Chapter 8.6 - Tirukkural - Chapter 8.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 8.6 - Tirukkural - Chapter 8.5 - அணி இலக்கணம் - Term 3 - 7th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்
Detailed Solutions Of Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்
சரியான விடையைத் தேர்க.
Question 1.
…………………… ஒரு நாட்டின் அரணன்று
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
Answer:
ஆ) வயல்
Question 2.
மக்கள் அனைவரும் ……………. ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
Answer:
அ) பிறப்பால்
Question 3.
‘நாடென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) நான் + என்ப
ஆ) நா + டென்பது
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டேன்ப
Answer:
இ) நாடு + என்ப
Question 4.
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல …………..
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
Answer:
ஈ) கண்ணில்லது
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
Answer:
2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
குறு வினா
Question 1.
ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
Answer:
பொருள், கருவி, காலம், செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தும் ஆராய்ந்து அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
Question 2.
ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
Answer:
- தெளிந்த நீர்
- நிலம்
- மலை
- நிழல் உடைய காடு
– ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரண்கள் ஆகும்.
Question 3.
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
Answer:
மிக்க பசி, ஓயாத நோயும், அழிவு செய்யும் பகை சேராமல் நல்லவகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு.
படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக.


கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
Question 1.
ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை
அ) யானை
ஆ) புலி
இ) மான்
ஈ) கொக்கு
Answer:
அ) யானை
Question 2.
பிணி என்னும் சொல்லின் பொருள் ……………..
அ) உலகம்
ஆ) நோய்
இ) செயல்
ஈ) காலம்
Answer:
ஆ) நோய்
Question 3.
பிறப்பொக்கும் ………………. உயிர்க்கும்.
அ) எல்லா
ஆ) அனைத்து
இ) மக்கள்
ஈ) இயல்பு
Answer:
அ) எல்லா
குறு வினா:
Question 1.
செயலை எப்படிச் செய்ய வேண்டும்?
Answer:
ஒரு யானை கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அதுபோல ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலால் மற்றொரு செயலைச் செய்து முடிக்க வேண்டும்.
Question 2.
கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுபவர் யார்?
Answer:
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்பவரே கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுபவர் ஆவர்.
Question 3.
எவை சிறப்பியல்புகளால் ஒத்திருப்பதில்லை?
Answer:
பிறப்பால் மக்கள் அனைவரும் சமம், ஆனால் அவரவர் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் இவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
