WELCOME TO SaraNextGen.Com

Chapter 2.6 - Tunaivinaikal - Chapter 2.6 - துணைவினைகள் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 2.6 - Tunaivinaikal - Chapter 2.6 - துணைவினைகள் - 9th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.6 துணைவினைகள்

Detailed Solutions Of Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.6 துணைவினைகள்

Question 1.
பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ………………………………… மொழியாகும்.
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) …………………………………
இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) ………………………………… மொழி தமிழ்.
ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) …………………………………
Answer:
அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) வேறுபடுத்துவது மொழியாகும்.
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) பெற்றிருக்கின்றன.
இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்.
ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) தேடிக் கொண்டிருக்கிறேன்.

Question 2.
கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழதுக.
அ) வேண்டும்
ஆ) பார்
இ) உள்
ஈ) வா
உ) விடு
Answer:
அ) வேண்டும் – ஆசிரியர் கூறும் அறிவுரையைக் கேட்க வேண்டும்.
ஆ) பார் – தந்தை சொன்னது சரியா தவறா எண்ணிப்பார் .
இ) உள் – மனதில் உள்ளதைச் சொல்க.
ஈ) வா – நேரில் வா பேசிக்கொள்வோம்.
உ) விடு – தீய பழக்கங்களை விட்டு விடு.

Question 3.
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணை வினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணை வினைகளை இட்டு எழுதுக.
மார்னிங் எழுந்து, பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம்
போட்டு ஸ்கூலுக்குப் போனாள்.
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
Answer:
மார்னிங் எழுந்து, பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம்
போட்டு ஸ்கூலுக்குப் போனாள்.

  • காலையில் எழுந்துவிட்டாள்.
  • பல் துலக்கி முடித்தாள்.
  • சீருடை அணிந்து கொண்டாள்.
  • பள்ளிக்குப் புறப்பட்டுப் போனாள்.

Question 4.
சிந்தனை வினா.
அ) வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளின் பங்கு குறித்துச் சிந்தித்து எழுதுக.
Answer:

ஆ) சந்தையில் காய்கறிகளை வாங்கும்போது உங்களுக்கும் கடைக்காரருக்கும் நடக்கும் உரையாடலைத் துணைவினைகளைப் பயன்படுத்தி எழுதுக.
Answer:
கடைக்காரர் : வாங்க …… நாலுநாளா வரல.
நான் : திருச்சி போயிருந்தேன்.
கடைக்காரர் : போனவாரம் அம்மா வந்திருந்தாங்க.
நான் : வெங்காயம் என்ன விலை? கடைக்காரர் 50 ரூபா. நான் வேணாம். நேற்று சந்தைக்குப் போய் 5 கிலோ வாங்கிப் போட்டேன். அடுத்தவாரம் வாங்கிக்கிறேன்.
கடைக்காரர் : நீங்க 280 ரூபாய்க்கு வாங்கியிருக்கீங்க. (பணம் பெற்றுக் கொண்டவுடன்) (2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு)
நான் :  பக்கத்துக் கடையிலே வாங்கிக் கொடுங்க.
கடைக்காரர் : இருங்க, வாங்கி வரச்சொல்கிறேன்.

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.

Question 1.
Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval
Asnwer:
மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.
பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

Question 2.
Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
Answer:
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.

Question 3.
An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
Answer:
மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.
பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ)
சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.

Question 4.
Just living is not enough …. one must have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson Answer:
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.

பிழை நீக்கி எழுதுக :

Question 1.
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
Answer:
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

Question 2.
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
Answer:
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

Question 3.
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன: Answer:
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

Question 4.
நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
Answer:
நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

Question 5.
சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
Answer:
சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

Question 1.
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
Answer:
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.

Question 2.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
Answer:
நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.

Question 3.
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
Answer:
அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.

Question 4.
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
Answer:
தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன் .

வடிவ மாற்றம் செய்க.

நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க.

