லித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களைப்பாடியவர்.
  3. மருதத்திணைபாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

சிறு வினா:

Question 1.
எட்டுத்தொகை நூல்கள் யாவை?
Answer:

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. பரிபாடல்
  4. அகநானூறு
  5. ஐங்குறுநூறு
  6. புறநானூறு
  7. பதிற்றுப்பத்து
  8. கலித்தொகை

மருதன் இளநாகனார்

  1. சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  2. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களைப்பாடியவர்.
  3. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

சொல்லும் பொருளும்

1. உரு – அழகு
2. வங்கூழ் – காற்று
3. வங்கம் – கப்பல்
4. கோடு உயர் – கரை உயர்ந்த
5. போழ – பிளக்க
6. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
7. எல் – பகல்
8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்