WELCOME TO SaraNextGen.Com

Chapter 7.2 - Vayalum valvum - Chapter 7.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 7.2 - Vayalum valvum - Chapter 7.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Question 1.
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
Answer:
ஏர், மண்வெட்டி, உழவு இயந்திரம், விதைக்கலப்பை, களைவெட்டும் இயந்திரம், நீர் பாசன இயந்திரம், ஊசலாடும் கூடை, வேளாண் வானூர்தி, தாள்க்கத்தி, கதிரடி இயந்திரம், களம், படல், உமி நீக்கி, இணை அறுவடை இயந்திரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உழவர் சேற்று வயலில் ……………… நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
Answer:
ஈ) நாற்று

Question 2.
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
Answer:
அ) அறுவடை

Question 3.
‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
Answer:
ஈ) தேர்ந்து + எடுத்து

Question 4.
‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல ……………….
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer:
ஆ) ஓடையெல்லாம்

பொருத்துக.

1. நாற்று – பறித்தல்
2. நீர் – அறுத்தல்
3. கதிர் – நடுதல்
4. களை – பாய்ச்சுதல்
Answer:
1. நாற்று – நடுதல்
2. நீர் – பாய்ச்சுதல்
3. கதிர் – அறுத்தல்
4. களை – பறித்தல்

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை,எதுகைச் சொற்களை எழுதுக.

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.

(எ.கா.) போயி – போய்
பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள்
வளருது – வளர்கிறது
இறங்குறாங்க – இறங்குகிறார்கள்
வாரான் – வரமாட்டான்

குறுவினா

Question 1.
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.

Question 2.
நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
Answer:
கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.

சிறுவினா

Question 1.
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

சிந்தனை வினா

Question 1.
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.

கூடுதல் வினா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே ……………. எனப்படுகிறது.
2. நாட்டுப்புறப்பாடல்களை ………………. என்றும் வழங்குவர்.
3. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை ………………….. என்னும் நூலில் கி.வா. ஜெகந்நாதன் தொகுத்துள்ளார்.
Answer:
1. நாட்டுப்புறப்பாடல்
2. வாய்மொழி இலக்கியம்
3. மலை அருவி

சிறுவினா

Question 1.
போரடித்தல் என்றால் என்ன?
Answer:
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்வர். நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

சொல்லும் பொருளும்

1. குழி – நில அளவைப்பெயர்
2. சீலை – புடலை
3. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
4. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
5. மணி – முற்றிய நெல்
6. கழலுதல் – உதிர்தல்
7. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்