நீர்ச்சுழற்சி

மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழைபொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும் ……. இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

வரவேற்பு மடல் எழுதுக:

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
Answer:

சுற்றுச்சூழலைப்பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற கொட்டாம்பட்டி அரசு மேனிலைப் பள்ளியைப் பாராட்டும் விழாவிற்கு வருகை தரும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

பள்ளியை வழி நடத்தி நிர்வாக மேலாண்மை செய்ததோடு பள்ளிக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைப் பராமரித்துப் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வழிகாட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவரையும் பள்ளிக்குழு மாணவர் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன். இன்று சூன் திங்கள் 5ஆம் நாள் சுற்றுச் சூழல் தினம். இவற்றிற்கெல்லாம் மேலாக மாவட்டத்திலேயே நம் பள்ளி கிடைத்தற்கரிய விருதினைப் பெற்ற நாளாகும்.

நம் மாவட்டக் கல்வி அலுவலர் மூன்றாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார். இவ் அரசுப்பள்ளி அகன்ற வளாகம்: குடிநீரும் கிடைக்கிறது. நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. இருக்கின்ற மரங்களுக்கு தண்ணீர் விட்டுப் பசுமை ஆக்குங்கள் பலன் கிடைக்கும் என்றீர்கள்! உங்கள் வாக்கு நிறைவேறியது. எங்கள் கனவு நிகழ்ந்தேறியது. இந்நேரத்தில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பொருள் உதவி செய்தளித்த பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி.

எங்கள் பள்ளி வேளாண்மைப் பிரிவு மாணவர்களின் உதவியும் மாணவர்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது. மாவட்டக் கல்வி அலுவலர்களின் அரசு நிதியுதவி கிடைத்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி!

இவண்,
க. அன்பரசன்,
பள்ளிக்குழு மாணவர் தலைவர்,
அரசு மேனிலைப் பள்ளி, கொட்டாம்பட்டி.

நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் – பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். – கவிமணி
Answer:

இலக்கிய நயம் பாராட்டுதல்

ஆசிரியர் குறிப்பு :
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை , 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

திரண்ட கருத்து :
இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மையக்கருத்து :
ஆறு மலை உச்சிகளில் இருந்து புறப்பட்டு ஓடைகளில் பொங்கிட ஓடிவந்தேன் என்று ஆற்றின் வரலாற்றை வரிசையாகப் புலப்படுத்துகிறார்.

எதுகை நயம் :
சீர்தோறும் அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும். எதுகை நயத்தை இனிமையாகப் பாடுகிறார் கவிமணி.

சான்று
கல்லும் …. எல்லை
ஏறாத …… ஊறாத

மோனை நயம் :
சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :
ஏறாத – ஏறி
ஊறாத – ஊற்றிலும் உட்புகுந்தேன்
ஓடைகள் – ஓடி வந்தேன்.

சொல் நயம் :
‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்

குதித்து வந்தேன்
கடந்து வந்தேன்
தவழ்ந்து வந்தேன்
ஏறி வந்தேன்
நிரப்பி வந்தேன்
உட்புகுந்தேன்
ஓடி வந்தேன்.

ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது.

இயைபு :
இச்செய்யுளின் ஈற்றடிகளில் ‘தேன் தேன்’ என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

நிறைவுரை :
கரைபுரண்டு ஓடிவரும் ஆற்றின் வெள்ளப் பெருக்கை அழகிய கவியுள்ளத்தோடு நம் கண் முன்னே விரியச் செய்துவிடுகிறார், கவிமணி.

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா : ஆற்றங்கரையோரம் – ஆறு / கரை / ஓரம்
அ) கடையெழுவள்ளல்கள்
ஆ) எடுப்பார் கைப்பிள்ளை
இ) தமிழ்விடு தூது
ஈ). பாய்மரக்கப்பல்
உ) எட்டுக்கால்பூச்சி
Answer:
அ) கடையெழுவள்ளல்கள் – கடை / எழு / வள்ளல்
ஆ) எடுப்பார் கைப்பிள்ளை – எடுப்பார் / கை / பிள்ளை
இ) தமிழ்விடு தூது – தமிழ்/விடு / தூது
ஈ). பாய்மரக்கப்பல் –  பாய் / மரம் / கப்பல்
உ) எட்டுக்கால்பூச்சி – எட்டு / கால் / பூச்சி

அகராதியில் காண்க.
Answer:

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.
.கா : அரிசி போடுகிறேன்.
Answer:
புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
1. மழை பெய்தது.
2. வானவில்லைப் பார்த்தேன்.
3. குழந்தை சிரித்தது.
4. எறும்புகள் போகின்றன.
5. படம் வரைந்தான்.
Answer:
1.
மழை பெய்தது.
மாலையில் மழை பெய்தது.
நேற்றுக் மாலையில் மழை பெய்தது.
நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.
நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.
நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.

