Chapter 1.4 - Valarum celvam - Chapter 1.5 - தொடர் இலக்கணம் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 1.4 - Valarum celvam - Chapter 1.5 - தொடர் இலக்கணம் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்
Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.4 வளரும் செல்வம்
Question 1.
நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்து எழுதுக.
Answer:
Question 2.
உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம்செய்க.
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : ………………………………..
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : ………………………………..
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான்.
அருண் : ………………………………..
நளன் : மீண்டும் பார்க்கலாம்.
Answer:
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : வணக்கம் நண்பா .
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : நான் நந்தனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான். அருண் : மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம்.
நளன் : மீண்டும் பார்க்கலாம்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை
ஆ) தாழிசை, மானு, பிறவினை, வங்கம்
இ) பிறவினை, தாழிசை, மானு, வங்கம்
ஈ) மானு, பிறவினை, வங்கம், தாழிசை
Answer:
அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை
குறுவினா
Question 1.
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.
i) Moniter – திரை
ii) Mouse – நகர்த்தி (அல்லது) சுட்டி
iii) Keyboard – விசைப்பலகை
iv) CD – குறுந்தட்டு
v) Download – பதிவிறக்கம்
vi) File – கோப்பு
சிறுவினா
Question 1.
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
Answer:
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொற்கள் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளன.
Question 2.
வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
கூடுதல் வினாக்கள்
குறுவினா
Question 1.
கடற்கலன்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
நாவாய், வங்கம், தோணி, கலம்.
சிறுவினா
Question 1.
தமிழில் கணினி தொடர்பான சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
- சாப்ட்வேர் – மென்பொருள்
- கர்சர் – ஏவி அல்லது சுட்டி
- க்ராப் – செதுக்கி
- போல்டர் – உறை