Chapter 8.2 - Aram ennum katir - Chapter 8.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 8.2 - Aram ennum katir - Chapter 8.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்
Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்
Question 1.
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.
Answer:
வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.
Question 2.
உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
Answer:
ஒரு முறை நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். என் நண்பர்கள், அப்பா, ஆசிரியர் எனப் பலரும் என்னைத் திட்டினார்கள். ஆனால் என் அன்னை மட்டும், தோல்வியே வெற்றியின் முதல் படி. இப்போது நீ பெற்றிருப்பது தோல்வியன்று, வெற்றியின் முதல் படி கவலைப்படாதே என்றார். அவ்வினிமைச் சொல் என்னை ஊக்கப்படுத்தியது.
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
காந்தியடிகள் எப்போதும் ……………….. ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
Answer:
ஈ) வாய்மையை
Question 2.
‘இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது …………….
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
Answer:
இ) இனிமை + சொல்
Question 3.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
Answer:
இ) அறக்கதிர்
Question 4.
‘இளமை ‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………………….
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
Answer:
அ) முதுமை
பொருத்துக.
1. விளைநிலம் – உண்மை
2. விதை – இன்சொல்
3. களை – ஈகை
4. உரம் – வன்சொல்
Answer:
1. விளைநிலம் – இன்சொல்
2. விதை – ஈகை
3. களை – வன்சொல்
4. உரம் – உண்மை
குறுவினா
Question 1.
அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
Answer:
அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.
Question 2.
நீக்கவேண்டிய களை என்று அறநெறிச் சாரம் எதனைக் குறிப்பிடுகின்றது?
Answer:
நீக்கவேண்டிய களை என்று வன்சொல்லை அறநெறிச் சாரம் குறிப்பிடுகின்றது.
சிறுவினா
Question 1.
இளம்வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
Answer:
- இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.
- அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும்.
- வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.
- உண்மைபேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
- அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
- அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.
– இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் – கூறுகின்றார்.
சிந்தனை வினா
Question 1.
இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியன இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகளாகக் கருதுகின்றேன்.
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
முனைப்பாடியாரின் காலம் ……………
அ) கி.பி.5
ஆ) கி.பி.13
இ) கி.பி.10
ஈ) கி.பி.12
Answer:
ஆ) கி.பி.13
Question 2.
அறநெறிச் சாரம் ……………….. பாடல்களைக் கொண்டது.
அ) 225
ஆ) 223
இ) 252
ஈ) 525
Answer:
அ) 225
Question 3.
இளம் வயதிலேயே விதைக்க வேண்டிய பண்பு ………………..
அ) இனியசொல்
ஆ) ஈகை
இ) வன்சொல்
ஈ) உண்மைபேசுதல்
Answer:
ஆ) ஈகை
Question 4.
இளமையில் பாய்ச்ச வேண்டிய நீர் ………………
அ) அன்பு
ஆ) ஈகை
இ) வன்சொல்
ஈ) உண்மை பேசுதல்
Answer:
அ) அன்பு
Question 5.
வித்து என்பதன் பொருள் ……………….
அ) களை
ஆ) பெற
இ) நிலம்
ஈ) விதை
Answer:
ஈ) விதை
குறுவினா
Question 1.
முனைப்பாடியார் – குறிப்பு வரைக.
Answer:
- முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
- காலம் : கி.பி13 ஆம் நூற்றாண்டு.
- படைப்பு : அறநெறிச்சாரம்
Question 2.
அறநெறிச்சாரம் – குறிப்பு வரைக.
Answer:
- முனைப்பாடியார் இயற்றிய நூல் : அறநெறிச்சாரம்
- 225 பாடல்களைக் கொண்டது.
- அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப்பெயர்பெற்றது.
Question 3.
எதனை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்?
Answer:
இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்.
முனைப்பாடியார்:
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
காலம் : கி.பி13 ஆம் நூற்றாண்டு.
படைப்பு : அறநெறிச்சாரம்
சொல்லும் பொருளும்
1. வித்து – விதை
2. ஈன – பெற
3. நிலன் – நிலம்
4. களை – வேண்டாத செடி
5. பைங்கூழ் – பசுமையான பயிர்
6. வன்சொல் – கடுஞ்சொல்
