Chapter 2.5 - Tannir - Chapter 2.6 - துணைவினைகள் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 2.5 - Tannir - Chapter 2.6 - துணைவினைகள் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.5 தண்ணீர்
Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.5 தண்ணீர்
Question 1.
உலகில் நீர் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கற்பனை செய்து உங்கள் கருத்துகளை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
கற்பனைக் கதை
முன்னுரை :
‘நீர் இன்று அமையாது உலகு’ என்று அறுதியிட்டுக் கூறினார் திருவள்ளுவர். நம்முன்னோரின் வாழ்க்கைக் களஞ்சியமாம் இலக்கியங்களும் இதையே வலியுறுத்தி வந்தன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நீர் இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இங்கு சிந்திக்கலாம்.
உலகிலும் உடலிலும் மூன்று பகுதிநீர்உள்ளது. ஆனால் வாழும் மக்களுக்குப் போதியளவு நீர் கிடைக்காமல் போராடும் நிலையுள்ளது. மழையே உணவாகும் உணவுப்பொருட்களை விளைவித்துத் தருவதற்கும் பயன்படுகிறது என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஒரு கிலோ அரிசி பெற 2700 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகள் பயன்பாடுகள் பெருகப் பெருக வானம் வறண்டு கொண்டே இருக்கிறது. பருவ மழை பெய்யாமல் பொய்த்துப் போகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலத்தடி நீர் வற்றிக் கொண்டு இருக்கிறது.
தண்ணீர் விற்பனைக்கே :
“தாகத்திற்குத் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை வந்தபோதே தண்ணீர் மக்களின் தேவைக்கல்ல” என்ற நிலை வந்துவிட்டது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய பிற மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. நாடுகளை நதிகள் இணைக்கின்றன. ஆனால் தண்ணீரால் மாநிலங்களை இணைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
தண்ணீர்ப் போர் :
உலகின் பெரும்பாலான மோதல்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் நிகழ்கின்றன. “இனி அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்” என்றாகிவிட்டது. இயற்கையின் பாதகமான சூழ்நிலை மட்டும் இதற்குக் காரணமல்ல. நீர் மேலாண்மையில் நாம் செய்துள்ள பெருந்தவறுகளே இன்றைய நீர் நெருக்கடிக்குக் காரணம் என்று ஐ.நா வின் வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஆழ்குழாய்க் கிணறுகளின் சாதனை நிலத்தடி நீர் ஆதாரங்களை அழித்துவிட்டது.
நிறைவுரை:
நீர் மேலாண்மையில் நீ புதிய முன் முயற்சிகளின் வாயிலாகவே நீர் நெருக்கடிக்குத் தீர்வுகளைக் கண்டறிய முடியும். நீர் ஆதாரங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். இது பொது நியதி.
” கடைசி மரம்
வெட்டப்படும் போதும்
கடைசிச் சொட்டு தண்ணீர்
காலியாகும் போது தான்
தெரியும் இந்த மனித சமூகத்திற்குப்
பணத்தைத் திங்கமுடியாது என்று”
Question 2.
பீங் …பீங்…. என்ற சத்தத்துடன் தண்ணீ ர் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அம்மா குடங்களுடன் ஓடிச்சென்று வரிசையில் நின்றாள். அப்போது கருமேகங்கள் திரண்டன… கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
Answer:
தண்ணீர் வாகனம் தூசியைக் கிளப்பிக் கொண்டு வேகமாக வந்து நின்றது. கண்ணம்மா, கையில் ரெண்டும் கக்கத்தில் ரெண்டும் கொண்டு வந்து வரிசையில் போட்டாங்க. தெருவில் உள்ள வயசுப் பொண்ணிலிருந்து பாட்டிவரையிலும் வந்தாச்சு.
வானம் மேகம் மூட்டத்துடன் கருத்து நின்றது. ஈரக் காற்றுடன் புயல் அடிப்பதுபோல சுழன்று அடித்தது. வாகனத் தண்ணியும் மழைத்தண்ணியும் சேர்த்துப் பிடித்தார்கள். சூரப்பட்டி இதுவரையிலும் இப்படிப்பட்ட மழையைக் கண்டதில்லை. காற்று நின்றதனால் பேய்மழையாகப் பெய்தது.
எல்லோரும் காளியம்மன் கோவிலுக்கள் நின்று பேசிய பேச்செல்லாம் சத்தியம் செய்தது போல இருந்தது. “ஆற்றில் மணல் அள்ளியதால் எவ்வளவு மழைபெய்தாலும் தண்ணீ தேங்குவதில்லை” இது ஆப்பக்கடை அன்னம் ஊருக்கு வர்ற வழியிலே இருந்த மரங்களை எல்லாம் ரோட்டுக்காக வெட்டியாச்சு.
மணியகாரர் கருப்பணன் ஆற்றுப்படுகையில் என்னென்னமோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ………. என்ன சனியனோ ஊரத் தொடச்சிட்டாங்க.
அரசு மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி மாலதி மரங்களை நிறைய நடணும். என்ன மரங்கன்னு கேளுங்க…. பூவரசு, மகிழம், ஆலம், அரசு, மாமரம், வேம்பு இது பூரா பூமியின் வெப்பத்தைப் பெரிதும் குறைக்குமாம்… எங்க சயின்ஸ் டீச்சர் சொன்னாங்க…
இந்த மரம் நடுற நல்ல காரியத்தை உடனடியா தொடங்குங்க பூஜை போட்டுறலாம்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
‘தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
Answer:
தண்ணீர் – கந்தர்வன்
முன்னுரை :
“நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்’ முதலிய வரிசையில் “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.
குடிநீரற்ற ஊரின் நிலை :
தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அவ்ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப்பகை, புயல் வந்தால் 3 நாட்கள் வெள்ளக்காடாய் இருக்கும் நான்காவது நாள் தண்ணீரற்ற நிலமாய் மாறி விடும். பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்
பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.
எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.
இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.
அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து இரயில் பெட்டிக்குள் ஏறினர்.
இந்திராவின் கனவு :
அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.
இந்திரா தண்ணீர் பிடித்தல் :
பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள், சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா என்று சலித்துக் கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை.
இன்ஜினின் ஊதல் ஒலி வந்தது அம்மா, சொட்டுத் தண்ணியில்லை என்று முனகியதே ஞாபகம் வந்தது. இன்னும் பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.
இந்திரா எங்கே :
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்த இந்திராவின் தந்தையிடம் இந்திரா வரவில்லை இரயில் போயிருச்சு என்று சொல்லப்பட்டது.
எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.
தாயின் துயரம் :
“எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோ” என அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள்.
தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! தந்தை கேட்டார். பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த. இந்திரா சொன்னாள் பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய.
கதை உணர்த்தும் கருப்பொருள் :
இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21-ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’ எழுதியுள்ளார்.
“சிற்றூரின் தேவைகள் இன்றளவும்
நிறைவு செய்யப்படுவதில்லை.”
முடிவுரை :
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையை கட்டமைப்போம்
மழைநீர் சேகரிப்போம்.”