WELCOME TO SaraNextGen.Com

Chapter 8.2 - Ovvoru pullaiyum - Chapter 8.5 - செவ்வி - 11th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 8.2 - Ovvoru pullaiyum - Chapter 8.5 - செவ்வி - 11th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

 Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் - Text Book Back Questions and Answers

குறுவினா

Question 1.
“நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்” – தொடைநயங்களை எடுத்தெழுதுக.
Answer:

  • அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றி வருவது, மோனை. – (நீளும், நீளாத)
  • இரண்டாம் அடியில் ‘நீளாத – நெஞ்சம்’ எனச் சீர்மோனை அமைந்துள்ளது.
  • அடி இயைபு (தொடரும், படரும்) என்னும் தொடைகள், இவ்வடிகளில் நயம்பட அமைந்துள்ளன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
யாருடைய என்ன தொடர், இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது?
Answer:
மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

Question 3.
இன்குலாப் எவ்வாறு வாழ்ந்தார்?
Answer:
‘தம் எழுத்துகள், எளிய மக்களுக்கானவை’ என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைகளிலும் நின்று, இன்குலாப் வாழ்ந்தார்.

Question 4.
‘இன்குலாப்’ இயங்கிய தளங்கள் யாவை?
Answer:
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் விரிவான தளங்களில் இன்குலாப் இயங்கினார்.

சிறுவினா

Question 1.
இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
Answer:

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு.
  • ஆனால், நீளாத கைகளிலும், நெஞ்சத்தைப் படரவிட வேண்டும்.
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது.
  • அது, எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை, இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
தாம் எவற்றை எல்லாம் அழைக்க விரும்புவதாக இன்குலாப் கூறுகிறார்?
Answer:

  • இன்குலாப், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்.
  • பறவைகளோடு சேர்ந்து, எல்லைகளைக் கடந்து பறக்க ஆசைப்படுகிறார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும்கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.

Question 3.
சமயம் கடந்து மானுடம் கூடவேண்டுமென்பதை இன்குலாப்வழி விளக்குக.
Answer:
போதி மரத்தின் நிழல், சிலுவை , பிறை ஆகியவை சமத்துவம் என்னும் பெருவெள்ளத்தில் கலந்திட வேண்டும். உலகின் எம்மூலையில் விசும்பல் கேட்டாலும், எல்லார் செவிகளிலும் எதிரொலிக்க வேண்டும். கூண்டில் அடைபட்ட பறவை, சிறகு ஒடிந்தால், நம் சிறகிலும் குருதி வடிய வேண்டும்.

இவ்வகையில் சமயம் கடந்து மனித இனம் சேர்ந்திட வழி ஏற்பட வேண்டும். மூடி மறைக்காத முகங்களில் விழித்து, ‘மனிதம்’ என்னும் பொதுத்தன்மையைப் பாடவேண்டும் என, இன்குலாப் விரும்புகிறார்.

Question 4.
கவிஞர் இன்குலாப் குறித்து அறிவன யாவை?
Answer:
‘இன்குலாப்’ என்னும் புனைபெயரில் ‘சாகுல் அமீது’, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

இன்குலாப் கவிதைகள், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் மரணத்திற்குப்பின், இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல்,  கொடையாக அளிக்கப்பட்டது.

இலக்கணக்குறிப்பு

கல்லையும் மண்ணையும் – எண்ணும்மை
சொல்லி – வினையெச்சம்
விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
சமத்துவப்புனல் – உருவகம்

உறுப்பிலக்கணம்

1. தெரிந்த – தெரி + த் (ந்) + த் + அ
தெரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அழைப்பேன் – அழை + ப் + ப் + ஏன்
அழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

3. கடந்து – கட + த் (ந்) + த் + உ
கட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

4. கடப்பேன் – கட + ப் + ப் + ஏன்
கட – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு – பறவைகள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (டவைகளோடு)

2. சுவரில்லாத – சுவர் + இல்லாத
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயலாத (சுவரில்லாத)

3. சமத்துவப்புனல் – சமத்துவம் + புனல்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒரு வும் ஆகும்” (சமத்துவ + புனல்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சமத்துவப்புனல்)

பலவுள் தெரிக

Question 1.
கூவும் குயிலும், களையும் காகமும் – தொடரில் இடம்பெற்ற மரபு ……………….
அ) பெயர்மரபு
ஆ) வினைமரபு
இ) ஒலிமரபு
ஈ) இவை மூன்றும்
Answer:
ஆ) வினைமரபு

கூடுதல் வினாக்கள்

Question 2.
சாகுல் அமீது) என்னும் இயற்பெயரை உடையவர் ………………..
அ) ருதேவ்
ஆ) மீரான் சாகிப்
இ) இன்குலாப்
ஈ) அப்துல் வகாப்
Answer:
இ) இன்குலாப்

Question 3.
இன்குலாபின் கவிதைகள், முழுமையாக ……………….. என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) நேயர் விருப்பம்
Answer:
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

Question 4.
மரணத்திற்குப்பின் இன்குலாப் உடலை அவர் விருப்பப்படி ……………….. அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.
அ) சென்னை
ஆ) தஞ்சை
இ) மதுரை
ஈ) செங்கை
Answer:
ஈ) செங்கை