2. வானவில்லைப் பார்த்தேன்.
மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

3. குழந்தை சிரித்தது.
தொட்டிலில் குழந்தை சிரித்தது.
தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.
அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.
அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.
அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.
அழுத குழந்தை தொட்டிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

4. எறும்புகள் போகின்றன.
எறும்புகள் போகின்றன.
எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.
எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன.
சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.
அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

5. படம் வரைந்தான்.
படம் வரைந்தான். அவன் அழகாக வரைந்தான்.
விலங்குகளின் படங்களை வரைந்தான்.
இயற்கையைப் படம் வரைந்தான்.
இயற்கை மரங்களைப் படமாக வரைந்தான்.
படிக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.

வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக :
முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

எ.கா : பார்த்தேன் (எழுதிப்
1. எழுதிப் பார்த்தேன்
2. தடுக்கப் பார்த்தேன்
3. கொடுத்துப் பார்த்தேன்
4. ஓடப் பார்த்தேன்

ஆ) நடந்தான்
1. பார்த்து நடந்தான்
2. கேட்டு நடந்தான்
3. வாங்கி நடந்தான்
4. சிரித்து நடந்தான்

இ) சேர்ந்தார்
1. வந்து சேர்ந்தார்
2. போய்ச் சேர்ந்தார்
3. நடந்து சேர்ந்தார்
4. ஓய்ந்து சேர்ந்தார்

ஈ) அமைத்தோம்
1. பார்த்து அமைத்தோம்
2. கண்டு அமைத்தோம்
3. கேட்டு அமைத்தோம்
4. சேர்த்து அமைத்தோம்

வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.
வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு. எ.கா : வினையடி – வை

Answer:

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Answer:

மூவறிவுடைய எறும்பே
ஆறு அறிவுடையவனுக்கு
அறிவு புகட்டுகிறாய்!
உன் எடையைக் காட்டிலும்
எட்டு மடங்கு எடையைத் தூக்கிச் செல்கிறாயே!
நீ ஊர்ந்து செல்லச் செல்ல
கல் கூடத் தேயுமாமே?
மனிதப் பண்புகளின் மகத்துவத்தை
உன்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்டோம்.

செயல்திட்டம்

கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பில் உள்ள காணொலியைக் கண்டு அது குறித்த உங்கள் கருத்துகளை இருபக்க அளவில் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.

நிற்க அதற்குத்தக….

என் பொறுப்புகள் …

அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
ஈ) ………………………………………………………………………………………………………………………………………………………………………………
உ) ………………………………………………………………………………………………………………………………………………………………………………
ஊ) ………………………………………………………………………………………………………………………………………………………………………………
Asnwer:
அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
ஈ) வெற்றுக் காகிதங்களைச் சுருட்டி வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திலும்
போடமாட்டேன்.
உ) பள்ளி வளாகத்துக்குள்ளிருக்கும் மரங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்
ஊ) ஆசிரியர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் மதிப்புடன் நடந்து கொள்வேன்.

கலைச்சொல் அறிவோம்
குமிழிக் கல் – ………………………….
நீர் மேலாண்மை – ………………………….
பாசனத் தொழில்நுட்பம் – ………………………….
வெப்ப மண்டலம் – ………………………….
Asnwer:
குமிழிக் கல் – Conical Stone
நீர் மேலாண்மை – Water Management
பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
வெப்ப மண்டலம் – Tropical Zone

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக …………
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்………………..
அ) வந்தான், வருகிறான்
ஆ) வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான், வருவான்
ஈ) வருவான், வரமாட்டான்
Answer:
ஆ) வந்துவிட்டான், வரவில்லை