Chapter 6.2 - Kiraippattiyum kutiraiyum - Chapter 6.6 - திருக்குறள் - Term 2 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 6.2 - Kiraippattiyum kutiraiyum - Chapter 6.6 - திருக்குறள் - Term 2 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்
Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்
Question 1.
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
(எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.
Answer:
ஆறு – எண் , நதி
அன்னம் – சோறு, பறவை
மதி – அறிவு, நிலவு
நகை – புன்னகை, அணிகலன்
மெய் – உடல், உண்மை
திங்கள் – மாதம், நிலவு
மாடு – விலங்கு, செல்வம்
தை – மாதம், தைத்தல்
பார் – உலகம், பார்த்ல்
திரை – கடல் அலை, திரைச்சீலை
படி – படித்தல், படிக்கட்டு
இசை – புகழ், சங்கீதம்
வேங்கை – மரம், விலங்கு
கிளை – மரக்கிளை, உறவு
மா – மாமரம், பெரிய
மறை – மறைத்தல், வேதம்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் ‘பரி’ என்பதன் பொருள் …………………
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
Answer:
ஆ) குதிரை
Question 2.
பொருந்தாத ஓசை உடைய சொல் ………………
அ) பாய்கையால்
ஆ) மேன்மையால்
இ) திரும்புகையில்
ஈ) அடிக்கையால்
Answer:
இ) திரும்புகையில்
Question 3.
‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) வண் + கீரை
ஆ) வண்ண ம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
Answer:
ஈ) வண்மை + கீரை
Question 4.
கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கட்டியிடித்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
Answer:
ஆ) கட்டியடித்தல்
சிறுவினா
Question 1.
கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
Answer:

– இத்தகைய காரணங்களால் கீரைப்பாத்தியும் குதிரையும் ஒத்திருக்கின்றன.
சிந்தனை வினா
Question 1.
நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
Answer:
நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
காளமேகப்புலவரின் இயற்பெயர்
அ) வரதன்
ஆ) சுப்புரத்தினம்
இ) எத்திராசுலு
ஈ) சுப்ரமணியம்
Answer:
அ) வரதன்
Question 2.
தடுத்தல் என்னும் பொருள் தரும் சொல் ……………..
அ) வண்கீரை
ஆ) பரி
இ) மறித்தல்
ஈ) முட்டப்போய்
Answer:
இ) மறித்தல்
குறுவினா
Question 1.
காளமேகப்புலவர் – பெயர்க்காரணம் யாது?
Answer:
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
Question 2.
காளமேகப்புலவர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
- திருவானைக்கா உலா
- சரசுவதி மாலை
- பரபிரம்ம விளக்கம்
- சித்திர மடல்
Question 3.
காளமேகப் புலவர் கூறும் குதிரையில் இயல்புகள் யாவை?
Answer:
- வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
- கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.
- எதிரிகளை மறித்துத் தாக்கும்.
- போக வேண்டிய இடம் முழுதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
Question 4.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
Answer:
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடுதல் இரட்டுற மொழிதல் ஆகும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.
சிறு வினா:
Question 1.
காளமேகப்புலவர் குறிப்பு வரைக.
Answer:
- காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
- மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
- திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன.
5. காளமேகப்புலவர்
காளமேகப்புலவரின் இயற்பெயர்வரதன்.மேகம் மழைபொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நுலில் இடம் பெற்றுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
சொல்லும் பொருளும்
1. வண்கீரை – வளமான கீரை
2. பரி – குதிரை
3. முட்டப்போய் – முழுதாகச் சென்று
4. கால் – வாய்க்கால், குதிரையின் கால்.
5. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப்பாத்தி கட்டுதல்). எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்.
